பூர்வ திநசர்யை – 6 – ம்ருநாளதந்து

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 6-ஆம் பாசுரம்

म्रिणाल तन्तुसन्तान सन्स्थन धवलत्विषा |
शोभितम् यज्ञसूत्रेण नाभि बिम्ब सनाभिना ||

ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா |
சோபிதம் யக்யஸூத்ரேண நாபி பிம்ப ஸநாபிநா ||

பதவுரை:  ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா – தாமரைத்தண்டிலுள்ள நூல்களின் திரண்ட தொடர்ச்சியினுடைய உருவம் போன்ற வெண்மையான காந்தியையுடையதும், நாபி பிம்ப ஸநாபிநா – வட்ட வடிவமான நாபியின் ஸமான தேசத்தையுடையதுமான (=நாபிதேசம் வரையில் தொங்குகின்றதுமான) யஜ்ஞஸூத்ரேண – யஜ்ஞோபவீதத்தினால். சோபிதம் – விளங்குமவருமாகிய

கருத்துரை: திருமார்பிலுள்ள யஜ்ஞோபவீதத்தை வருணிக்கிறார் இதனால். ‘புத்தம் புதிய நூல்களால் நிருமிக்கப்பட்டதும் வெண்மை நிறமுள்ளதுமான பூணூலை அணிய வேண்டும்’ என்ற தத்தாத்ரேயரின் வசனம் இங்கு நினைக்கத்தகும். மேதாதிதியும் ‘ஸந்யாஸிகளுக்கு யஜ்ஞோபவீதமும் பற்களும் ஜலபவித்ரமும் ஆகிய இம்மூன்றும் எப்போதும் வெண்மையாக இருக்கக்கடவன’ என்று பணித்தார். ‘உபவீதம் ப்ரஹ்மஸூத்ரம் ஸூத்ரம் யஜ்ஞோபவீதம், யஜ்ஞஸூத்ரம் தேவலக்ஷ்யம் என்ற ஆறும் பூணூலின் பெயர்கள்’ என்றார்கள் மஹரிஷிகள். ‘யன்ஜ்ஞஸூத்ரேண’ என்ற ஒருமையினால் ஸந்யாஸிகளுக்கு மூன்றுவடம் கொண்ட ஒரு பூணூல்தான் என்பது குறிக்கப்படுகிறது. ‘ஸந்யாஸிக்கு ஒரே பூணூல், ப்ரஹ்மசாரிக்கு மான்தோலுடன் கூடிய ஒரே பூணூல், க்ருஹஸ்தனுக்கும் வானப்ரஸ்தனுக்கும் (=முதுமையில் மனைவியுடன் வனம் சென்று சேர்ந்து தவம் செய்யுமவனுக்கும்) உத்தரீயத்துக்காக அணியப்படும் ஒரு பூணூலுடன் சேர்ந்து இரண்டு பூணூல்கள் – அதாவது ‘மூன்று’ என்று வ்யாஸரும் பரத்வாஜரும் அறுதியிட்டனர். இங்கு ஸந்யாஸிக்கு ஒரே பூணூல் என்றது – ஒரு ஒற்றை வடத்துடன் கூடிய – மூன்று வடங்கொண்ட ஒரே பூணூல் என்றபடி. ‘நாபிக்கு மேல் பூணூல் தரித்தவனுக்கு ஆயுள் குறையும், நாபியின் கீழ் தொங்கும்படி தரித்தவனுக்கு தவம் அழியும். ஆகவே நாபியளவாகவே பூணூலணியக்கடவன் என்று மஹரிஷிகள் கூறியதை இங்கு நினைக்கத்தக்கதாகும். (6)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org s
rIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment