உபதேச ரத்தின மாலை – பாசுரம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< தனியன்

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து 

முதல் பாசுரம். இப்பாசுரத்தில் மாமுனிகள் தன்னுடைய ஆசார்யனை வணங்கி, தான் இந்த ப்ரபந்தத்தை அருளிச்செய்யும் குறிக்கோளைத் தெளிவாக வெளியிடுகிறார்.

என்னுடைய ஸ்வாமியான, ஞானத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையின் இனிய அருளாலே எனக்குக் கிடைத்த உபதேச க்ரமத்தை, நன்றாக ஆராய்ந்து, எனக்குக் காலத்தால் பிற்பட்டவர்களும் நன்றாகக் கற்றுத் தெளிவு பெறும்படிக்கு, பொருந்திய பெருமைகளைக் கொண்ட வெண்பா என்னும் கவியிலே வைத்து, உபதேசமாகப் பேசுகின்றேன்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “உபதேச ரத்தின மாலை – பாசுரம் 1”

Leave a Comment