உபதேச ரத்தின மாலை – பாசுரம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 1

கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசை உள்ளோர்

பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் மற்றோர்கள்

மாச்சரியத்தால் இகழில் வந்ததென் நெஞ்சே இகழ்கை

ஆச்சர்யமோ தான் அவர்க்கு 

இரண்டாம் பாசுரம். மாமுனிகளின் திருவுள்ளம் “இதை விரும்பாதவர்கள் இதை இகழ மாட்டார்களோ?” என்று கேட்பதாகக் கொண்டு, அத்தாலே நமக்கு ஒரு குறையும் இல்லை என்று தம் திருவுள்ளத்துக்கு விளக்குகிறார்.

ஸத் ஸம்ப்ரதாய விஷயங்களில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள், இவ்வளவு சுருக்கமாகவும் அழகாகவும் உள்ளதே என்று மிகவும் மகிழ்வார்கள். பெரியோர்களிடத்திலே ஸத் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இதைப் பெருமதிப்புடன் கற்பார்கள். இந்த இரு கோஷ்டியிலும் சேராதவர்கள் இதன் மீது பொறாமை கொண்டு இதை இகழ்வார்கள். அது அவர்களுக்கு இயற்கையான குணமே. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. அது கண்டு நாம் வருந்த வேண்டாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment