Category Archives: varavaramuni Sathakam

வரவரமுனி சதகம் 10

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 9

Image result for manavala mamunigal vaanamaamalai

मुग्धालोकं मुखमनुभवन्मोदते नैव देव्याः |
स्निग्धालापं कपिकुलपतिं नैव सिञ्चत्यपाङ्गैः ||
त्वामेवैकं वरवरमुने ! सोदरं द्रष्टुकामो |
नाथो नैति क्वचिदपि रतिं दर्शने यूथपानाम् || ९१॥

முக்தாலோகம் முகமநுபவந் மோததே நைவ தேவ்யா: |
ஸ்நிக்தா லாபம் கபிகுலபதிம் நைவ ஸிஞ்ச்யத்யபாங்கை:||
த்வாமேவைகம் வரவரமுநே ஸோதரம் த்ரஷ்டு காமோ:|
நாதோ நைதி க்வசிதபி ரதிம் தர்சநே யூதபாநாம் ||  91

அழகிய பார்வையுடன் கூடிய தேவியான பிராட்டியின் முகத்தை அநுபவித்து ஸந்தோஷிப்பதில்லை. அன்பு நிறைந்த பேச்சாளரான ஸுக்ரீவனையும் கடாக்ஷங்களால் நனைப்பதில்லை. ஹே வரவரமுநியே! உம்மை ஒருவரையே, ஸஹோதரனை, பார்க்க விரும்பி முதலிகள் தலைவரான ஸ்ரீராமன் ஓரிடத்திலும் மகிழ்ச்சியைப் பெறுவதில்லை.

एवं देवः स्वयमभिलशन्नेष ते शेषवृत्तिं |
जज्ञे भूयस्त्वदनुजगदानन्दनो नन्दसूनुः ||
दूरिभावं वरवरमुने ! दुस्सहं पूर्वजस्ते |
धन्यस्त्यक्त्वा धयतु न चिराच्छाक्षुषा राघवस्त्वाम् || ९२॥

ஏவம் தே ஸ்வயமபிலஷந் நேஷ தே ஸேஷவ்ருத்திம் |
ஜஃனே பூய: ததநு ஜகதாநந்தநோ நந்த ஸூநு: ||
தூரீ பாவம் வரவரமுநே துஸ்ஸஹம் பூர்வஜஸ்தே |
தந்யஸ் த்யக்த்வா தயது ந சிராத் சக்ஷுஸா ராகவஸ் த்வாம் ||  92

இந்த மாதிரி தேவரான ஸ்ரீராமர் தாமாகவே செய்ய விரும்பி மறுபடி உலகத்துக்கு ஆனந்தத்தை அளிக்கவல்ல நந்தகுமாரனாக ஆனார். ஹே வரவரமுநியே! பொறுக்க முடியாத இந்தப் பெருமையை உமது தமையனான ஸ்ரீராமர் விட்டுக் கண்ணால் உம்மை மகிழ்விக்கட்டும்.

पारम्पायं प्रणयमधुरे पादपद्मे त्वदीये |
पश्येयं तत्किमपि मनसा भावयन्तं भवन्तम् ||
कामक्रोधप्रकृतिरहितैः काङ्क्षितत्वत्प्रसादैः |
सद्भिस्साकं वरवरमुने ! सन्ततं वर्तिषीय || ९३॥

பாயம் பாயம் ப்ரணய மதுரே பாத பத்மே த்வதீயே |
பச்யேயம் தத் கிமபி மநஸா பாவயந்தம் பவந்தம் ||
காமக்ரோத ப்ரக்ருதி ரஹிதை: காங்க்ஷித த்வத் பிரஸாதை: |
ஸத்பிஸ்ஸாகம் வரவரமுநே! ஸந்ததம் வர்த்திஷீய || 93

அன்பு கனிந்த உமது திருவடித் தாமரையைப் பருகிப் பருகி, எதையோ மனத்தால் நினைத்துக்கொண்டிருக்கும் உம்மைப் பார்க்க வேண்டும். காமத்துக்கும் கோபத்துக்கும் ப்ரக்ருதியில்லாத, வேண்டிய உமது அருள் பெற்ற நல்லவர்களோடு எப்போதும் இருக்கவேண்டும், வரவரமுநியே!

पश्यत्वेनं जनकतनया पद्मगर्भैरपाङ्गैः
प्रारब्धानि प्रशमयतु मे भागधेयं रघूणाम् ||
 आविर्भूयादमलकमलोदग्रमक्ष्णोः पदं मे-
दिव्यं तेजो वरवरमुने ! देवदेव ! त्वदीयम् || ९४॥

பச்யத்வேநம் ஜநகதநயா பத்மகர்பைரபாங்கை: |
ப்ராரப்தாநி ப்ரஸமயது மே பாகதேயம் ரகூணாம் ||
ஆவிர் பூயா தமல கமலோ தக்ர மக்ஷ்னோ: பதம் மே |
திவ்யம் தேஜோ வரவரமுநே  ஸந்ததம் வர்த்திஷீய || 94

என்னைப் பிராட்டி குளிர்ந்த கடாக்ஷங்களால்  பார்க்கவேண்டும். ஸ்ரீராமர் எனது ப்ராரப்த பாபங்களை ஒழிக்கட்டும். வரவரமுநியே! எனது கண்களுக்கு உமது நிர்மலமான தாமரை  போன்ற ஒளி எதிரில் எப்போதும் தோன்றுவதாக.

रामः श्रीमान्रविसुतसखो वर्द्धतां यूथपालैः
देवीं तस्मै दिशतु कुशलं मैथिली नित्ययोगात् ||
सानुक्रोशो जयतु जनयन् सर्वतस्तत्प्रसादं |
सौमित्रिर्मे स खलु भगवान्सौम्यजामातृयोगी || ९५॥

ராம: ஸ்ரீமாந் ரவி ஸுத ஸ கோ வர்த்ததாம் யூத பாலை: |
தேவீ தஸ்மை திசது குசலம் மைதிலீ நித்ய யோகாத் ||
ஸாநுக்ரோஶோ ஜயது ஜநயந் ஸர்வதஸ் தத் ப்ரஸாதம் |
ஸௌமித்ரிர் மே ஸகலு பகவாந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ || 95

ஸுக்ரீவ நண்பனான அந்த ஸ்ரீராமர் வாநர முதலிகளுடன் ஓங்கட்டும். நித்யம் உடனிருந்து பிராட்டி க்ஷேமத்தை அளிக்கட்டும். எல்லா வகையிலும் அவர் அருள் கூடிய ஸுமித்ரா புத்ரரான (உமக்கு) மணவாள மாமுனிகளுக்கு வெற்றி உண்டாகட்டும்.

यस्मादेतद्यदुपनिषदामप्रमेयं प्रमेयं |
कुर्वाणस्तत्सकलसुलभं कोमलैरेव वाक्यैः ||
नीरोगस्त्वं वरदगुरुणा नित्ययुक्तो धरित्रीं |
पाहि श्रीमन् ! वरवरमुने ! पद्मयोनेर्दिनानि || ९६॥

யஸ்மா தேதத் யதுப நிஷாதாம் அப்ரமேயம் ப்ரமேயம் |
குர்வாணஸ் தத் ஸகல ஸுலபம் கோமளைரேவ வாக்யை: ||
நீரோகஸ்த்வம் வரத குருணா நித்ய யுக்தோ தரித்ரீம் |
பாஹி ஸ்ரீமந் வரவரமுநே பத்ம யோநேர் திநாநி || 96

ஹே ஸ்ரீமானான வரவரமுநியே! எதிலிருந்து இந்த உலகம் ஏற்பட்டதோ, எது உபநிஷத்துகளுக்கும் எட்டாத விஷயமோ அதை ம்ருதுவான வார்த்தைகளால் எல்லாருக்கும் எளிதாக்கிக்கொண்டு நீர் ரோகமற்றவராக வரத குருவுடன் நித்யமாகச் சேர்ந்துகொண்டு இந்த பூமியை ப்ரஹ்மாயுள் உள்ளவரை பாலநம் செய்வீராக.

अपगतमतमानैः अन्तिमोपाय निष्टैः
अधिगतपरमार्थैः अर्थकामान्  अपेक्षैः ||
निखिलजनसुहृद्भिः निर्जित क्रोध लोभैः
वरवरमुनि भृत्यैः अस्तु मे नित्य योगः || ९७॥

அபகத கதமாநைரந்திமோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தைரர்த்த காமாநபேக்ஷை: ||
நிகில ஜந ஸுஹ்ருத்பி: நிர்ஜித க்ரோத லோபை:
வரவரமுநி ப்ருத்யை ரஸ்து மே நித்ய யோக:|| 97

மதம் மானம் என்று சொல்லக்கூடிய துர்க்குணங்களற்றவர்கள், சரமோபாயம் என்று சொல்லக்கூடிய ஆசார்ய நிஷ்டை உள்ளவர்கள், உண்மைப் பொருள் அறிந்தவர்கள், அர்த்தம் காமம் இவற்றை வெறுத்தவர்கள், எல்லா ஜனங்களுக்கும் நண்பர்களாயுள்ளவர்கள், –இவர்களுடன் எனக்கு ஸம்பந்தம் நித்யமாக இருக்கவேண்டும்.

वरवरमुनिवर्य चिन्तामहन्तामुषम् तावकीम्-
अविरतमनुवर्तमानानुमानावमानानिमान्  ||
निरुषधिपदभक्तिनिष्ठाननुष्ठाननिष्ठानहं |
प्रतिदिनमनुभूय भूयो न भूयासमायासभूः || ९८॥

வரவரமுநிவர்ய சிந்தா மஹம் தாம் உஷம் தாவகீம்
அவிரதமநுவர்த்த மாநா நமாநா வ மாநா நிமாந் ||
நிரவதி பத பக்தி நிஷ்டாந் அநுஷ்டா நநிஷ்டாநஹம்
ப்ரதி திந மநு பூய பூயோ ந பூயாஸ மாயா ஸ பூ: || 98

வரவரமுநியே! உமது விஷயமான சிந்தையை எப்போதும் அநுபவித்துக்கொண்டு ஓயாது அஹங்காரம் அவமானம் இவைகளை விட்டு உமது திருவடிகளில் பக்தி செலுத்துகின்ற அநுஷ்டான நிஷ்டர்களான இந்த பாகவதர்களை தினந்தோறும் அநுபவித்துக்கொண்டு மறுபடியும் ச்ரமத்துக்குக் காரணம் ஆகாதவனாக ஆகக் கடவேன்.

वरवरमुनिवर्यपादावुपादाय सौदामिनी-
विलसतिविभवेषु वित्तेषु पुत्रेषु मुक्तेषणाः ||
कतिचन यतिवर्यगोष्ठीबहिष्ठीकृतष्ठीवना |
निजहति जनिमृत्युनित्यानुवृत्या यदत्याहितम् || ९९॥

வரவரமுநிவர்ய பாதாவுபாதாய ஸௌதாமிநீ
விலஸித விபவேஷு வித்தேஷு புத்ரேஷு முக்தேஷணா: ||
கதி ச நயதி வர்ய கோஷ்டீ பஹிஷ்டீ க்ருதஷ்டீ வநா:
விஜஹதி ஜநி ம்ருத்யு நித்யாநுவ்ருத்யாய தத்யாஹிதம் || 99

வரவரமுநியே! உமது திருவடிகளைச் சரணமாக ஏற்று, மின்னல்போல் விளங்குகிற பெருமைகளிலும், தனங்களிலும், புத்ரர்களிடத்திலும் ஆசையை விட்டவர்களுக்கு எம்பெருமானாருடைய கோஷ்டியிலிருந்து கொண்டு சிலர் பிறவி மரணம் இவை தொடர்ந்து வருவதால் ஏற்படும் பயத்தை விடுகிறார்கள்.

निरवधिनिगमान्तविद्यानिषद्यानवद्यशयान् |
यतिपतिपदपद्मबन्धानुबन्धानुसन्धायिनः ||
वरवरमुनिवर्यसम्बन्धसम्बन्धसम्बन्धिनः |
प्रतिदिनमनुभूय भूयो न भूयासमायासभूः || १००॥

நிரவதி நிகமாந்த வித்யா நிஷத்யாந வத்யாசயான் |
யதிபதி பத்ம பந்தாநு பந்தாநு ஸந்தாயிந: ||
வரவர முநிவர்ய ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்தின: |
ப்ரதிதிநமநுபூய பூயோ ந பூயாஸமாயாஸபூ: || 100

எல்லையற்ற வேதாந்த வித்யையைக் கற்றவர்களும், குற்றமற்ற மனம் படைத்தவர்களும், எதிராசருடைய திருவடித்தாமரைகளில் ஸம்பந்தத்தை தினந்தோறும் நினைப்பவர்களும் (ஆன) – ஹே வரவரமுநியே! உமது ஸம்பந்தம் பெற்றவர்களையும் தினந்தோறும் அநுபவித்துக்கொண்டு மறுபடி ஆயாஸத்தை அடைந்தவன் ஆகமாட்டேன்.

यन्मूलमाश्वजमास्यवतारमूलं |
कान्तोपयन्तृयमिनः करुणैकसिन्धोः ||
आसीदसत्सु गणितस्य ममाऽपि सत्ता-
मूलम् तदेव जगदभ्युदयैकमूलम् || १०१॥

யன்மூலமாஸ்வயுஜமாஸ்யவதார மூலம் |
காந்தோ பயந்த்ரு யமிந:கருணைக ஸிந்தோ: ||
ஆஸீத ஸத்ஸுகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம் |
ததேவ ஜகதப்யுதயைக மூலம் || 101

கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு ஐப்பசி மாதத்தில் எந்த மூலம் அவதாரத் திருநக்ஷத்ரம் ஆகிறதோ – அஸத் என்பவைகளில் கணக்கிடப்பட்ட எனக்கு ஸத்தைக்கு அதுவே காரணமாக ஆயிற்று, அதுவே ஜகத்துக்கு க்ஷேம காரணமாகவும் ஆகிறது.

यदवतरनमूलम्  मुक्ति मूलं प्रजानां |
शठरिपुमुनि दृष्ठाम्नाय साम्राज्य मूलम् ||
कलिकलुष समूलोन्मूलनेमूलमेतत् |
स भवतु वरयोगी नः समर्तार्थमूलम् || १०२॥

யதவதரணமூலம் முக்தி மூலம் ப்ரஜானாம் |
சடரிபு முநி த்ருஷ்டாம்நாய ஸாம்ராஜ்ய மூலம் ||
கலி கலுஷ ஸமூலோன் மூலனே மூலமேதத் |
ஸ பவது வரயோகீ ந: ஸமர்த்தார்த்த மூலம் || 102

எந்த வரவரமுநி அவதாரத் திருநக்ஷத்ரமான மூலமானது ப்ரஜைகளுடைய முக்திக்கு காரணமாகவும், நம்மாழ்வாருடைய திவ்ய ஸூக்தியான ஸாம்ராஜ்யத்துக்கு மூலமாகவும் கலியுகத்தால் ஏற்பட்ட பாபத்தை வேருடன் களையக்  கூடியதாகவும் இருக்கிறதோ அப்படிப்பட்ட மணவாளமாமுனிகள் நமக்கு எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிறார்.

मूलं शठारिमुखसूक्तिविवेचानायाः |
कूलं कवेरदुहितुस्समुपागतस्य ||
आलम्बनस्य मम सौम्यवरस्य जन्म |
मूलं विभाति सतुलं वितुलश्च चित्रम् || १०३॥

மூலம் சடாரி முக ஸூக்தி விவேசநாயா: |
கூலம் கவேரதுஹிது: ஸமுபாகதஸ்ய ||
ஆலம்பநஸ்ய மம ஸௌம்ய வரஸ்ய ஜந்ம |
மூலம் விபாதி ஸதுலம் விதுலம் ச சித்ரம் || 103

ஆழ்வாருடைய திருமுகத்திலுதித்த வாக்குகளைப் பரிசீலிப்பதற்குக் காரணமாயும் காவேரி நதியின் கரையை அடைந்த எனது ஆலம்பனமான ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய அவதாரமான மூல திருநக்ஷத்ரம் துலா மாதத்துடன் கூடி நிகரற்றதாக, ஆச்சர்யமாக இருக்கிறது.

अनुदिनमनवद्यैः पद्यबन्धैरमीभिः –
वरवरमुनितत्वं व्यक्तमुद्धोषयन्तम् ||
अनुपदमनुगच्छनप्रमेयः श्रुतीनाम्-
अभिलषितमशेषं सयते  शेषशायी || १०४॥

அநுதிநமநவத்யை: பத்ய பந்தைரமீபி: |
வரவரமுநி தத்வம் வ்யக்த முத்கோஷயந்தம் ||
அநுபதமநுகச்சந் நப்ரமேயம் ச்ருதீநாம் |
அபிலஷித மஸேஷம் ச்ரூயதே ஸேஷசாயீ || 104

தினந்தோறும் குற்றமற்ற இந்த ச்லோகங்களால் மணவாள மாமுனிகளுடைய உண்மையை வெளிப்படையாகப் ப்ரகாசிப்பித்துக்கொண்டு அடிதோறும் பின்தொடர்ந்துகொண்டு வேதங்களுடைய அப்ரமேயமான வஸ்து(வான) ஸேஷ சாயீ கேட்கப் படுகிறார்.

जयतु यशसा तुङ्गं रङ्गं जगत्रयमङ्गलम् |
जयतु सुचिरं तस्मिन्भूमा रमामणिभूषणम् ||
वरदगुरुणा सार्द्धं तस्मै शुभान्यभिवर्द्धयन् |
वरवरमुनिः श्रीमान्रामानुजो जयतु क्षितौ || १०५॥

ஜயது யசஸா துங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம் |
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம் ||
வரத குருணா ஸார்த்தம் தஸ்மை ஸுபாந்யபிவர்த்தயந் |
வரவரமுநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயது க்ஷிதௌ || 105

உயர்ந்த கீர்த்தியையுடைய மூவுலகங்களுக்கு மங்களகரமான ஸ்ரீரங்க திவ்ய தேசம் ஜய சீலமாக இருக்கட்டும். வெகு காலமாக அங்கே  பூ தேவி ஸ்ரீ தேவிகளுக்கு ஆபரணம் போன்ற பெருமாளும் ஜய சீலமாக இருக்கட்டும். வரத குருவுடன் அங்கே சுபங்களை வ்ருத்தி செய்துகொண்டு ஸ்ரீமானான ராமாநுஜ முநியும் மணவாள மாமுநியும் வாழட்டும்.

पठति शतकमेतत् प्रत्यहम् यः सुजानन् |
स हि भवति निधानं सम्पदामीप्सितानाम् ||
प्रशमयति विपाकं पातकानां गुरूणां |
प्रथयति च निदानं पारमाप्तुं  भवाब्धेः || १०६॥

படதி ஸததமேதத் ப்ரத்யஹம் ய: ஸுஜந்மா  |
ஸஹி பவதி நிதாநம் ஸம்பதாமீப்ஸிதாநாம்  ||
ப்ரஸமயதி விபாகம் பாதகாநாம் குரூணாம் |
ப்ரதயதி ச நிதாநம் பாரமாப்தும் பவாப்தே: || 106

எந்த நற்பிறவி எடுத்தவன் இந்த நூறு ச்லோகங்களையும் தினந்தோறும் படிக்கிறானோ அவனுக்கு, இது விருப்பமான ஸம்பத்துகளுக்குக் காரணமாகிறது. பெரிய பாபங்களுடைய பரிபாக தசையைத் தணிக்கிறது. ஸம்ஸார ஸாகரத்தின் கரையைக் கடக்க முக்ய காரணமாகத் திகழ்கிறது.

इति श्री सौम्यजामातृयोगीन्द्रचरणाम्बुजषट्पदैरष्टदिग्गजान्तर्भूतिश्र्चरमपर्वनिष्ठाग्रेसरैः
श्रीदेवराजाचार्यगुरुवर्यैः प्रसादितं श्रीवरवरमुनिशतकं समाप्तम् ||

ஸ்ரீ வரவர முநி சதகம் ஸமாப்தம் |
வரவர முனி சதகம்: தாமல் ஸ்வாமியின் எளிய பொழிப்புரை முற்றியது|
எறும்பியப்பா திருவடிகளே சரணம் | ஸ்ரீ தேவராஜ குரவே நம: |
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் |

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரவரமுனி சதகம் 9

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 8

Image result for manavala mamunigal azhvaar tirunagari

अन्तस्ताम्यन्रघुपतिरसावन्तिके त्वामदृष्ट्वा |
चिन्ताक्रान्तो वरवरमुने ! चेतसो विश्रमाय ||
त्वन्नामैव श्रुतिसुखमिति श्रोतुकामो मुहुर्मां |
कृत्यैरन्यैः किमिह तदिदं कीर्तयेति ब्रवीति || ८१||

அந்தஸ்தாம் யந் ரகுபதி ரஸாவந்திகே த்வாமத்ருஷ்ட்வா |
சிந்தாக்ராந்தோ வரவரமுநே சேதஸோ விச்ரமாய ||
த்வந் நாமைவ ச்ருதி ஸுகமிதி  ச்ரோது காமோ முஹுர்மாம் |
க்ருத்யைரந்யை: கிமிஹ ததிதம் கீர்த்தயேதி ப்ரவீதி || 81.

மனதிற்குள் தபித்துக் கொண்டிருக்கும் இந்த ரகுபதி அருகில் உம்மைக் காணாமல் கவலையுற்றவராக, உள்ளம் ஆறுதலடைய வந்து உமது திருநாமமே காதுக்கு இனிமையானது என்று கேட்க விரும்பியவராக, அடிக்கடி வேறு வ்யாபாரங்களால் என்ன பயன்? அந்தத் திருநாமத்தையே கூறுவாயாக என்று சொல்லுகிறார்.

भुङ्क्ते नैव प्रथमकवले यस्त्वया नोपभुक्ते |
निद्रा नैव स्पृशति सुत्दृदं त्वां विना यस्य नेत्रे ||
हीनो येन त्वमसि सलिलोत्क्षिप्तमीनोपमानः |
कोऽसौ सोढुं वरवरमुने! राघवस्त्वद्वियोगम् || ८२||

புங்க்தே நைவ ப்ரதமகபலே  யஸ்த்வயா நோப புக்தே |
நித்ரா நைவ ஸ்ப்ருசதி ஸுஹ்ருதம் த்வாம் விநா யஸ்ய  நேத்ரே ||
ஹீநோ யேந த்வமஸி ஸலிலோ க்ஷிப்த மீநோப மாந: |
கோஸௌ ஸோடும் வரவரமுநே! ராகவஸ்த்வத்  வியோகம் || 82.

ஹே வரவரமுநியே! உம்மால் அநுபவிக்கப் படாத போது முதல் கவளத்தில் எவன் அநுபவிக்கிறதில்லையோ, நண்பனான உம்மை விட்டு எவர் கண்களைத் தூக்கம் தொடுவதில்லையோ எவர் நீர் இல்லாமல் ஜலத்திலிருந்து எடுத்துப்  போடப்பட்ட மீன்போல் துடிக்கிறாரோ – உமது பிரிவைப் பொறுக்கவல்ல இந்த ராகவன் யார்?

पत्रं मूलं सलिलमपि यत्पाणिनोपात्दृतं ते |
मात्रा दत्तादपि बहुमतं पत्युरेतद्रघूणाम्  ||
शाखागेहं समजनि विभोः सम्मतं सौघशृङ्गं |
भूत्वा वासो महदपि वनं भोगभूमिस्त्वयाऽभूत् || ८३||

பத்ரம் மால்யம் ஸலில மபியத் பாணிநோ பாஹ்ருதம் தே |
மாத்ரா தத் தாதபி பஹுமதம் பத்யுரேதத் ரகூணாம் ||
சாகா கேஹம் வரவரமுநே ஸம்மதம் ஸௌரச்ருங்கம் |
பூத்வா வாஸோ மஹதபி வநம் போக பூமிஸ் த்வயா பூத் || 83

ஹே வரவரமுநியே! உமக்குக் கையால் அளிக்கப்பட்ட இலையாகிலும் புஷ்பமாகிலும் ஜலமேயாகிலும் தாயால் அளிக்கப் பட்டதைவிட மேலாக எண்ணப்பட்டது. இது  ஸ்ரீராமனுக்கு விளையாடுகிற வீடு மாளிகையாகி பெரிய காடும் உம்முடன் வாழ போக பூமியாகிவிட்டது.

अध्वश्रान्तिं हरसि सरसैरार्द्रशाखासमीरैः |
पादौ संवाहयसि कुरुषे पर्णशालां विशालाम् ||
भोज्यं दत्वा वरवरमुने ! कल्पयन् पुष्पशय्यां |
पश्यन्धन्यो निशिरघुपतिं पासि पत्नीसहायम् || ८४||

அத்வ ச்ராந்திம் ஹரஸி ஸரஸை ரார்த்ர சாகா ஸமீரை: |
பாதௌ ஸம்வாஹயஸி குருஷே பர்ணசாலாம் விசாலாம் ||
போஜ்யம் தத்வா வரவரமுநே! கல்பயந் புஷ்ப சய்யாம் |
பச்யந் தன்யோ நிசி ரகுபதிம் பாத்தி பத்நீ ஸஹாயம் || 84

ஹே வரவரமுநியே! ஈரமான கிளைகளில் பட்டு வருகின்ற ரஸத்துடன் கூடிய காற்றால் வழி நடந்த ச்ரமத்தைப் போக்குகின்றீர்; பாதங்களைப் பிடிக்கின்றீர்; விசாலமான பர்ணசாலையை அமைக்கின்றீர். உணவை அளித்து இரவில் புஷ்பப் படுக்கையை ஏற்படுத்தி தேவிகளுடனிருக்கும் ஸ்ரீ ராமனைக்கண்டு புண்யசாலியாக ரக்ஷித்துக்கொண்டிருக்கிறீர்.

पश्यन्नग्रे परिमितहितस्निग्धवाग्वृत्तियोगं |
सद्यः शोकप्रशमनपरं सान्त्वयन्तं भवन्तम् ||
प्राज्ञो जज्ञे स खलु भगवान्दूयमानो वनान्ते |
पश्चात्कर्तुं वरवरमुने ! जानकीविप्रयोगम् || ८५||

பச்யந் நக்ரே பரிமித ஹித: ஸ்நிக்த வாக் வ்ருத்தி யோகம் |
ஸத்யச் சோக ப்ரஸமந: பரம் ஸாந்த்வயந்தம் பவந்தம் ||
ப்ராக்ஞயோ ரக்ஜியே ஸகலு பகவாந் தூயமாநோ வநாந்தே |
பஸ்சாத் கர்த்தும் வரவரமுநே ஜாநகீ விப்ரயோகம் || 85

ஹே வரவரமுநியே! சுருக்கமும், ஹிதமும், அன்பும் நிறைந்த, (வார்த்தை) தற்சமயம் சோகத்தைக் குறைக்க வல்ல நல்வார்த்தை கூறுகிற உம்மை எதிரில் பார்த்து அந்த பகவானான ஸ்ரீராமனே காட்டில் வருந்துபவராக  இருந்தும் பிராட்டியின் பிரிவை மறைப்பதற்கு அறிஞராக ஆனார்.

सुग्रीवो नश्शरणमिति यत्सूनृतं भ्रातुरर्थे |
पम्पातीरे पवनजनुषा भाषितं शोभते ते ||
कालातीते कपिकुलपतौ देव तत्रैव पश्चात्
चापं धून्वन्वरवरमुने यद्भवान्निग्रहेऽभूत् || ८६||

ஸுக்ரீவோ ந: ஶரணமிதி ய: ஸூந்ருதம் ப்ராதுரர்த்தே |
பம்பா தீரே பவந ஜநுஷா பாஷிதம் சோபதே தே ||
காலாதீதே கபிகுல பதௌ தேவ தத்ரைவ பஶ்சாத் |
சாபம் தூந்வந் வரவரமுநே யத் பவாந் நிக்ரஹே பூத் || 86

ஹே வரவரமுநியே! தம் ப்ராதாவுக்காக எங்களுக்கு ஸுக்ரீவன் ரக்ஷகனாக வேண்டும் என்று பம்பைக் கரையில் வாயு குமாரனான ஹநுமானுடன் வார்த்தை அழகாக இருக்கிறது. காலம் கடந்தபின் அந்த ஸுக்ரீவனிடத்தில் அங்கேயே பிறகு வில்லை அசைத்துக்கொண்டு அவனை அடக்குவதில் முயற்சி உள்ளவராக ஆனீர்.

यस्मिन्प्रीतिं मदभिलषितमार्यपुत्रो विधत्ते |
येनोपेतः स्मरति न पितुस्सोऽतिवीरो गतिर्मे ||
इत्येवं त्वां प्रति रघुपतिप्रेयसी सन्दिशन्ती-
व्यक्तं देवी वरवरमुने तत्वमाह त्वदीयम् || ८७||

யஸ்மின் ப்ரீதிம் மதபிலஷிதாம் ஆர்ய புத்ரோ விதத்தே |
யே நோ பேத: ஸ்மரதி ந பிது:ஸோS தி வீரோ கதிர்மே ||
இத்யேவம் த்வாம் ப்ரதி  (ரகுபதி) ப்ரேயஸீ ஸந்திஸந்தீ |
வ்யக்தம் தேவீ வரவரமுநே தத்வமாஹ த்வதீயம் || 87

ஹே வரவரமுநியே! ஸ்ரீ ஸீதாப்பிராட்டி உம்மைப் பற்றிக் கூறுவது: பெருமாள் எனக்குப் ப்ரியமான அன்பை எவரிடத்தில் செலுத்துவாரோ, எவருடன் கூடியபோது தம் தந்தையையும் நினைப்பதில்லையோ, அப்படிப் பட்ட வீரரே எனக்குக் கதி ஆகிறார்– என்று உம்மைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். வெளிப்படையான உமது விஷயமான உண்மையைக் கூறுகிறார்.

बानैर्यस्य ज्वलनवदनैर्वाहिनी वानराणां
वात्यावेगभ्रमितजलदस्तोमसाधर्म्यमेति ||
सोऽयं भग्नो वरवरमुने ! मेघनादश्शरैस्ते
रक्षोनाथः कथमितिरथा हन्यते राघवेण || ८८||

பாணைர் யஸ்ய ஜ்வலந வதநைர்வாஹிநீ  வாநராணாம் |
வாத்யா வேக ப்ரமிதஜலதஸ் தோம ஸாதர்ம்ய மேதி ||
ஸோ யம் பக்நோ வரவரமுநே மேகநாதச் சரைஸ்தே
ரக்ஷோநாத: கதமிதரதா ஹான்யதே ராகவேண || 88

அக்நியை முகத்தில் வைத்துக்கொண்டுள்ள எவருடைய பாணங்களால் வாநரங்களுடைய சேனை சுழற்காற்றின் வேகத்தால் சுழற்றப்பட்ட மேகக் கூட்டங்களின் ஸாம்யத்தைப் பெறுகிறதோ அப்படிப்பட்ட இந்த்ரஜித் உம்மால் கொல்லப்பட்டான். இல்லாவிட்டால் ராமனால் எப்படி ராவணன் கொல்லப்படுவான்?

पृथ्वीं भित्वा पुनरपि दिवं प्रेयसीमश्नुवानां
दृष्ट्वा श्रीमद्वदनकमले दत्तदृष्टिः प्रसीदन् ||
प्रेमोदग्रैर्वरवरमुने ! भृत्यकृत्यैस्त्वदीयैः |
नीतः प्रीतिं प्रतिदिनमसौ शासिता नैर्ऋतीनाम् || ८९||

ப்ருத்வீம் பித்வா புந ரபி திவம் ப்ரேயஸீ மச்னுவானாம் |
த்ருஷ்ட்வா ஸ்ரீமத் வதன கமலே தத்த த்ருஷ்டி: ப்ரஸீதந் ||
ப்ரேமோ தக்ரை: வரவரமுநே ப்ருத்ய க்ருத்யைஸ் த்வதீயை:
நீத: ப்ரீதிம் ப்ரதி திநமஸௌ சாஸி தாநை ருதாநாம். 89

ஹே வரவரமுநியே! மறுபடி பூமியைப் பிளந்துகொண்டு ஸ்வர்கத்தை அடைகின்ற காதலியைப் பார்த்துக்கொண்டு ஒளி வீசுகின்ற முகத் தாமரையைப் பார்த்துக்கொண்டு அன்பு நிறைந்த உமது அடிமைக் கார்யங்களால் அரக்கர்களுக்கு சிக்ஷகரான இந்த ஸ்ரீராமர் தினந்தோறும் ப்ரீதியை அடைவிக்கப் படுகிறார்.  

सोदर्येषु त्वमसि दयितो यस्य भृत्यस्सुत्दृद्वा |
सोढव्योऽभूत्त्वयि सहचरे जानकीविप्रयोगः ||
ध्यायन्ध्यायन्वरवरमुने ! तस्य ते विप्रयोगं |
मन्येऽनिद्रामरतिजनितां मानयत्यग्रजोऽयम् || ९०||

சோதர்யேஷு த்வமஸி தயிதோ யஸ்ய ப்ருத்யுஸ் ஸுஹ்ருத்வா |
ஸோடவ்யோ பூத் த்வயி ஸஹ சரே ஜாநகீ விப்ரயோக: ||
த்யாயம் த்யாயம் வரவரமுநே! தஸ்ய தே விப்ரயோகம்  |
மந்யே நித்ரா மரதி ஜநிதாம் மாநயத்யக்ரஜோயம் ||  90

எவருடைய நண்பனோ பணியாளோ அந்த ராமனுக்கு ஸஹோதரர்களில் நீர் அன்புக்குரியவர் ஏனென்றால் நீர் உடன் இருக்கும்போது பிராட்டியின் பிரிவு அவருக்குப் பொறுக்கத் தக்கதாக இருந்தது. ஹே வரவரமுநியே! உமது பிரிவை நினைத்து நினைத்து வெறுப்பாலுண்டான நித்ரையாக இந்த மூத்த ஸஹோதரர் கௌரவிக்கிறார்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரவரமுனி சதகம் 8

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 7

Image result for manavala mamunigal tirupati

पश्यन्नेवं प्रभवति जनो नेर्ष्यितुं त्वत्प्रभावं |
प्राज्ञैरुक्तं पुनरपि हसन्दर्शयत्यभ्यसूयाम् ||
नश्यत्यस्मिन्  वरवरमुने ! नाथ ! युक्तं तदस्मिन् |
प्रत्यक्षं तत्परिकलयितुं तत्वमप्राकृतं ते || ७१||

பஶ்யந்நேவம் ப்ரபவதி ஜநோ நேக்ஷிதும் த்வத் ப்ரபாவம் |
ப்ராஞைருக்தம் புநரபி ஹஸந் தர்சயத்யப்யஸூயாம் ||
நஸ்யத்(யஸ்மின்) யேவம் வரவரமுநே நாதயுக்தம் ததஸ்மிந் ||
ப்ரத்யக்ஷம் யத் பரிகலயிதும் தத்வ மப்ராக்ருதம் தே. || 71

பார்த்துக்கொண்டிருக்கும்போதே உமது பெருமையை அறிய முடியவில்லை. பெரியோர்கள் சொல்லக்கேட்டுச் சிரித்துக்கொண்டு பொறாமையைக் காட்டுகிறான். நாதா வரவரமுநியே இப்படி இவன் அழிகிறான். அது இவனிடத்தில் யுக்தமே. ஏனென்றால் உமது அப்ராக்ருதமான உண்மையை இந்த்ரியங்களால் அறியப்போகாதல்லவா?

सत्वोन्मेषप्रमुषितमनःकल्मषैः सत्वनिष्ठैः |
सङ्गं त्यक्त्वा सकलमपि यः सेव्यसे वीतरागैः ||
तस्मै तुभ्यं वरवरमुने ! दर्शयन्नभ्यसूयां |
कस्मै कृत्वा किमिव कुमतिः कल्पतामिष्टिसिद्ध्यै || ७२||

ஸத்வோன்மேஷ ப்ரமுஷித மந:கல்மஷைஸ் ஸத்வ நிஷ்டை: |
ஸங்கம் த்யக்த்வா ஸகலமபிய: ஸேவ்யஸே வீத ராகை: ||
தஸ்மை துப்யம் வரவரமுநே தர்சயந் நப்யஸூயாம் |
கஸ்மை க்ருத்வா கிமிவ குமதி கல்பதாமிஷ்ட ஸித்யை: || 72

ஸத்வ குண வளர்ச்சியால் அபஹரிக்கப்பட்ட மன மலங்களையுடைய ஸத்வ நிஷ்டர்களால், எல்லாப் பற்றையும்விட்டு ஆசையற்றவர்களால் ஸேவிக்கப்படுகிற உமது விஷயத்தில் பொறாமையைக் காட்டிக்கொண்டு கெட்டபுத்தியுள்ள நான் யாருக்கு இஷ்டமானதைச் செய்ய வல்லவன்?

दिव्यं तत्ते यदिह कृपया देवदेवोपदिष्टं |
तत्वं भूयाद्वरवरमुने ! सर्वलोकोपलभ्यम् ||
व्यक्ते तस्मिन् विदधति भवद्वैभवद्वेषिणो ये |
द्वेषं त्यक्त्वा सपदि दुरितध्वंसिनीं त्वत्सपर्याम् || ७३||

திவ்யம் தத்தே யதிஹ க்ருபயா தேவதேவோபதிஷ்டம் |
தத்வம் பூயாத் வரவரமுநே ஸர்வ லோகோபலப்யம் ||
வ்யக்தே தஸ்மிந் விதததி பவத் த்வேஷினோயே |
த்வேஷம் த்யக்த்வா ஸபதி துரித த்வம்ஸிநீம் த்வத் ஸபர்யாம் || 73

ஹே வரவரமுநியே! எல்லா ஜனங்களாலும் அறியக்கூடிய எம்பெருமானால் க்ருபையுடன் உபதேசிக்கப்பட்ட உமக்குத் தத்வமுண்டாக வேணும். வ்யக்தமான அந்தத் தத்வத்தில் உமது பெருமையை த்வேஷிக்கிறவர்கள் உடனே பாபத்தைப் போக்குகின்ற உமது பூஜையை த்வேஷத்தை விட்டுச் செய்கிறார்கள்.

केचित्स्वैरं वरवरमुने! केशवं संश्रयन्ते |
तानप्यन्ये तमपि सुधियस्तोषयन्त्यात्मवृत्त्या ||
त्वत्तो नाऽन्यत्किमपि शरणं यस्य सोयं त्वदीयो
भृत्या नित्यं भवति भवतः प्रेयसां प्रेमपात्रम् || ७४||

கேசித் ஸ்வைரம்வரவரமுநே கேசவம் ஸம்ச்ரயந்தே  |
தாநப்யந்யே தமபி ஸுதிய: தோஷயந்த்யாத்ம வ்ருத்யா ||
த்வத்தோ நான்யத் கிமபி ஸரணம் யஸ்ய ஸோயம் த்வதீய: |
ப்ருத்யோ நித்யம் பவதி பவத: ப்ரேயஸாம் ப்ரேம பாத்ரம் || 74

ஹே வரவரமுநியே சிலர் தாமாகவே எம்பெருமானை ஆச்ரயிக்கிறார்கள். அவர்களையும் எம்பெருமானையும் பிற புத்திமான்கள் தமது கர்மத்தால் மகிழ்ச்சி அடையச் செய்கிறார்கள். உம்மைத் தவிர வேறு ரக்ஷகர் இல்லாத எனக்கு மிக்க  அன்புக்குரியவராயிருக்கிறீர்.

दीने पूर्णां भवदनुचरे देहि दृष्टिं दयाऽऽर्द्रां  |
भक्त्युत्कर्षं वरवरमुने ! तादृशं भावयन्तीम् ||
येन श्रीमन् ! द्रुतमहिमतः प्राप्य युष्मत्पदाब्जं |
त्वद्विश्लेषे तनुविरहितस्तत्र लीनो भवेयम् || ७५||

தீனே பூர்ணாம் பவதநுசரே தேஹி த்ருஷ்டிம் தயார்த்ராம் |
பக்த்யுத்கர்ஷம் வரவரமுநே தாத்ருசம் பாவயந்தீம் ||
யேந ஸ்ரீமந் த்ருத மஹமித: ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம் |
த்வத் விஶ்லேஷே தநு விரஹித: தத்ர லீனோ பவேயம் || 75

ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது. அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.  

त्वत्पादाब्जं भवतु भगवन् दुर्लभं दुष्कृतो मे |
वासोऽपि स्यात् वरवरमुने ! दूरतस्त्वत्प्रियाणाम् ||
त्वद्वैमुख्याद्विफलजनुषो ये पुनस्तूर्णमेषां |
दूरीभूतः क्वचनगहने पूर्णकामो भवेयम् || ७६||

த்வத் பாதாப்ஜம் பவது பகவந் துர்லபம் துஷ்க்ருதோ மே |
வாஸோபிஸ்யாத் வரவரமுநே! தூரதஸ்த்வத் ப்ரியாணாம் ||
த்வத் வைமுக்யாத் விபல ஜநுஷோ யே புநஸ் தூர்ண மேஷாம் |
தூரீ பூத: க்வசந கஹநே பூர்ண காமோ பவேயம் || 76

மஹா பாபியான அடியேனுக்கு தேவரீர் திருவடித் தாமரை துர்லபமாகவே இருக்கட்டும். அடியேனுக்கு வாஸமோ உமது பக்தர்களுக்கு வெகு தூரத்திலேயே அமையட்டும். எவர்கள் உம்மிடத்தில் பராங் முகமாயிருந்து பிறந்த பயனை வீணாக்குகிறார்களோ அவர்களுக்கு வெகு தூரத்தில் எங்காவது காட்டில் இருந்துகொண்டு என் விருப்பம் நிறைந்தவனாக வேணும்.            

सिम्हव्याघ्रौ सपदि विपिने पन्नगः पावको वा-
कुर्युः प्राणान्तकमपि भयं को विरोधस्ततो मे ||
नैते दोषग्रहणरुचयस्त्वत्प्रियैर्निर्निमित्तैः
नानाजल्पैर्वरवरमुने ! नाशयन्त्यन्तिकस्थान् || ७७||

ஸிம்ஹ வ்யாக்ரௌ ஸபதி விபிநே பந்நக: பாவகோவா  |
குர்யு: ப்ராணாந்தகமபி பயம் கோ விரோதஸ்ததோ மே ||
நை தே தோஷ க்ரஹண ருசயஸ் த்வத் ப்ரியைர் நிர்நிமித்தை: |
நாநா ஜல்பைர் வரவரமுநே நாசயந்த்யந்திகஸ்தாந் || 77

புலி சிங்கம் ஸர்ப்பம் நெருப்பு இவைகள் காட்டில்  உடனே எனக்கு உயிருக்கு ஆபத்தைக் கொடுத்தாலும் அவைகளிடத்தில் எனக்கு பயம் ஏது? வரவரமுநியே! குற்றங்களைக் காணும் இவர்கள் உமக்குப் ப்ரியமில்லாத, காரணமற்ற பல வாதங்களால் அருகிலுள்ளவர்களை அழிப்பதில்லை.

त्वद्भृत्यानामनुभजति यस्सर्वतो भृत्यकृत्यं |
तद्भृत्यानामभिलषति यस्तादृशं प्रेष्यभावम् ||
मद्भ्रुत्योऽसाविति मयि स चेत्सानुकल्पैरपाङ्गैः |
क्षेमं कुर्याद्वरवरमुने ! किं पुनश्शिष्यते मे || ७८||

த்வத் ப்ருத்யாநா மநு பஜதி ய:ஸர்வதோ ப்ருத்ய க்ருத்யம் |
தத் ப்ருத்யாநாமபிலஷதி ய: தாத்ருசம் ப்ரேஷ்ய பாவம் ||
மத்ப்ருத்யோ ஸா விதிமயி ஸ சேத் ஸாநுகம்பை ரபாங்கை: |
க்ஷேமம் குர்யாத் வரவரமுநே| கிம் புன: ஶிஷ்யதே மே ||78

எல்லா விதத்திலும் எவர்கள் தேவரீரிடத்தில் அடிமைத்தொழில் புரிகிறார்களோ அவ்வடியவர்களிடத்தில் அடிமையை எவர் விரும்புகிறார்களோ அவர் அடியேனை இவன் நமது அடியவன் என்று தயையுடன் கடாக்ஷிப்பாரானால் அதுவே க்ஷேமகரம். அடியேனுக்கு வேறு என்ன தேவை?

क्वाऽहं क्षुद्रः कुलिशत्दृदयो  दुर्मतिः क्वात्मचिन्ता |
त्रैयन्तानामसुलभतरं तत्परं क्वाऽऽत्मतत्वम् ||
इत्थम्भूते वरवरमुने! यत्पुनस्स्वात्मरूपं |
द्रष्टुं तत्तत्समयसदृशं देहि मे बुद्धियोगम् || ७९||

க்வாஹம் க்ஷுத்ர: குலிஸ ஹ்ருதய: துர்மதிக்வாத்ம சிந்தா |
த்ரய்யந்தானாமஸுலபதாம் தத்பரம் க்வாத்ம தத்வம் ||
இத்தம் பூ தே வரவரமுநே யத் புநஸ்வாத்ம ரூபம் |
த்ரஷ்டும் தத்தத் ஸமய ஸத்ருசம் தேஹிமே புத்தி யோகம் || 79

மிகவும் அல்பனான நான் எங்கே! உறுதியான நெஞ்சும் கெட்ட புத்தியும் உள்ளவன் ஆத்ம சிந்தை எங்கே! உபநிஷத்துகளுக்கே துர்லபமான ஆத்ம தத்வம் எங்கே! ஹே வரவரமுநியே! நிலைமை இவ்வாறிருக்கும்போது ஸ்வாத்ம ரூபத்தை அறிவதற்கு அந்தந்த சமயத்துக்கு ஏற்றவாறு புத்தியை அளிப்பீராக.

सोढुं ताद्रुग्रघुपरिवृढो न क्षमस्त्वद्वियोगं |
सद्यः काङ्क्षन् वरवरमुने ! सन्निकर्षं तवैषः ||
सायम्प्रातस्तव पदयुगं शश्वदुद्दिश्य दिव्यं |
मुञ्चन् बाष्पं मुकुलितकरो वन्दते हन्त मूर्ध्ना || ८०||

ஸோடும் தாவத் ரகு பரிவ்ருடோ ந க்ஷமஸ்த்வத் வியோகம் |
ஸத்ய காங்க்ஷந் வரவரமுநே ஸந்நிகர்ஷம் தவைஷ: ||
ஸாயம் ப்ராதஸ் தவபத யுகம் ஸச்வ துத்திச்ச திவ்யம் |
முஞ்சந் பாஷ்பம் முகுளித  கரோ வந்ததே ஹந்த மூர்த்நா || 80

ச்ரேஷ்டரான ஹே வரவரமுநியே! உமது பிரிவை ஸஹியாதவராக உடனே உமது ஸேவையை விரும்பி ஸாயங்கால வேளையிலும் காலை வேளையிலும் உமது இரண்டு திருவடிகளையும் உத்தேசித்து அடிக்கடி கண்ணீர் பெருக்கிக்கொண்டு கைகூப்பிய வண்ணம் சிரஸ்ஸால் வணங்குகிறார். ஆச்சர்யம்!

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரவரமுனி சதகம்  பகுதி 7

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 6

Image result for manavala mamunigal melkote

मन्त्रो दैवं फलमिति मया वाञ्छितं यद्यपि स्यात्
मध्ये वासो मलिनमनसामेवमेवं यदि स्यात् |
यद्वा किन्चित्त्वदनुभजनं सर्वदा दुर्लभं स्यात्
देहं त्यक्तुं वरवरमुने ! दीयतां निश्चयो मे || ६१||

மந்த்ரோ தைவம் பலமிதி  மயா வாஞ்சிதம் யஸ்யபிஸ்யாத்
மத்யே வாஸோ மலிந மநஸாமேவமேவம் யதிஸ்யாத் |
யத்வா கிஞ்சித் த்வதநு பஜநம் ஸர்வதா துர்லபம் ஸ்யாத்
தேஹம் த்யக்தும் வரவரமுநே தீயதாம் நிச்சயோ மே. || 61

மந்த்ரம் தேவதை பலம் இவை என்னால் விரும்பத்தக்கவையாக இருந்தால், கெட்ட எண்ணமுள்ள மனிதர் மத்தியில் எனக்கு வாஸம் இருக்குமானால், அல்லது உமது ஸேவை எனக்கு எல்லா விதத்திலும் துர்லபமாக இருக்குமானால் இந்த உடலை விட்டுப்போக எனக்கு நிச்சயத்தை உண்டாக்குவீராக!

आचार्यत्वं तदधिकमिति ख्यातमाम्नायमुख्यैः
एष श्रीमान् भवति भगवान् ईश्वरत्वं विहाय ||
मन्त्रं दाता वरवरमुने ! मन्त्ररत्नं त्वदीयं
देवः श्रीमान्  वरवरमुनेर्वर्तते देशिकत्वे || ६२||

ஆசார்யத்வம் தததிகமிதி க்யாதம் ஆம்நாய முக்க்யை:
ஏஷ ஸ்ரீமாந் பவதி பகவாந்! ஈஸ்வரத்வம் விஹாய ||
மந்த்ரம் தாதா வரவரமுநே மந்த்ர ரத்நம் த்வதீயம்
தேவஸ்ரீமாந் வரவரமுநிர் வர்த்ததே தேசிகத்வே || 62

வேத வாக்யங்களால் ஆசார்யனாக இருப்பது ஈஶ்வரத் தன்மைக்கு மேற்பட்டது எனக் கூறப்பட்டது என்று இந்த பகவான் ஈஶ்வரத்தன்மையை விட்டு ஹே வரவரமுநியே! உம்மிடத்தில் மந்த்ரத்தைக் கொடுப்பவராயும் உமது த்வயத்தையும் தேவனான ஶ்ரிய:பதியாகவும் ஆசார்யனாக இருப்பதிலும் இருக்கிறார்.

आत्मानात्मप्रमितिविरहात्पत्युरत्यन्तदूरो |
घोरे तापत्रितयकुहरे घूर्णमानो जनोऽयम् ||
पादच्छायां वरवरमुने ! प्रापितो यत्प्रसादात्
तस्मै देयं तदिह किमिव श्रीनिधे विद्यते ते || ६३||

ஆத்மாநாமாத்ம ப்ரமிதி விரஹாத் பத்யுரத்யந்த தூரே
கோரே தாபத்ரிதய குஹரே கூர்ணமாநோ ஜநோயம் ||
பாதச்சாயாம் வரவரமுநே ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்
தஸ்மை தேயம் ததிஹ கிமிவ ஸ்ரீநிதே வித்யதே தே || 63

ஜீவன் ப்ரக்ருதி என்னும் அறிவில்லாமல் எம்பெருமானுக்கு வெகு தூரத்தில் கடுமையான ஆத்யாத்மிகம், ஆதி தைவிகம், ஆதி பௌதிகம் என்று சொல்லக்கூடிய மூன்று வகையான தாபம் என்னும் பள்ளத்தில் சுழன்று கொண்டிருக்கிற இந்த ஜநம் வரவரமுநியே! எவர் அநுக்ரஹத்தால் எம்பெருமான் திருவடி நிழலை அடைவிக்கப்பட்டதோ அவருக்குக் கொடுக்கவேண்டியது (உமக்கு) இங்கு என்ன இருக்கிறது  எம்பெருமானே!

विख्यातं यद्रघुकुलपते विश्वतः क्ष्मातलेऽस्मिन्
नित्योदग्रं वरवरमुने ! निस्सपत्नं महत्वम् ||
पश्यन्नन्धः प्रकृतिविवशो बालिशो यादृशोऽयं |
तत्वं तस्य प्रकटयसि मे तादृशैरेव योगैः || ६४||

விக்யாதம் யத் ரகுகுல பதேர் விச்வத: க்ஷ்மாதசேஸ்மிந்
நித்யோதக்ரம் வரவரமுநே நிஸ்ஸபத்நம் மஹத்த்வம் ||
பஶ்யந் நந்த ப்ரக்ருதி விவசோ பாலிஸோ யாத்ருசோயம்
தத்வம் தஸ்ய ப்ரகடயஸி மே தாத்ருசைரேவ யோகை: || 64

இந்நிலவுலகில் நாற்புறங்களிலும் சக்கரவர்த்தி திருமகனுடைய எந்தப் பெருமை தினந்தோறும் வளர்ந்து ப்ரஸித்தமாக , எதிரில்லாமல் இருக்கிறதோ அதைப் பார்த்துக்கொண்டும் குருடனான இந்த பாலன் இந்த ப்ரக்ருதி வசமாக இருப்பவனுக்கு அவருடைய உண்மைகளை அப்படிப்பட்ட யோகங்களாலேயே (எனக்கு) வெளிப்படுத்துகிறீர்.

लक्ष्मीभर्तुः परमगुरुतां लक्षयन्ती गुरूणां |
पारम्पर्यक्रमविवरणी या हि वाणी पुराणी ||
अर्थं तस्याः प्रथयसि चिरादन्यतो यद्दुरापं |
दिव्यं तन्मे वरवरमुने ! वैभवं दर्शयित्वा || ६५||

லக்ஷ்மீ பர்த்ரு: பரம குருதாம் லக்ஷயந்தீ குரூணாம் |
பாரம்பர்ய க்ரம விவரணீ யாஹி வாணீ புராணீ ||
அர்த்தம் தஸ்யா: ப்ரதயதி சிராத் அந்யதோ யத்துராபம் |
திவ்யம் தன்மே வரவரமுநே வைபவம் தர்சயித்வா || 65

வரவரமுநியே! எந்தப் புராதன வாக்கான வேதம் குரு  பரம்பரையை விவரிப்பதாகப் பிராட்டியின் கணவனுக்குப் பரம குருவாக இருக்கும் தன்மையைக் குறிக்கிறதோ அதை வேறு ஒருவருக்கும் கிடைக்காத பொருளாக அந்தத் திவ்யமான வைபவத்தைக் காட்டிக்கொண்டு பொருளை விளக்குகிறீர்.

तत्वं यत्ते किमपि तपसा तप्यतामप्यृषीणां |
दूराद्दूरं वरवरमुनेदुष्कृतैकान्तिनो मे ||
व्याकुर्वाणः प्रतिपदमिदं व्यक्तमेवं दयावान्
नाथो नैतत्किमिति जगति ख्यापयत्यद्वितयिम् || ६६||

தத்வம் யத்தே கிமபி தபஸா தப்யதாமப்ய் ருஷீணாம்  |
தூராத் தூரம் வரவரமுநே! துஷ்க்ருதை காந்திநோ மே ||
வ்யாகுர்வாண ப்ரதி பதமிதம் வ்யக்தமேவம் தயாவாந்
நாதோ நைதத் கிமிதி ஜகதி க்யாபயத் யத்விதீயம். || 66

தவத்தினால் தபிக்கப்படுகிற முனிவர்களுக்கும் வெகு தூரத்திலுள்ள தத்வம் (ஆகிய தேவரீர்) பாபத்தையே நிரம்பப் பெற்றிருக்கும் எனக்கு அடிக்கடி தயையுடன் இவ்வாறு விவரித்துக்கொண்டு நாதனாக இருக்கிறீர். இது என்னவென்று இந்த உலகில் ஒருவராகவே வெளிப்படுத்துகிறீர்.

कालेकाले कमलजनुषां नास्ति कल्पायुतं किं |
कल्पेकल्पे हरिरवतरन् कल्पते किन्न मुक्त्यै ||
मृत्वामृत्वा तदपि दुरितैरुद्भवन्तो दुरन्तैः
अद्याऽपि त्वां वरवरमुने ! हन्त नैवाऽऽश्रयन्ते || ६७||

காலே காலே கமலஜநுஷாம் நாஸ்தி கல்பாயுதம் கிம் |
கல்பே கல்பே ஹரிரவதரன் கல்பதே கிம் ந முக்த்யை  ||
ம்ருத்வா ம்ருத்வா ததபி துரிதை ருத்பவந்தோ துரந்தை:
அத்யாபித்வாம் வரவரமுநே ஹந்த நைவாச்ரயந்தே || 67

ஹே வரவரமுநியே! அந்தந்தக் காலத்தில் ப்ரஹ்மாக்களுக்குப் பதினாயிரம் கல்பம் இல்லையா, கல்பந்தோறும் எம்பெருமான் அவதரித்து அவர்களுக்கு முக்தி அளிக்க வல்லவராகவில்லையா? முடிவில்லாத பாபங்களால் அவர்கள் இறந்து இறந்து பிறந்துகொண்டு இப்போதும் தேவரீரை ஆச்ரயிப்பதில்லை. மஹா கஷ்டம்! ஆச்சர்யம்!

कारागारे वरवरमुने ! वर्तमानश्शरीरे |
तापैरेष त्रिभिरपि चिरं दुस्तरैस्तप्यमानः ||
इच्छन्भोक्तुं तदपि विषयानेव लोकः क्षुधार्तो |
हित्वैव त्वां विलुठति बहिर्द्वारि पृथ्वीपतीनाम्  || ६८||

காரா காரே வரவரமுநே வர்த்தமானஸ் சரீரே |
தாபைரேஷத்ரிபிரபி சிரம் துஸ்தரைஸ் தப்யமாந: ||
இச்சந் போக்தும் ததபி விஷயானேவ லோக: க்ஷுதார்த்தோ |
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர்த்வாரி ப்ருத்வீ பதீநாம் || 68

ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்துகொண்டு தாண்டமுடியாத மூவகையான தாபங்களால் வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மைவிட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.

मध्ये माम्सक्षतजगहनं  विड्भुजामेव भोज्यं |
दीनो वोढुं दृढमिति वपुश्चेष्टते रात्र्यहानि ||
भग्ने तस्मिन् परिणमति यः पातकी यातनाभ्यो |
देही नित्यो वरवरमुने ! केन जिज्ञासनीयः || ६९||

மத்யே மாம்ஸ க்ஷத ஜக ஹநம் விட் பூஜா மேவ போஜ்யம் |
தீநோ வோடும் த்ருடமிதி வபுஸ் சேஷ்டதேராத்ர்ய  ஹாநி ||
பக்னே தஸ்மிந் பரிணமதிய: பாதகீ யாதநாப்யோ |
தேஹீ நித்யோ வரவரமுநே!   கேன ஜிக்னாஸனீய: || 69

ஹே வரவரமுநியே! மத்தியில் மாம்ஸம் இரத்தம் இவைகளால் நிறைந்தும் அமேத்யத்தை ருசிப்பவர்களுக்கே அனுபவிக்கத்  தக்கதுமான இந்த உடலை சுமக்க திடமாக எண்ணி இந்த எளியவன் இரவும் பகலும் நடமாடுகிறான். அது முறிந்தவுடன் எந்தப்  பாபி நரக வேதனைகளில் ப்ரவ்ருத்திக்கிறானோ அவனுக்கு நிலையான உடலையுடைய ஜீவாத்மா எவனால் அறியத்தக்கது? ஒருவரும் அதை அறிய ஆவலுடையாரில்லை என்று பொருள்.                                                        

अल्पादल्पं क्षनिकमसकृद्दुष्कृतान्येव कृत्वा
दुःखोदग्रं सुखमभिलशन्दुर्लभैरिन्द्रियार्थैः ||
मोघं कृत्वा वरवरमुने ! मुक्तिमूलं शरीरं |
मज्जत्यन्धे तमसि मनुजस्त्वाप्रियस्त्वाप्रियाणाम् || ७०||

அல்பாதல்பம் க்ஷணிகமஸக்ருத் துஷ்க்ருதான்யேவ க்ருத்வா
து:கோதக்ரம் ஸுகமபிலக்ஷந் துர்லபை ரிந்திரியார்த்தை: ||
மோஹம் க்ருத்வா வரவரமுநே! முக்திமூலம் ஶரீரம் |
மஜ்ஜத்யந்தே தமஸி மநுஜஸ் தவப்ரியஸ் த்வத் ப்ரியாணாம். 70

ஹே வரவரமுநியே! மிகவும் சிறியவையும் க்ஷணத்தில் செய்யக்கூடியவையுமான  பாபங்களையே அடிக்கடி செய்துவிட்டு துக்கம் நிறைந்த ஸுகத்தை ஆசைப்பட்டு (அடைய முடியாத) இந்திரிய விஷயங்களால் முக்திக்குக் காரணமான சரீரத்தை வீணாக்கி உமதன்பர்களுக்கு வெறுப்பையூட்டிக்கொண்டு அந்த தமஸ் என்னும் நரகத்தில் மூழ்குகிறான்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரவரமுனி சதகம் – பகுதி 6

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 5

भृत्यैर्द्वित्रैः प्रियहितपरैरञ्चिते भद्रपीठे |
तुङ्गं तूलासनवरमलन्कुर्वतस्सोपधानम्  ||
अङ्घ्रिद्वन्द्वं वरवरमुनेरब्जपत्राSभिताम्रं |
मौलौ वक्त्रे भुजशिरसि मे वक्षसि स्यात्क्रमेण || ५१॥

ப்ருத்யைர் த்வித்ரை: ப்ரியஹித பரைரஞ்சிதே பத்ரபீடே |
துங்கம் தூலாஸந வரமலங்குர்வதஸ் சோபதாநம் ||
அங்க்ரிர்த்வந்த்வம் வரவரமுநேரப்ஜபத்ராபிதாம்ரம்  |
மௌலௌ வக்த்ரே புஜ சிரஸி மே வக்ஷசிஸ்யாத் க்ரமேண || 51

உமது ப்ரியத்திலும் ஹிதத்திலும் நோக்கமுள்ள பரிசாரகர்கள் இருவர் மூவரால் அலங்கரிக்கப்பட்ட பத்ர பீடத்திலுள்ள தலையணையுடன் கூடிய உயர்ந்த மெத்தையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் தாமரை இதழ்போல் சிவந்த திருவடியிணை சிரஸ்ஸிலும் முகத்திலும் தோளிலும் என் மார்பிலும் முறையே ஸ்பர்சிக்க வேணும்.

अग्रे पश्चादुपरि परितो भूतलं पार्श्वतो मे |
मौलौ वक्त्रे वपुषि सकले मानसाम्भोरुहे च ||
दर्शंदर्शं वरवरमुने ! दिव्यंमङ्घ्रिद्वयं ते |
मज्जन्मज्जन्नमृतजलधौ निस्तरेयं भवाब्धिम् || ५२॥

அக்ரே பச்சாதுபரி பரிதோ பூதலம் பார்ச்வதோ மே |
மௌலௌ வக்த்ரே வபுஷி ஸகலே மானஸாம்போருஹேச ||
தர்ஷம் தர்ஷம் வரவரமுநே திவ்யமங்க்ரி த்வயம் தே |
மஜ்ஜந் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம் || 52

முன்புறம், பின்புறம், மேலே, நாற்புறம், பூமி, என் பக்கங்கள், தலை, முகம், எல்லா உடல், உள்ளத் தாமரை இவ்வெல்லா இடங்களிலும் வரவரமுநியே! உமது திவ்ய திருவடியிணையினைப் பார்த்து அம்ருதக் கடலில் அமிழ்ந்து அமிழ்ந்து ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவேன்.

कर्माधीने वपुषि कुमतिः कल्पयन्नात्मभावं |
दुःखे मग्नः किमिति सुचिरं दूयते जन्तुरेषः ||
सर्वे त्यक्त्वा वरवरमुने ! सम्प्रति त्वत्प्रसादात्-
दिव्यं प्राप्तुं तव पदयुगं देहि मे सुप्रभातम् || ५३॥

கர்மாதீநே வபுஷி குமதி: கல்பயந் நாத்ம பாவம் |
து:கே மக்ந: கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: ||
ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத் ப்ரஸாதாத் –
திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம் || 53

கர்ம வச்யமான இந்த உடலில் கெட்ட புத்தியுள்ள மனிதன் ஜீவ புத்தியை ஏற்படுத்திக்கொண்டு துக்கத்தில் மூழ்கிக்கொண்டு இந்த ப்ராணி வெகு நாள்களாக வருந்துகிறான். வரவரமுநியே! எல்லாவற்றையும் விட்டு இப்போது உமது அநுக்ரஹத்தால் உமது திவ்யமான திருவடியிணை கிடைத்திருக்கிறது. எனக்கு நல்லொளி என்னும் ஸுப்ரபாதத்தைக் கொடுப்பீராக!

या या वृत्तिर्मनसि मम सा जायतां संस्मृतिस्ते |
यो यो जल्पस्स भवतु विभो ! नामसङ्कीर्तनं ते ||
या या चेष्टा वपुषि भगवन्  ! सा भवेद्वन्दनं ते |
सर्वं  भूयाद्वरवरमुने ! सम्यगाराधनं ते || ५४॥

யா யா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ்தே |
யோ யோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாம ஸங்கீர்த்தநம் தே ||
யா யா சேஷ்டா வபுஷி பகவந் ஸா பவேத் வந்தநம் தே |
ஸர்வம் பூயாத் வரவரமுநே ஸம்யகாராதநம் தே || 54

என் உள்ளத்தில் என்ன தொழில் உண்டாகிறதோ அது எல்லாம் உம்  நினைவாகவே இருக்க வேண்டும். என் வாயில் என்ன பேச்சு உண்டாகிறதோ அவையெல்லாம் உமது திருநாமத்தைப் பேசுவதாகவே அமைய வேண்டும். என் உடலில் ஏற்படும் சேஷ்டைகள் எல்லாம் உமக்கு வந்தனமாகவே அமைய வேண்டும். எல்லாம் உமக்குத் த்ருப்தி அளிக்கும் திருவாராதாநம் ஆக வேண்டும்.

कामावेशः कलुषमनसामिन्द्रियार्थेषु योSसौ |
भूयो नाथे मम तु शतधा वर्ततामेव भूयान् ||
भूयोSप्येवं वरवरमुने ! पूजनत्वे प्रियाणां |
भूयोभूयस्तदनुभजने पूर्णकामो भवेयम् || ५५॥

காமாவேச: கலுஷ மனஸாம் இந்த்ரியார்த்தேஷு யோஸௌ |
பூயோ நாதே மம து சததா வர்த்ததாமேவ  பூயாந் ||
பூயோப்யேவம் வரவரமுநே பூஜநேத்வத் ப்ரியாணாம் |
பூயோ பூயஸ் ததநு பஜனே பூர்ண காமோ பவேயம் || 55

பாப மனம் படைத்தவர்களுக்கு லௌகிக விஷயங்களில் எவ்வகையான ஆசை இருக்கிறதோ அவ்வாசை நூறு மடங்காகப் பெருகி உம்மிடத்தில் உண்டாகட்டும். அப்படியே உமதன்பர்களைப் பூசிப்பதிலும், அவர்களை அநுவர்த்திப்பதிலும் நிறைந்த மனம் படைத்தவனாக இருக்கக்கடவேன்.

भक्ष्याSभक्ष्ये भयविरहितस्सर्वता भक्षयित्वा |
सेव्याSसेव्यौ समयरहितस्सेवया तोषयित्वा ||
कृत्याकृत्ये किमपि न विदन् गर्हितं वाSपि  कृत्वा |
कर्तुं युक्तं वरवरमुने ! काङ्क्षितं त्वत्प्रियाणाम् || ५६॥

பக்ஷ்யாபக்ஷ்யே பய விரஹித: ஸர்வதோ பக்ஷயித்வா  |
ஸேவ்யாஸேவ்யௌ ஸமய ரஹித: ஸேவயா தோஷயித்வா ||
க்ருத்யாக்ருத்யே கிமபி ந விதந் கர்ஹிதம் வாபி க்ருத்வா  |
கர்த்தும் யுக்தே வரவரமுநே காங்க்ஷிதம் த்வத் ப்ரியாணாம் || 56

புசிக்கத் தக்கவை புசிக்கத் தகாதவை என்று பகுத்தறியாமல் பயமின்றி எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் புசித்தும், அடிமை செய்யத் தக்கவர்கள் செய்யத் தகாதவர்கள் என்கிற பேதமில்லாது எல்லாரையும் அடிமையினால் மகிழ்வித்து வாசியறியாத நீசனுக்கு மணவாளமாமுநியே! உமதன்பர்களின் விருப்பத்தைச் செய்வது எப்படிப் பொருந்தும்?

वृत्तिं त्रातुं वरवरमुने ! विश्वतो वीतरागैः |
प्राप्यं सद्भिः परमिदमसौ नेच्छति ब्रह्मसाम्यम् ||
निर्मर्यादः पततु निरये निन्दितैरप्यनल्पैः
लब्ध्वा किञ्चित्त्वदनुभजनं त्वन्मुखोल्लासमूलम् || ५७॥

வ்ருத்திம் த்ராதும் வரவரமுநே விச்வதோ வீத ராகை: |
ப்ராப்யம் ஸத்பி: பரமிதமஸௌ நேச்சதி ப்ரஹ்ம ஸாம்யம் ||
நிர்மர்யாத: பதது நிரயே நிந்திதைரப்யனல்பை: |
லப்த்வா கிஞ்சித் த்வதநு பஜநம் த்வந் முகோல்லாஸ மூலம் || 57

 வரவரமுநியே! உலகப் பற்றற்ற பெரியோர்களால் அடையத் தகுந்த ப்ரஹ்ம ஸாம்ராஜ்யத்தை இவன் விரும்புகிறதில்லை. மர்யாதை இல்லாமல் தவறு புரிந்து அளவில்லா இழிதொழில்களால் நரகத்தில் விழட்டும் – கொஞ்சம் உமக்குத் தொண்டு புரிந்து உமது முகத்துக்கு மகிழ்ச்சியை அளிப்பதையே விரும்புகிறேன்.

नाSसौ  वासं नभसि परमे वाञ्च्छति त्वत्प्रसादान् |
मर्त्यावासो यदिह सुलभः कोऽपि लाभो महीयान् ||
किञ्चित्कृत्वा वरवरमुने ! केवलं त्वत्प्रियाणां |
पश्यन् प्रीतिं भवति भवतो वीक्षणानां निधानम् || ५८॥

நாஸௌ வாஸம் நபஸி பரமே வாஞ்சதி த்வத் ப்ரஸாதாத் |
மர்த்யா வாஸோ யதிஹ ஸுலப: கோபி லாபோ மஹீயாந் ||
கிஞ்சித் க்ருத்வா வரவரமுநே! கேவலம் த்வத் ப்ரியாணாம் |
பச்யந் ப்ரீதிம் பவதி பவதோ வீக்ஷிதாநாம் நிதாநம் || 58

இவன் உமது அருளால் பரமபதத்தில் வாஸத்தை விரும்புகிறதில்லை. இந்த மனிதப் பிறவியே ஒரு சிறந்த லாபத்தைத் தருகிறது. உமது பக்தர்களுக்குக் கொஞ்சம் பணிவிடை செய்து பார்த்துக்கொண்டு உமது கடாக்ஷங்களுக்கு நிதியாக இருப்பேன்.

अस्माद्भूयांस्त्वमसि विविधानात्मनश्शोधयित्वा |
पद्माभर्तुः प्रतिदिनमिह प्रेषयन् प्राभृतानि ||
तस्मिन्दिव्ये वरवरमुने ! धामनि ब्रह्मसाम्यात्-
पात्रीभूतो भवति भगवन् ! नैवकिन्चिद्दयायाः || ५९॥

அஸ்மாத் பூயாந் த்வமஸி விவிதா நாத்மந: சோதயித்வா |
பத்மா பர்த்து: ப்ரதி திநமிஹ ப்ரேஷயந் ப்ராப்ருதாநி ||
தஸ்மிந் திவ்யே வரவரமுநே தாமநி ப்ரஹ்ம ஸாம்யாத் |
பாத்ரீ பூதோ பவது பகவந் நைவ கிஞ்சித் தயாயா: || 59

பிராட்டியின் கணவனான ஸ்ரீமந்நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து எங்களை அனுப்பிக்கொண்டு நீர் மதிக்கத்தக்கவராக இருக்கிறீர். ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால் உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.

जप्यन्नान्यत्किमपि यदि मे दिव्यनाम्नस्त्वदीयाः –
नैवोपास्यं नयनसुलभादङ्घ्रियुग्मादृते ते ||
प्राप्यं किञ्चिन्न भवति परं  प्रेष्यभावादृते ते |
भूयादस्मिन् वरवरमुने ! भूतले नित्यवासः || ६०॥

ஜப்யந்நாந்யத் கிமபி யதி மே திவ்ய நாம்நஸ்த்வதீயாத் –
நைவோபாஸ்யம் நயந ஸுலபாத் அங்க்ரி யுக்மாத்ருதே தே ||
ப்ராப்யம் கிஞ்சித் ந பவதி பரம் ப்ரேஷ்ய பாவாத்ருதே தே |
பூயாதஸ்மிந் வரவரமுநே பூதலே நித்ய வாஸ: || 60

ஹே வரவரமுநியே! உமது திருநாமத்தையன்றி வேறு ஜபிக்கத்தக்க சொல் எனக்கில்லை. கண்களுக்குத் தெரிந்த உமது திருவடியிணையன்றித் த்யானம் செய்யத் தகுந்த வேறொன்று கிடையாது. உமது அடிமையைத் தவிர வேறொன்று  கதி எனக்கு இல்லை. ஆகையால் இந்நிலவுலகிலேயே எனக்கு நித்ய வாஸம் உண்டாகட்டும்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரவரமுனி சதகம் – பகுதி 5

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 4

अन्तर्ध्यायन्वरवरमुने ! यद्यपि त्वामजस्त्रं |
विश्वं तापैस्त्रिभिरभिहतं वीक्ष्य मुह्यामसह्यम् ||
क्षुत्सम्पातक्षुभितमनसां को हि मध्ये बहूनां |
एकस्स्वादु स्वयमनुभवेन्नेति चेतःप्रसादम्  || ४१॥

அந்தர் த்யாயந் வரவரமுநே யத்யபி த்வாமஜஸ்ரம்  |
விச்வம் தாபைஸ்த்ரிரபி ஹதம் வீக்ஷ்ய முஹ்யாம்யஸஹ்யம்  ||
க்ஷுத்ஸம்பாத க்ஷுபித மநஸாம் கோஹி மத்யே பஹுநாம் |
ஏக ஸ்வாது ஸ்வயமநுபவந் நேதி சேத: ப்ரஸாதம் ||  41

வரவரமுநியே! உம்மை எப்போதும் மனதில் த்யாநம் செய்துகொண்டு மூன்று வகையான தாபங்களால் அடிபட்ட பொறுக்க முடியாத உலகத்தைக் கண்டு மோஹத்தை அடைகிறேன். பசி தாஹங்களால் கலங்கிய மனமுள்ள பலர் மத்தியில் உள்ள எவன் ஒருவன்தான் ஸுகத்தை அநுபவித்து மனத்தெளிவைப் பெறுகிறான்?

सत्वोदग्रैस्सकलभुवनश्लाघनीयैश्चरित्रैस्  –
त्रैयन्तार्थप्रकटनपरैः सारगर्भैर्वचोभिः ||
लोकोत्तीर्णं वरवरमुने लोकसामान्यदृष्ट्या |
जानानस्त्वां कथमपि न मे जायतामक्षिगम्यः || ४२॥

ஸத்வோதக்ரைஸ் ஸகல புவநச்லாகநீயைச் சரித்ரை: –
த்ரையந்தார்த்த ப்ரகடநபரை: ஸாரகர்ப்பைர்வசோபி: ||
லோகோத்தீர்ணம் வரவரமுநே லோக ஸாமாந்ய த்ருஷ்ட்யா |
ஜாநாநஸ்த்வாம் கதமபி ந மே ஜாயதாமக்ஷிகம்ய: ||  42

ஸத்வ குணம் நிறைந்து,  எல்லா உலகத்தவர்களும் புகழத்தக்க சரித்திரங்களாலும் வேதாந்தப் பொருளை வெளிப்படுத்துவதில் நோக்கமுள்ள ஸாரமுள்ள வார்த்தைகளும் உடைய வரவரமுநியே! உலகத்தில் ஸாமான்யமாக அறிந்து கண்களுக்குப் புலப்பட்டவராக எனக்கு ஆக வேண்டா.

कल्याणैकप्रवनमनसं कल्मषोपप्लुतानां |
क्षान्तिस्थेमद्रढिमसमताशीलवात्सल्यसिन्धो ||
त्वामेवाSयं वरवरमुने ! चिन्तयन्नीप्सति त्वाम्
आर्तं श्रीमन् ! कृपणमपि मामर्हसि त्रातुमेव ||  ४३॥

கல்யாணைக ப்ரவண மநஸம் கல்மஷோப ப்லுதாநாம் |
க்ஷாந்தி ஸ்தேம த்ரடிம ஸமதா சீல வாத்ஸல்ய ஸிந்தோ ||
த்வாமேவாயம் வரவரமுநே சிந்தயந்நீப்ஸதித்வாம் |
ஆர்த்தம் ஸ்ரீமந் க்ருபணமபி மாம் அர்ஹஸித்ராதுமேவ || 43

பொறுமை, உறுதி, மனோதிடம், ஸமத்வ புத்தி, நன்னடத்தை, அன்பு இவைகளுக்குக் கடல்போன்ற வரவரமுநியே! பாபம் நிறைந்த ஜனங்களுக்கு சுபத்தையே விரும்புகின்ற திருவுள்ளத்தைப் படைத்த உம்மையே நினைத்து விரும்பும் துக்கத்தால் பீடிக்கப்பட்ட இந்த க்ருபணனையும் ரக்ஷிக்கத் தகுந்தவராகிறீர்.

दोषैकान्ती दुरितजलधिर्देशिको दुर्मतीनां |
मूढो जन्तुर्ध्रुवमयमिति श्रीमता मोचनीय: ||
पादूयुग्मं भवदनुचरैरर्पितं  भक्तिनम्रे |
मौलौ कृत्वा वरवरमुने वर्ततां  तत्र धन्यः || ४४॥

தோஷைகாந்தீ துரித ஜலதி: தேசிகோ துர்மதீநாம் |
மூடோ ஜந்து: த்ருவமயமிதி ஸ்ரீமதா மோசநீய: ||
பாதூயுக்மம் பவதநுசரை: அர்ப்பிதம் பக்தி நம்ரே |
மௌலௌ  க்ருத்வா வரவரமுநே வர்த்ததாம் தத்ர தந்ய: || 44

தோஷங்கள் நிறைந்தவன், பாபக்கடல், கெட்ட புத்தி உள்ளவர்களுக்குக்  குரு, இந்தப் ப்ராணி மூடன் என்று நினைத்து தேவரீரால் விடத்தக்கவன்; உமது பக்தர்களால் பக்தியால் வணங்கி தலையில் வைக்கப்பட்ட இரண்டு திருவடிகளை வைத்து அதனால் தன்யனானேன்.  

नित्यं निद्राविगमसमये निर्विशङ्कैरनेकै: –
त्वन्नामैव श्रुतिसुमधुरं गीयमानं  त्वदीयैः  ||
प्रायस्तेषां प्रपदनपरो निर्भरस्त्वत्प्रियाणां |
पादाम्भोजे वरवरमुने ! पातुमिच्छाम्याहं ते || ४५॥

நித்யம் நித்ரா விகம  ஸமயே நிர்விஷங்கைரநேகை: –
த்வந்நாமைவ ச்ருதி ஸுமதுரம் கீயமாநம் த்வதீயை: ||
ப்ராயஸ் தேஷாம் ப்ரபதந பரோ நிர்ப்பரஸ் த்வத் ப்ரியாணாம் |
பாதாம்போஜே  வரவரமுநே! பாதுமிச்சாம்யஹம் தே || 45

தினந்தோறும் தூங்கப் போகும்போதும் உம்முடையதான பல சங்கைகளால் காதுக்கு இனிமையான  உமது திரு நாமத்தையே பாடிக்கொண்டு உமது அன்பர்களான அவர்களின் ப்ரபத்தியில் நோக்கமுள்ளவனாக நிர்ப்பரனாக நான் உமது திருவடித்தாமரைகளையே பானம் பண்ண விரும்புகிறேன்.             

अन्तःस्वान्तं कमपि मधुरं मन्त्रमावर्तयन्तीम्
उद्यद्बाष्पस्तिमितनयनामुज्झिताशेषवृत्तिम् ||
व्याख्यागर्भं वरवरमुने ! त्वन्मुखं वीक्षमाणां |
कोणे लीनः क्वचिदनुरसौ संसदं तामुपास्ताम् || ४६॥

அந்தஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ரமாவர்த்தயந்தீ –
முத்யத்பாஷ்பஸ்திமிதநயநாமுஜ்ஜிதாசேஷவ்ருத்திம் ||
வ்யாக்யாகர்ப்பம் வரவரமுநே த்வன்முகம் வீக்ஷமாணாம் |
கோணே லீந: க்வசிதநுரஸௌ ஸம்ஸதம் தாமுபாஸ்தாம் || 46

உள்ளத்துக்குள்ளேயே ஓர் இனிமையான மந்த்ரத்தை உருச் சொல்லிக்கொண்டு வெளிக்கிளம்புகிற அசைவற்றுக் கிடக்கிற கண் விழிகளை உடையதாயும் மற்றெல்லாத் தொழில்களையும் விட்டு, வரவரமுநியே! விளக்கிக் கூறுகிற உமது முகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிற அந்த கோஷ்டியில் ஒரு மூலையில் இருக்க வேண்டும்.

आबिभ्राणश्चरणयुगलीमर्पितां त्वत्प्रसादात् –
वारंवारं वरवरमुने ! वन्दमानेन मूर्ध्ना ||
शृण्वन्वाचः श्रुतिशतशिरस्तत्वसञ्जीविनीस्ते |
पश्यन्मूर्तिं परिषदि सतां प्रेक्षणीयो भवेयम् || ४७॥

ஆபிப்ராண: சரணயுகளீமர்ப்பிதாம் த்வத் ப்ரஸாதாத் –
வாதம் வாதம் வரவரமுநே வந்தமாநேந மூர்த்நா ||
ச்ருண்வண்வாச: ச்ருதி சத சிரஸ் தத்வ சஞ்ஜீவிநீஸ்தே |
பச்யந் மூர்த்திம் பரிஷதி ஸதாம் ப்ரேக்ஷணீயோ பவேயம் || 47

வரவரமுநியே! உமது அருளால் வைக்கப்பட்ட இரண்டு திருவடிகளையும் வணங்குகிற தலையால் அடிக்கடி சுமந்துகொண்டு, உமது பல உபநிஷத் வாக்யங்களின் உண்மைப் பொருளை விவரிக்கின்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு, உமது திருமேனியைப் பார்த்துக்கொண்டு பெரியோர்கள் அவையில் பார்க்கத்  தக்கவனாக வேணும்.

काले यस्मिन्कमलनयनं देवमालोकयिष्यन् –
निर्यासि त्वं वरवरमुने ! नित्ययुक्तैस्त्वदीयैः ||
अग्रे नृत्यन्नयमपि तदा गाहतां हर्षसिन्धौ |
मज्जम्मज्जम्मधुवनजुषां  वैभवं यूथपानाम् || ४८॥

காலேயஸ்மின் கமலநயனம் தேவமாலோகயிஷ்யன் –
நிர்யாஸித்வம் வரவரமுநே நித்யயுக்தைஸ்த்வதீயை : ||
அக்ரே ந்ருத்யந்நயமபி ததா காஹதாம் ஹர்ஷ ஸிந்தௌ
மஜ்ஜம் மஜ்ஜம் மதுமதந ஜூஷாம் வைபவம் யூதபாநாம் || 48

எந்த சமயத்தில் புண்டரீகாக்ஷனான எம்பெருமானை ஸேவிக்க உம்முடன் தினந்தோறும் கூடியிருக்கிற அடியார்களுடன் நீர் புறப்படுகிறீரோ அந்த சமயம் உமக்கு எதிரில் இந்த அடியேனும் கூத்தாடிக் கொண்டு ஆனந்தக் கடலில் அமிழ்ந்து அமிழ்ந்து மது வனத்தை அநுபவித்த வானரர்களுடைய வைபவத்தை நினைத்துப் ப்ரவேசிக்கட்டும்.             

भूत्वा पश्चात्पुनरयमथ व्योम्नि गोपायमानो |
भ्रूयः पार्श्वद्वितयसुषमासागरं गाहमानः ||
जल्पन्नुच्छैर्जयजय विभो ! जीवजीवेति वाचं |
शंसन्मार्गं वरवरमुने ! सौविदल्लो भवेयम् || ४९॥

பூத்வா பச்சாத் புநரயமத வ்யோம்நி  கோபாய மாநோ |
பூய: பார்ச்வத்விதய ஸுஷமா ஸாகரம் காஹமாந: ||
ஜல்பந்நுச்சை: ஜயஜய விபோ ஜீவ ஜீவேதி வாசம்  |
சம்ஸந் மார்க்கம் வரவரமுநே ஸௌவிதல்லோபவேயம் || 49

பிறகு ஆகாயத்தில் க்ரஹம் போல மறுபடி பின்புறத்தில் வந்து இரண்டு பக்கங்களிலும் காந்திக் கடலில் ப்ரவேசித்து உரத்த குரலில் ப்ரபுவே! நீ வாழ வேண்டும், வெற்றி உண்டாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு உமது வழியில் வழிகாட்டியாய் இருக்கக் கடவேன்.

देवी गोदा यतिपतिशठद्वेषिणौ रङ्गशृङ्गं |
सेनानाथो विहगवृषभः श्रीनिधिस्सिन्धुकन्या ||
भूमानीलागुरुजनवृतः पूरुषश्चेत्यमीषा –
मग्रे  नित्यं वरवरमुनेरङ्घ्रियुग्मं प्रपद्ये || ५०॥ 

தேவீ கோதா யதிபதி சடத்வேஷிநௌ ரங்கச்ருங்கம் |
ஸேநா நாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா ||
பூமா நீளா குருஜந வ்ருத: பூருஷச்சேத்ய மீஷாம் |
அக்ரே நித்யம் வரவரமுநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 50

தேவத்தன்மை குன்றாத கோதை, எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்க விமானம், சேனை முதலியார், பக்ஷி ச்ரேஷ்டனான ஸ்ரீ பெரிய திருவடி, பெருமாள், பிராட்டி, ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி முதலிய ஆசார்யர்களுடன் கூடிய புருஷன், இவர்கள் எல்லார் எதிரிலும் தினந்தோறும் உமது திருவடிகளைச் சரணாகதி அடைகிறேன்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரவரமுனி சதகம் – பகுதி 4

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 3

सर्वावस्थासदृशविविधाSशेषगस्त्वत्प्रियाणां |
त्यक्त्वा भर्तुस्तदपि परमं धाम तत्प्रीतिहेतो: ||
मग्नानग्नौ वरवरमुने मादृशानुन्निनीषन् |
मर्त्याSवासो भवसि भगवन् ! मङ्गलं रङ्गधाम्नः || ३१॥

ஸர்வாவஸ்தா ஸத்ருச விவிதா சேஷகஸ்த்வத் ப்ரியாணாம் |
த்யக்த்வா பர்த்துஸ் ததபி பரமம் தாம தத் ப்ரீதி ஹேதோ: ||
மக்நாநக்நௌ வரவரமுநே மாத்ருசாநுந்நீநீஷன் |
மர்த்யாவாஸோ பவஸி பகவந் மங்கலம் ரங்கதாம்ந:  || 31

எல்லா தசைகளிலும் தகுந்த பலவகையான கைங்கர்யத்தைச் செய்கிற வரவரமுநியே! பகவானே! அவருக்குப் ப்ரீதி உண்டாவதற்காக அவருடைய அந்தப் பரமபதத்தையும் விட்டு (ஸம்ஸார) அக்னியில் மூழ்குகிற என்னைப் போன்றவர்களை மீட்பதற்கு விரும்பி மனிதர்களுடன் வசிப்பவராக ஸ்ரீரங்கத்திற்கு மங்களாவஹமாக வந்திருக்கிறீர்.

प्रत्यूषार्कद्युतिपरिचयस्मेरपद्माभिताम्रं |
पश्येयं तद्वरवरमुने पदयुग्मं त्वदीयम् ||
पाथो बिन्दुः परमणुरपि स्पर्शवेधी यदीयो |
भावेभावे विशयमुशितान्पावयत्येव लोकान् || ३२॥

ப்ரத்யூஷார்க்க த்யுதி பரிசய ஸ்மேர பத்மாபி தாம்ரம் |
பச்யேயம் தத் வரவரமுநே பாதயுக்மம் த்வதீயம்  ||
பாதோ பிந்து: பரமணுரபி ஸ்பர்ச வேதீ யதீயோ |
பாவே பாவே விஷயமுஷிதாந் பாவயத்வேவ லோகாந் || 32

விடிந்த ஸூர்யன் கிரணத்தின் ஸம்பந்தத்தால் அழகிய தாமரைபோல் சிவந்த உமது இரண்டு திருவடிகளையும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கக் கடவேன். அந்தத் திருவடி ஸம்பந்தம் பெற்ற நீர்த்துளியும் தனது ஸம்பந்தம் பெற்ற உலகங்களை (மனிதர்களை) சுத்தப் படுத்துகிறது. உலகங்களால் அபஹரிக்கப்பட்ட மனிதர்களை அடிக்கடி சுத்தப் படுத்துகிறது.

नित्ये लोके निवसति पुनः श्रीमति क्ष्मागतानां
दूरिभावः प्रभवति पुरा दुष्कृतदुर्विपाकैः ||
संप्रतयेवं सकलसुलभो यद्यपि त्वं दयाब्धे
मामेवैकं वरवरमुने मन्यसे वर्जनीयम् || ३३॥

நித்யேலோகே நிவஸதி புந: ஸ்ரீமதி க்ஷ்மாகதாநாம்
தூரீ பாவம் ப்ரபவதி புரா துஷ்க்ருதை: துர்விபாகை: ||
ஸம்ப்ரத்யேவம் ஸகல ஸுலபோ யத்யபித்வம் தயாப்தே
மாமேவைகம் வரவர முநே மன்யஸே வர்ஜநீயம் || 33

நித்ய லோகமான பரமபதத்தில் நீர் வஸிக்கும்போது பூமியில் உள்ளவர்களுடைய பாபங்களால் அணுக முடியாதவராயிருந்தும் இப்போது எல்லாருக்கும் ஸுலபராக இருக்கிறீர். கருணைக் கடலே! வரவர முநியே! என் ஒருவனையே விடாத் தகுந்தவனாக நினைக்கிறீர்.

त्वत्पादाब्जप्रणयविधुरो दूरगस्त्वत्प्रियाणां |
त्वत्सम्बन्धस्मरणविमुखो वीतरागस्त्वदुक्तौ ||
त्वत्कैङ्कर्यत्वदुपसदनत्वत्प्रणामाSनभिज्ञो |
दूये दूरं  वरवरमुने ! दोषलक्षैकलक्ष्यम् || ३४॥

த்வத் பாதாப்ஜ ப்ரணய விதுரோ தூரகஸ்த்வத் ப்ரியாணாம் |
த்வத் ஸம்பந்தஸ்மரண விமுகோ வீத ராகஸ் த்வதுக்தௌ  ||
த்வத் கைங்கர்ய த்வத் உபஸதந த்வத் ப்ரணாமா நபிஞ்ஜோ |
தூயே தூரம் வரவரமுநே தோஷ லக்ஷைக லக்ஷ்யம் || 34

உமது திருவடித் தாமரைகளில் அன்பில்லாதவன், உமது ஸம்பந்தத்தை நினைக்காதவன், உமது பக்தர்களுக்கு வெகு தூரத்தில் இருப்பவன், உமது வார்த்தைகளில் ஆசையற்றவன், உமது கைங்கர்யம் உம்மை அநுஸரிப்பது உம்மை வணங்குவது முதலியன அறியாதவன் ஆன நான் லக்ஷக் கணக்கான குற்றங்களுக்கிருப்பிடமாக வெகு தூரத்திலேயே வருந்துகிறேன்.

प्रादुर्भूतप्रचुरमतयो ये परब्रह्मसाम्यात् |
पश्यन्तस्तत्पदमनुपं ये पुनश्शुध्दसत्वाः ||
सर्वैरेतैर्वरवरमुने ! शश्वदुद्दिश्य सेव्यम् |
कांक्षत्येतत्कथमयमहो कामकामः पदाब्जं || ३५॥

ப்ராதுர்பூத ப்ரசுர மதயோ யே பர ப்ரம்ஹஸாம்யாத் |
பச்யந்தஸ்தத் பதமநுபவம் யே புந: சுத்த ஸத்வா: ||
ஸர்வைரேதைர் வரவரமுநே சச்வதுத்திச்ய ஸேவ்யம் |
காங்க்ஷத்யேதத் கதமயமஹோ காம காம: பதாப்ஜம் || 35

மலர்ந்த புத்தியுடைய எவர்கள் பரமபதத்தைப் பரப்ரஹ்மத்துக்கு ஒப்பாகக் காண்கிறார்களோ சுத்த ஸத்வ குணமுள்ளவர்கள் எவர்களோ அவர்கள் உமது திருவடியை வரவரமுநியே! அடிக்கடி பூசித்து விரும்புகிறார்கள். இதென்ன ஆச்சர்யம் !

प्राप्तः क्षेमं प्रकृतिमधुरैः प्रागपि त्वत्कटाक्षैः |
सोऽयञ्जन्तुस्त्वदनुभजनं त्वत्त एवाप्तुमिच्छन् ||
क्रन्दत्युच्चै: कलुषमतिभिः संवसन् कामकामैः |
कालक्षेपो वरवरमुने ! तत्कथं युज्यते ते || ३६॥

ப்ராப்த: க்ஷேமம் ப்ரக்ருதி மதுரை: ப்ராகபி த்வத் கடாக்ஷை: |
ஸோயம் ஜந்து: ஸ்த்வதநுபஜநத்வத்த ஏவாப்துமிச்சந்  ||
க்ரந்தத்யுச்சை: கலுஷமதிபி: ஸம்வஸந் காம காமை: |
காலக்ஷேபோ வரவரமுநே தத்கதம் யுஜ்யதே தே || 36

இயற்கையில் இனிமையான உமது கடாக்ஷங்களால் முந்தியே க்ஷேமத்தை அடைந்த இந்த பிராணி  உம்மைத் துதிப்பதை உம்மிடமிருந்தே அடைய விரும்பி உலக விஷயங்களில் பற்றுள்ள கலக்கமுள்ள புத்தியுள்ளவர்களுடன் வசித்துக்கொண்டு கதறுகிறது. வரவரமுநியே! உமக்குக் காலக்ஷேபம் எப்படி நடைபெறுகிறது?

कोणैरक्ष्णः कुमनसमिमं निर्मलं कल्पयित्वा |
हातुं  दूरे वरवरमुने ! हा !!! कथं युज्यते ते ||
पाथः पातुं प्रयतनपरःपंकिलं शोधयित्वा |
पंके मुञ्चन् पुनरिदमतः प्राप्नुयादेव किंवा || ३७॥

கோணைரக்ஷ்ண: குமநஸ  மிமம் நிர்மலம் கல்பயித்வா |
ஹாதும் தூரே வரவரமுநே ஹா கதம் யுஜ்யதே தே  ||
பாத: பாதும் ப்ரயதநபர: பங்கிலம் சோதயித்வா |
பங்கேமுஞ்சந் புநரிதமத: ப்ராப்நுயாதேவ  கிம்வா ||
37

வரவரமுநியே! தேவரீர் திருக்கண்களின் மூலையால் கெட்ட மனமுள்ள என்னைப் பரிசுத்தப்படுத்தி விட்டுவிடுவதற்கு எப்படித் தகும்? தண்ணீர் குடிக்க முயற்சியுள்ள ஒருவன் கலங்கிய நீரை சுத்தப் படுத்தி மறுபடி சேற்றில் விட்டு அதையே மறுபடி ஏற்றுக் கொள்வானா?

कालः किंस्विन्न भवति समं कांक्षितः कांक्षितानां |
यस्मिन्नस्मादनलजलधेरुत्प्लुतस्त्वांनमस्यन् ||
सिक्तः श्रीमन् ! वरवरमुने ! शीतलैस्त्वत्कटाक्षैः –
मुक्तस्तापैरमृतमतुलं गाहते मोदमानः || ३८॥

கால: கிம்ஸ்விந்ந பவதி ஸமம் காங்க்ஷித: காங்க்ஷிதாநாம் |
யஸ்மிந் அஸ்மாத் அநல ஜலதேருப்லுதஸ்த்வாம் நமஸ்யந் ||
ஸிக்த: ஸ்ரீமந் வரவரமுநே சீதலை: த்வத் கடாக்ஷை:
முக்தஸ்தாபைரம்ருதமதுலம் காஹதே மோதமாந: || 38

விரும்பத் தகுந்தவைகளுக்குள் விரும்பாத தகுந்த காலம் நமக்குக் கிட்டாதா? இந்த நெருப்புக்குக் கடலிலிருந்து மேலே கிளம்பி உம்மை வணங்கிக்கொண்டு வரவமுநியே குளிர்ந்த உமது பார்வைகளால் நனைக்கப்பட்டு தாபங்களால் விடுபட்டவனாகி நிகரற்ற அமுதக் கடலை சந்தோஷத்துடன் ப்ரவேசிப்பேன்.

कामक्रोधक्षुभितत्दृदयाः कारणं वर्जयित्वा
मर्त्यौपम्यं वरवरमुने! ये पुनर्मन्वते ते ||
दुष्टं तेषामभिमततया  दुर्वसं देशमृच्छन्  –
अन्तःस्वान्तं कथमपि मिथो भावयेयं भवन्तम् || ३९॥

காமக்ரோத க்ஷுபித ஹ்ருதயா: காரணம் வர்ஜயித்வா
மர்த்யௌபம்யம்வரவரமுநே யே புநர் மந்வதே தே  ||
துஷ்டம் தேஷாமபிமததயா துர்வஸந் தேசம்ருச்சந்
அந்த: ஸ்வாந்தம் கதமபி மிதோ பாவயேவம் பவந்தம் || 39

காமக்ரோதங்களால் கலங்கிய மனதையு டையவர்கள் காரணமின்றியே வரவரமுநியே! உம்மை மனிதர்களுக்கு ஸமமாக நினைக்கிறார்கள். அவர்கள் விருப்பத்திற்காகக் கெட்ட என் மனத்தில் உம்மை ச்ரமப்பட்டு நினைக்கக் கடவேன்.

नामैतत्ते नवनवरसं नाथ ! सङ्कीर्त्यनृत्यन् –
अन्तःकर्तुं वरवरमुने! नित्यमिच्छत्ययं त्वाम् ||
अर्ध्दंनिद्रा हरति दिवसस्यार्द्धमन्यन्नृशंसो |
वासो मूढैर्मलिनमतिभिर्वाक्प्रवृत्तिं निरुन्धे || ४० ॥

நாவை தத்தே நவநவ ரஸம் நாத ஸங்கீர்த்ய ந்ருத்யந் |
அந்த: கர்த்தும் வரவரமுநே நித்யமிச்சத்யயம் த்வாம் ||
அர்த்தம் நித்ரா ஹரதி திவஸஸ்யார்த்த மந்யந்ந்ருசம்ஸ
வாஸோ மூடைர் மலிநமதிபி: வாக் ப்ரவ்ருத்திம் நிருந்தே: || 40

வரவரமுநியே! நாதனே! புதிய ரஸமுள்ள இந்தத் திருநாமத்தைச் சொல்லி ஆடிக்கொண்டு மனதிலேயே வைத்துக்கொள்ள இவன் எண்ணுகிறான். இதில் பாதி காலம் தூக்கத்தால் போகிறது. பகலில் பாதி பாகம் வேறு வாஸத்தில் மூடமானவர்களால் வாக் ப்ரவ்ருத்தியையும் தடுக்கிறது.                                       

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

வரவரமுனி சதகம் – பகுதி 3

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 2

कालोSनन्तः  कमलजनुषो न व्यतीता: कियन्तः
तिर्यङ्मर्त्यस्तृणवनलताः प्रस्तारोSप्यभूवम् ||
इत्थं व्यर्थैजनिमृतिशतैरेनसामेव पात्रं |
दिष्ट्या सोऽहं वरवरमुने दृष्टिगम्यस्तवासम् || २१॥

காலோநந்த: கமல ஜனுஷோ ந வ்யதீதா: கியந்த:
திர்யங் மர்த்யஸ் த்ருண வந லதா: ப்ரஸ்தரோவாப்யபூவம்|
இத்தம் வ்யர்த்தைர் ஜநி ம்ருதி சதைரேநஸாமேவ பாத்ரம்
திஷ்ட்யா ஸோஹம் வரவரமுநே த்ருஷ்டி கம்யஸ்தவாஸம் || 21

காலமோ முடிவில்லாதது. ப்ரம்மனுக்கு எத்தனை காலம் கடக்கவில்லை. திர்யக், மனுஷ்யன், புல்,  காட்டில் கொடி, புதர் , இப்படிப் பலவகையாக இருந்தேன். இது போல் வீணான பிறப்பு இறப்புகளால் பாபத்துக்கு உறைவிடமானேன். அப்படிப்பட்ட நான் தெய்வாதீனமாக, வரவரமுநியே! உமது பார்வைக்கு இலக்காக ஆனேன்.

