உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 46

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 45

பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும் 

தெரிய வியாக்கியைகள் செய்வால் அரிய

அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது

அருளிச் செயலாய்த்தறிந்து

நாற்பத்தாறாம் பாசுரம். வேதத்துக்கு உள்ளது போல் திருவாய்மொழிக்கும் அங்கங்கள் மற்றும் உபாங்கங்களாக மற்றைய ப்ரபந்தங்கள் உள்ளதால், அவற்றுக்கு வ்யாக்யானங்கள் அருளிய மஹநீயர்களைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே பெரியவாச்சான் பிள்ளை செய்தருளிய பேருபகாரத்தைக் கொண்டாடுகிறார்.

நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரான வ்யாக்யானச் சக்ரவர்த்தி என்று கொண்டாடப்படும் பெரியவாச்சான் பிள்ளை மற்ற மூவாயிரம் பாசுரங்களுக்கும் அனைவரும் அர்த்தங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வ்யாக்யானங்களை அருளிச்செய்ததினாலே, ஆழ்ந்த அர்த்தங்களைக்  கொண்ட அருளிச்செயல்களை, இவருக்குப் பிற்பட்ட ஆசார்யர்கள் இவைதான் ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் என்று நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி அமைந்தன. இவரே அருளிச்செயல்களின் அர்த்தங்களைப் பூர்த்தியாகத் தன் ஆசார்யனிடத்திலே கேட்டபடி, அவற்றைத் தான் ஆழ்ந்து அனுபவித்த க்ரமத்திலும், மற்றவர்களுக்கு உபதேசமாகவும் ஆக்கி வைத்த தனிப் பெருமையைக் கொண்டவர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment