உபதேச ரத்தின மாலை – தனியன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி
தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத்
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே

இந்தத் தனியனை அருளிச்செய்தவர் மணவாள மாமுனிகளின் முக்யமான சிஷ்யர்களில் ஒருவரான கோயில் கந்தாடை அண்ணன். மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையிடத்தில் நம் பூர்வாசார்யர்களின் உபதேச முறைகளை நன்றாகக் கற்று அவற்றை விடாமல் வாழ்ந்தவர். அப்படிப்பட்ட மாமுனிகள் பேரன்புடன் அந்த விஷயங்களை இந்த ப்ரபந்தத்தின் மூலம் எளிமையாக வெளியிட்டார். இதை நெஞ்சிலே நன்றாக வைத்திருப்பவர்களின் திருவடிகள் நமக்கு புகலிடமாக இருக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment