யதிராஜ விம்சதி – ச்லோகம் – 16

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 15                                                                                                                      ச்லோகம் 17

ச்லோகம் 16

शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्द्यया यतीन्द्र ! ।
त्वद्दासदासगणनाचरमावधौ यः तद्दासतैकरसताSविरता ममास्तु ॥ (16)

ஸப்தாதி போகவிஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர ! |
த்வத்தாஸதாஸகணநாசரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து || (16)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே, அஸ்மதீயா – அடியேனுடையதான, ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய ருசி: – ஆசையானது, பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால், நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக, (மேலும்) : – எந்த பாக்யஸாலியானவன், த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய, தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது, சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில், பவதி – இருக்கிறானோ, தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில், ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது, அவிரதா – நித்யமாக , பவத்தயயா – தேவரீருடைய தயையினால், மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.

கருத்துரை:- இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது. இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருளவேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால். இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும், யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ அவருக்குத் தொண்டு செய்யவேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய இவ்விரண்டு பலன்களையும் முறையே இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக்கொண்டாராயிற்று. எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால் அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது. எம்பெருமானாருடைய க்ருபையோவெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரையேற்றும். அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும். எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர்நம்பிகள் தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது. இவ்விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத்தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது. பகவானுடைய தயை அடியேனிடம் வேலைசெய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment