உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 47

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 46

நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு

எஞ்சாமை யாவைக்கும் இல்லையே தம் சீரால்

வைய குருவின் தம்பி மன்னு மணவாள முனி

செய்யுமவை தாமும் சில 

நாற்பத்தேழாம் பாசுரம். நஞ்ஜீயர் முதலான சில ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களை அருளிச்செய்கிறார்.

பட்டரின் சிஷ்யரான வேதாந்தியான நஞ்சீயர் சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளியிருந்தாலும், பெரியவாச்சான் பிள்ளையைப் போல் அனைத்து ப்ரபந்தங்களுக்கும் அருளவில்லை (அப்படி அருளியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே!). பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியாரான, உயர்ந்த திருக்கல்யாண குணங்களை உடைய அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அருளிச்செயல்களிலும் ஏனைய சாஸ்த்ரங்களிலும் கொண்டிருந்த ஆழ்ந்த ஞானத்தால் சில ப்ரபந்தங்களுக்கு அற்புதமான வ்யாக்யானங்கள் அருளியுள்ளார். பொருந்திய பெருமையைக் கொண்ட வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரும் சில வ்யாக்யானங்கள் அருளியுள்ளார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment