உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 59

தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்றில்லாதார்

அன்பு தன் பால் செய்தாலும் அம்புயைகோன் இன்ப மிகு

விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் ஆதலால்

நண்ணார் அவர்கள் திருநாடு  

அறுபதாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக ஸ்ரீவசன பூஷணத்தில் காட்டப்பட்டுள்ள உயர்ந்த அர்த்தமான ஆசார்ய பக்தியை விரிவாக அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில் ஆசார்ய பக்தி இல்லாதவர்களை எம்பெருமான் தானே ஆதரிக்க மாட்டான் என்பதை அருளிச்செய்கிறார்.

தன்னுடைய ஆசார்யனின் திருவடிகளில் ஒருவனுக்கு பக்தி இல்லை என்றால், இவன் திருமகள் கேள்வனான எம்பெருமானிடத்திலே எவ்வளவு பக்தி கொண்டிருந்தாலும், எம்பெருமான் இவனுக்கு இன்பத்துக்கு எல்லை இல்லாத இடமான பரமபதத்திலே இடமளிப்பதற்கு ஆசை கொண்டிருக்கமாட்டான். ஆகையால் இப்படிப்பட்ட ஆசார்ய பக்தி இல்லாதவன் திருநாடான பரமபதத்தைச் சென்றுசேர மாட்டான். எம்பெருமானை அம்புயைகோன் என்று பிராட்டி ஸம்பந்தத்துடன் கூறியிருப்பதால், சேதனர்களின் குற்றங்களை எம்பெருமான் காணாதபடிக்குப் புருஷகாரம் செய்யும் பிராட்டியே அருகில் இருந்தாலும், அவன் ஆசார்ய பக்தி இல்லாதவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று காட்டுவதாகத் தோற்றுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment