உபதேச ரத்தின மாலை – பாசுரம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 2

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி ஏழ் பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து

 

மூன்றாம் பாசுரம். தன் திருவுள்ளத்தை ஸமாதானம் செய்த பிறகு, பாசுரங்களை அருளிச்செய்வதாகத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே அமங்களங்கள் போகும்படியாக மங்களாசாஸனத்துடன் தொடங்குகிறார்.    

ஆழ்வார்களுக்குப் பல்லாண்டு. அவர்களின் அருளிசெயல்களான திவ்ய ப்ரபந்தங்களுக்குப் பல்லாண்டு. ஆழ்வார்கள் வழியில் வந்தவர்களும், எந்தக் குறையும் இல்லாதவர்களுமான நம் ஆசார்யர்களின் அனைத்துலகுக்கும் உஜ்ஜீவனத்தைப் பெற்றுக்கொடுக்கும் நல்வார்த்தைகளுக்கும் பல்லாண்டு. இவர்கள் எல்லாருக்கும் ஆதாரமான, சிறந்ததான வேதங்களுக்குப் பல்லாண்டு.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment