உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 59

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 58

சீர் வசன பூடணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால்

தேரிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம் ஆரியர்காள்

என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ

உன்தமக்கு எவ்வின்பம் உளதாம் 

ஐம்பத்தொன்பதாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தில் தனக்கு உள்ள ஆதரத்தை தன்னுடன் ஒத்த புகழுடைய ஆசார்யர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறார்.

ஆசார்யர்களே! ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை நெஞ்சாலே அனுபவித்தாலும் வாக்காலே பேசினாலும், எனக்கு இது எல்லையில்லாத ஆனந்தத்தை அளிக்கிறது. உங்களுக்கு எப்படிப்பட்ட ஆனந்தம் ஏற்படுகிறது? ஆழ்வார்கள் எம்பெருமானை ஆராவமுதமாக அனுபவித்தார்கள். ஆசார்யர்கள் ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும் ஆராவமுதமாக அனுபவித்தார்கள். மாமுனிகளோ ஸ்ரீவசன பூஷணத்தையே ஆராவமுதமாக அனுபவிக்கிறார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment