ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
अन्तस्ताम्यन्रघुपतिरसावन्तिके त्वामदृष्ट्वा |
चिन्ताक्रान्तो वरवरमुने ! चेतसो विश्रमाय ||
त्वन्नामैव श्रुतिसुखमिति श्रोतुकामो मुहुर्मां |
कृत्यैरन्यैः किमिह तदिदं कीर्तयेति ब्रवीति || ८१||
அந்தஸ்தாம் யந் ரகுபதி ரஸாவந்திகே த்வாமத்ருஷ்ட்வா |
சிந்தாக்ராந்தோ வரவரமுநே சேதஸோ விச்ரமாய ||
த்வந் நாமைவ ச்ருதி ஸுகமிதி ச்ரோது காமோ முஹுர்மாம் |
க்ருத்யைரந்யை: கிமிஹ ததிதம் கீர்த்தயேதி ப்ரவீதி || 81.
மனதிற்குள் தபித்துக் கொண்டிருக்கும் இந்த ரகுபதி அருகில் உம்மைக் காணாமல் கவலையுற்றவராக, உள்ளம் ஆறுதலடைய வந்து உமது திருநாமமே காதுக்கு இனிமையானது என்று கேட்க விரும்பியவராக, அடிக்கடி வேறு வ்யாபாரங்களால் என்ன பயன்? அந்தத் திருநாமத்தையே கூறுவாயாக என்று சொல்லுகிறார்.
புங்க்தே நைவ ப்ரதமகபலே யஸ்த்வயா நோப புக்தே |
நித்ரா நைவ ஸ்ப்ருசதி ஸுஹ்ருதம் த்வாம் விநா யஸ்ய நேத்ரே ||
ஹீநோ யேந த்வமஸி ஸலிலோ க்ஷிப்த மீநோப மாந: |
கோஸௌ ஸோடும் வரவரமுநே! ராகவஸ்த்வத் வியோகம் || 82.
ஹே வரவரமுநியே! உம்மால் அநுபவிக்கப் படாத போது முதல் கவளத்தில் எவன் அநுபவிக்கிறதில்லையோ, நண்பனான உம்மை விட்டு எவர் கண்களைத் தூக்கம் தொடுவதில்லையோ எவர் நீர் இல்லாமல் ஜலத்திலிருந்து எடுத்துப் போடப்பட்ட மீன்போல் துடிக்கிறாரோ – உமது பிரிவைப் பொறுக்கவல்ல இந்த ராகவன் யார்?
பத்ரம் மால்யம் ஸலில மபியத் பாணிநோ பாஹ்ருதம் தே |
மாத்ரா தத் தாதபி பஹுமதம் பத்யுரேதத் ரகூணாம் ||
சாகா கேஹம் வரவரமுநே ஸம்மதம் ஸௌரச்ருங்கம் |
பூத்வா வாஸோ மஹதபி வநம் போக பூமிஸ் த்வயா பூத் || 83
ஹே வரவரமுநியே! உமக்குக் கையால் அளிக்கப்பட்ட இலையாகிலும் புஷ்பமாகிலும் ஜலமேயாகிலும் தாயால் அளிக்கப் பட்டதைவிட மேலாக எண்ணப்பட்டது. இது ஸ்ரீராமனுக்கு விளையாடுகிற வீடு மாளிகையாகி பெரிய காடும் உம்முடன் வாழ போக பூமியாகிவிட்டது.
அத்வ ச்ராந்திம் ஹரஸி ஸரஸை ரார்த்ர சாகா ஸமீரை: |
பாதௌ ஸம்வாஹயஸி குருஷே பர்ணசாலாம் விசாலாம் ||
போஜ்யம் தத்வா வரவரமுநே! கல்பயந் புஷ்ப சய்யாம் |
பச்யந் தன்யோ நிசி ரகுபதிம் பாத்தி பத்நீ ஸஹாயம் || 84
ஹே வரவரமுநியே! ஈரமான கிளைகளில் பட்டு வருகின்ற ரஸத்துடன் கூடிய காற்றால் வழி நடந்த ச்ரமத்தைப் போக்குகின்றீர்; பாதங்களைப் பிடிக்கின்றீர்; விசாலமான பர்ணசாலையை அமைக்கின்றீர். உணவை அளித்து இரவில் புஷ்பப் படுக்கையை ஏற்படுத்தி தேவிகளுடனிருக்கும் ஸ்ரீ ராமனைக்கண்டு புண்யசாலியாக ரக்ஷித்துக்கொண்டிருக்கிறீர்.
பச்யந் நக்ரே பரிமித ஹித: ஸ்நிக்த வாக் வ்ருத்தி யோகம் |
ஸத்யச் சோக ப்ரஸமந: பரம் ஸாந்த்வயந்தம் பவந்தம் ||
ப்ராக்ஞயோ ரக்ஜியே ஸகலு பகவாந் தூயமாநோ வநாந்தே |
பஸ்சாத் கர்த்தும் வரவரமுநே ஜாநகீ விப்ரயோகம் || 85
ஹே வரவரமுநியே! சுருக்கமும், ஹிதமும், அன்பும் நிறைந்த, (வார்த்தை) தற்சமயம் சோகத்தைக் குறைக்க வல்ல நல்வார்த்தை கூறுகிற உம்மை எதிரில் பார்த்து அந்த பகவானான ஸ்ரீராமனே காட்டில் வருந்துபவராக இருந்தும் பிராட்டியின் பிரிவை மறைப்பதற்கு அறிஞராக ஆனார்.
ஸுக்ரீவோ ந: ஶரணமிதி ய: ஸூந்ருதம் ப்ராதுரர்த்தே |
பம்பா தீரே பவந ஜநுஷா பாஷிதம் சோபதே தே ||
காலாதீதே கபிகுல பதௌ தேவ தத்ரைவ பஶ்சாத் |
சாபம் தூந்வந் வரவரமுநே யத் பவாந் நிக்ரஹே பூத் || 86
ஹே வரவரமுநியே! தம் ப்ராதாவுக்காக எங்களுக்கு ஸுக்ரீவன் ரக்ஷகனாக வேண்டும் என்று பம்பைக் கரையில் வாயு குமாரனான ஹநுமானுடன் வார்த்தை அழகாக இருக்கிறது. காலம் கடந்தபின் அந்த ஸுக்ரீவனிடத்தில் அங்கேயே பிறகு வில்லை அசைத்துக்கொண்டு அவனை அடக்குவதில் முயற்சி உள்ளவராக ஆனீர்.
யஸ்மின் ப்ரீதிம் மதபிலஷிதாம் ஆர்ய புத்ரோ விதத்தே |
யே நோ பேத: ஸ்மரதி ந பிது:ஸோS தி வீரோ கதிர்மே ||
இத்யேவம் த்வாம் ப்ரதி (ரகுபதி) ப்ரேயஸீ ஸந்திஸந்தீ |
வ்யக்தம் தேவீ வரவரமுநே தத்வமாஹ த்வதீயம் || 87
ஹே வரவரமுநியே! ஸ்ரீ ஸீதாப்பிராட்டி உம்மைப் பற்றிக் கூறுவது: பெருமாள் எனக்குப் ப்ரியமான அன்பை எவரிடத்தில் செலுத்துவாரோ, எவருடன் கூடியபோது தம் தந்தையையும் நினைப்பதில்லையோ, அப்படிப் பட்ட வீரரே எனக்குக் கதி ஆகிறார்– என்று உம்மைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். வெளிப்படையான உமது விஷயமான உண்மையைக் கூறுகிறார்.
பாணைர் யஸ்ய ஜ்வலந வதநைர்வாஹிநீ வாநராணாம் |
வாத்யா வேக ப்ரமிதஜலதஸ் தோம ஸாதர்ம்ய மேதி ||
ஸோ யம் பக்நோ வரவரமுநே மேகநாதச் சரைஸ்தே
ரக்ஷோநாத: கதமிதரதா ஹான்யதே ராகவேண || 88
அக்நியை முகத்தில் வைத்துக்கொண்டுள்ள எவருடைய பாணங்களால் வாநரங்களுடைய சேனை சுழற்காற்றின் வேகத்தால் சுழற்றப்பட்ட மேகக் கூட்டங்களின் ஸாம்யத்தைப் பெறுகிறதோ அப்படிப்பட்ட இந்த்ரஜித் உம்மால் கொல்லப்பட்டான். இல்லாவிட்டால் ராமனால் எப்படி ராவணன் கொல்லப்படுவான்?
ப்ருத்வீம் பித்வா புந ரபி திவம் ப்ரேயஸீ மச்னுவானாம் |
த்ருஷ்ட்வா ஸ்ரீமத் வதன கமலே தத்த த்ருஷ்டி: ப்ரஸீதந் ||
ப்ரேமோ தக்ரை: வரவரமுநே ப்ருத்ய க்ருத்யைஸ் த்வதீயை:
நீத: ப்ரீதிம் ப்ரதி திநமஸௌ சாஸி தாநை ருதாநாம். 89
ஹே வரவரமுநியே! மறுபடி பூமியைப் பிளந்துகொண்டு ஸ்வர்கத்தை அடைகின்ற காதலியைப் பார்த்துக்கொண்டு ஒளி வீசுகின்ற முகத் தாமரையைப் பார்த்துக்கொண்டு அன்பு நிறைந்த உமது அடிமைக் கார்யங்களால் அரக்கர்களுக்கு சிக்ஷகரான இந்த ஸ்ரீராமர் தினந்தோறும் ப்ரீதியை அடைவிக்கப் படுகிறார்.
சோதர்யேஷு த்வமஸி தயிதோ யஸ்ய ப்ருத்யுஸ் ஸுஹ்ருத்வா |
ஸோடவ்யோ பூத் த்வயி ஸஹ சரே ஜாநகீ விப்ரயோக: ||
த்யாயம் த்யாயம் வரவரமுநே! தஸ்ய தே விப்ரயோகம் |
மந்யே நித்ரா மரதி ஜநிதாம் மாநயத்யக்ரஜோயம் || 90
எவருடைய நண்பனோ பணியாளோ அந்த ராமனுக்கு ஸஹோதரர்களில் நீர் அன்புக்குரியவர் ஏனென்றால் நீர் உடன் இருக்கும்போது பிராட்டியின் பிரிவு அவருக்குப் பொறுக்கத் தக்கதாக இருந்தது. ஹே வரவரமுநியே! உமது பிரிவை நினைத்து நினைத்து வெறுப்பாலுண்டான நித்ரையாக இந்த மூத்த ஸஹோதரர் கௌரவிக்கிறார்.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org