मुक्त्वैव त्वां वरवरमुने सम्पदाम् मूलकन्दं |
क्षेमं किन्चिन्नखलु सुलभं केशवैकान्त्यभाजाम् ||
दृष्टो  दैवात्तव पुनरनुक्रोशकोशैरपाङ्गैः –
निर्मर्यादः पशुरपि भृशं नीयते निर्मलत्वम् || २२॥

 

முக்த்வைவத்வாம் வரவரமுநே ஸம்பதாம் மூல கந்தம் |
க்ஷேமம் கிஞ்சிந்  ந கலு ஸுலபம் கேசவைகாந்த்ய பாஜாம் ||
த்ருஷ்டோ தைவாத் தவ புநரநுக்ரோசகோசைரபாங்கை: |
நிர் மர்யாத: பசுபரபிப்ருஷம் நீயதே நிர்மலத்வம் || 22

வரவர முநியே! செல்வங்களுக்கு மூல காரணமான உம்மை விட்டு, கேசவனிடத்திலேயே பக்தி செலுத்துபவர்களுக்கு ஒரு வகை க்ஷேமமும் இல்லையன்றோ! விதி வசத்தால் உமது தயை நிறைந்த பார்வைகளால் பார்க்கப் பட்டவன் ஒன்றும் அறியாத பசுவாயிருந்த போதிலும் மிகவும் பாபமற்றவன் ஆகிறான்.

मर्त्यङ्कञ्चन्वरवरमुने ! मानहीन: प्राशंसन्  |
पादौ तस्य प्रपदनपरः प्रत्यहं सेवमानः ||
तच्छेषत्वं  निरयमपि यश्लाघ्यमित्येव भुङ्क्ते |
सोऽयं प्राप्तः कथमिव परं  तवत्पदैकान्त्यवृत्तम् || २३॥

மர்த்யங்கஞ்சந் வரவரமுநே மாந ஹீந ப்ரசம்ஸந் |
பாதௌ தஸ்ய ப்ரபதன பர: ப்ரத்யஹம் ஸேவமாந: ||
தச்சேஷத்வம் நிரயமபிய: ஷ்லாக்யமித்யேவ புங்க்தே |
ஸோயம் ப்ராப்த: கதமிவ பரம் த்வத்பதைகாந்த்யவ்ருத்திம் || 23

வரவரமுநியே! மனிதன் ஒருவனை அஹங்காரமற்ற எவன் ஒருவன் புகழ்ந்து அவனுடைய திருவடிகளில் சரணாகதி நோக்குடன் தினந்தோறும் சேவை செய்துகொண்டு அவனுடைய அடிமையை நரகத்துக் கொப்பாக இருந்தும் சிறந்ததாக அனுபவிக்கிறானோ அப்படிப்பட்ட நான் இதோ வந்தேன்; எப்படியோ உம் திருவடிகளில் அடிமையையே தொழிலாகக் கொண்டேன்.

नित्यानां यः प्रथमगणनां  नीयसे शस्त्रमुख्यैः |
कृत्याSSकृत्या भवसि कमलाभर्तुरेकान्तमित्रम्  ||
देवः स्वामी स्वयमिह भवन्सौम्यजामातृयोगी |
भोगीश त्वद्विमुखमपि मां भूयसा पश्यसित्वम्  || २४॥

நித்யாநாம் யத் ப்ரதம கணநாம் நீயஸே ஷாஸ்த்ர முக்யை: |
க்ருத்யாSSக்ருத்யா பவஸி கமலா பர்துரேகாந்த மித்ரம் ||
தேவ:ஸ்வாமீ  ஸ்வயமிஹ பவந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ |
போகீஷத்வத் விமுகமபிமாம் பூயஸா பஷ்யசி த்வம் || 24

எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர், செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் — தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே! உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.

अर्थौदार्यादपि च वचसामञ्जसा सन्निवेशात् –
आविर्बाष्पैरमलमतिभिर्नित्यमाराधनीयम्  ||
आशासानैर्वरवरमुने नित्यमुक्तैरलभ्यं |
मर्त्यो लब्धुं प्रभवति कथं मद्विधः श्रीसुखं ते  || २५॥

அர்த்த ஒளதார்யாத் அபிச வசசாமஞ்சஸா ஸந்நிவேசாத் |
ஆவிர் பாஷ்பைரமல மதிபி: நித்ய மாராதநீயம் ||
ஆசாஸாநைர் வரவரமுநே நித்ய முக்தைரலப்யம் |
மர்த்யோ லப்தும் ப்ரபவதி கதம் மத்வித: ஸ்ரீமுகம் தே || 25

ஆழ்ந்த பொருளுடைமையாலும், வெகு சீக்கிரத்தில் வாக்கியங்களை அமைப்பதாலும், வெளித்தோன்றுகிற கண்ணீர்களை உடைய தூய புத்தி உள்ள மங்களாசாஸனம் செய்கின்றவர்களால் தினந்தோறும் கௌரவிக்கத்  தகுந்ததும் நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் கிடைக்காததுமான உமது திருமுக மண்டலத்தை என் போன்ற மனிதன் எப்படி அடைய முடியும்?

साराSसारप्रमितिरहितस्सर्वथा  शासनं  ते |
सद्यः श्रीमन् ! कपिकरकृतां  मालिकामेव कुर्याम् ||
नोचेदेतद्वरवरमुने ! दूरदूरं  श्रुतीनाम् ||
मौलौ  कुर्यात्पुरुषवृषभो  मैथिलीभागधेयम्  || २६॥

ஸாராஸார ப்ரமிதி  ரஹித: ஸர்வதா ஷாஸநம் தே |
ஸத்ய ஸ்ரீமந் கபிகர க்ருதாம் மாலிகாமேவ குர்யாம் ||
நோசேதே தத் வரவரமுநே! தூர தூர: ச்ருதீநாம் ||
மௌலௌ குர்யாத் புருஷ வ்ருஷபோ மைதிலீ  பாகதேயம் || 26

நன்று தீதென்றறிவற்றவனே எல்லா  விதத்திலும் உமது நியமனத்தைக் குரங்குக்கை மாலையாகச் செய்பவன். ஸ்ரீமானே! இல்லாவிட்டால் உபநிஷத்தில் இந்த மைதிலியின் வைபவத்தை வெகு தூரத்தில் செய்பவன் புருஷர்களின் சிறந்தவன்.

लक्ष्यं त्यक्त्वा यदपि विफलो जायते रामबाणो !
वाणी दिव्या वरवरमुने ! जातु नैवन्त्वदीयम् ||
सोऽयं  सर्वम्मदभिलषितं वर्षति श्रीसुखाब्द: –
तस्मै नित्यन्तदिह परमं धाम कस्माद्दुरापम् || २७॥
प्रेमस्थानं  वरवरमुने ! सन्तु सन्तश्शतं ते |

லக்ஷ்யம் த்யக்த்வா யதபி விபவோ ஜாயதே ராம பாணோ |
வாணீ திவ்யா வரவரமுநே ஜாது நைதத் த்விதீயா ||
ஸோயம் ஸர்வம் மதபிலஷிதம் வர்ஷதி ஸ்ரீ முகாப்த: |
தஸ்யை நித்யம் ததிஹ பரமம் தாம கஸ்மாத் துராபம் || 27

வரவர முநியே! ஸ்ரீராம பாணமும் குறிதவறி வீணாக ஆனாலும் ஆகலாம், ஆனாலும் உமது வாக்கு ஒருபோதும் வீணாவதில்லை. அப்படிப்பட்ட இந்த ஸ்ரீமுக வர்ஷம் என் இஷ்டத்தை எல்லாம் வர்ஷித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவனுக்கு நித்யமான பரமபதம் ஏன் கிடைக்காமல் போகிறது?

प्रेमस्थानं  वरवरमुने ! सन्तु सन्तश्शतं ते |
तुल्यः को वा वरदगुरुणा तेषु नारायणेन ||
सानुक्रोशस्स तु मयि दृढं सर्वदोषास्पदेस्मिन् |
मामेवं ते मनसि कुरुते मत्समः को हि लोके || २८॥

ப்ரேமஸ்தாநம் வரவரமுநே ஸந்து ஸந்த: ஷதம் தே |
துல்ய: கோ வா வரத குருணா தேஷு நாராயணேன ||
ஸாநுக்ரோஷஸ் ஸது மயி த்ருடம் ஸர்வ தோஷாஸ்பதேஸ்மிந் |
மாமேவம் தே மநஸி குருதே மத் ஸம: கோ ஹி லோகே || 28

வரவர முநியே! உமது அன்புக்குரிய பெரியோர்கள் பலர் இருக்கட்டும். அவர்களில் வரத நாராயண குருவுக்கு ஒப்பானவர்கள் எவர்? அந்த வரத நாராயண குருவானவர் என்னிடம் திடமான அன்பு கொண்டவர். நானோ எல்லாக் குறைகளுக்கும் உறைவிடம். உமது திருவுள்ளத்தில் என்னை இவ்விதம் செய்கிறார், எனக்கு நிகர் இவ்வுலகில் யார் இருக்கிறார்கள்?

भक्त्युत्कर्षैर्दिशति  यदि मे पादपद्मे त्वदीये |
तस्मादस्मै भवति वरदस्सार्थनामा गुरुर्मे ||
यद्वा तस्मै वरवरमुने ! यद्यहं प्रेमयुक्तो |
धन्यस्त्वं मामनुभजसि तत्किन्न मन्ये यदन्यैः || २९॥

பக்த்யுத்கர்ஷம் திஷதி யதி மே பாத பத்மே த்வதீயே  |
தஸ்மாதஸ்மை பவதி வரதஸ்ஸார்த்த நாமா குருர்மே  ||
யத்வா தஸ்மை வரவரமுநே யத்யஹம் ப்ரேமயுக்த: |
தந்யஸ்த்வம் மாம் அநு பஜஸி தத் கிந்நு மந்யே யதந்யை: || 29

உமது திருவடித் தாமரைகளில் எனக்கு பக்தியைத் தருகிற எனது வரதகுரு பொருள் செறிந்த பெயர் படைத்தவராவார். அல்லது, வரவர முநியே! அவர் பொருட்டு நான் அன்புடையவன் ஆனால் நீர் தந்யர் ஆகிறீர், என்னை அநுஸரித்தவர் ஆகிறீர். ஆகவே மற்றவர்களைப் பற்றி என்ன நினைப்பேன்!

यत्सम्बन्धाद्भवति सुलभं यस्य कस्याSपि  लोके |
मुक्तैर्नित्यैरपि  दुरधिगं  दैवतं  मुक्तिमूलम् ||
तं त्वामेवं वदति वरदे सौह्र्दं मे यदि स्यात् |
तस्यैव स्याद्वरवरमुने  सन्निधौ  नित्यवासः || ३०॥

யத் ஸம்பந்தாத் பவதி ஸுலபம் யஸ்ய கஸ்யாபி லோகே |
முக்தைர் நித்யைரபி துரதிகம் தைவதம் முக்தி மூலம்  ||
தம் த்வாமேவம் வததி வரதே ஸௌஹ்ருதம் மே யதி ஸ்யாத் |
தஸ்யைவஸ்யாத் வரவரமுநே ஸந்நிதௌ நித்ய வாஸ: || 30

இவ்வுலகில் எவன் ஒருவனுக்கும் எவருடைய ஸம்பந்தத்தால் முக்தர்களுக்கும் நித்யர்களுக்கும் அடையமுடியாத முக்தி காரணமான தேவதை ஸுலபமாகக் கிடைக்கிறதோ அப்படிப்பட்ட உம்மை இவ்வாறு சொல்லுகிற வரதகுரு வினிடத்தில் எனக்கு ஸ்நேஹம் இருக்குமானால் வரவரமுநியே! அவர் அருகிலேயே நித்ய வாஸம் உண்டாகட்டும்.  

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரவரமுனி சதகம் – பகுதி 2

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 1

त्वम्मे बन्धुस्त्वमसि जनकस्त्वं सखा देशिकस्त्वम् |
विद्या वृत्तं सुकृतमतुलं वित्तमप्युत्तमं त्वम् ||
आत्मा शेषी भवसि भगवन् ! आन्तरश्शासिता त्वं |
यद्वा सर्वं वरवरमुने! यद्यदात्मानुरूपं || ११   ||

த்வம் மே பந்து: த்வமஸி ஜநக: த்வம் ஸகா தேஷிகஸ்த்வம் |
வித்யா வ்ருத்தம் ஸுக்ருதமதுலம் வித்தமப்யுத்தமம் த்வம் ||
ஆத்மாஷேஷீ பவஸி பகவந் ஆந்தர: ஷாஸிதாத்வம் |
யத்வா ஸர்வம் வரவரமுநே! யத்யத் ஆத்மாநுரூபம். || 11||

நீரே எனக்கு உறவினரும், காரணபூதரும், தோழரும், ஆசிரியரும், கல்வியும், நன்னடத்தையும், நிகரில்லாத புண்யமும், சிறந்த தனமும், ஆத்மா என்னும் தாரகமும், தேவரீரே அடியேனை உள் இருந்து நியமிக்கும் ஸேஷியும், ஸேஷனுக்கு ஏற்ற எல்லாமும் ஆவீர்.

आम्नायेषु स्मृतिभिरमितैस्सेतिहासै: पुराणैः
दृश्यं यत्नैर्यदिह विदुषां देशिकानां प्रसादात्  ||
स्वैरालापैस्सुलभयसि तत्पञ्चमोपायतत्वम्
दर्शंदर्शं वरवरमुने दैन्यमस्मद्विधानाम् || १२॥

ஆம்நாயேஷு ஸ்ம்ருதிபிரமிதைஸ் ஸேதிஹாஸை : புராணை:
த்ருஷ்யம் யத்நை: யதிஹ விதுஷாம் தேஷிகாநாம் ப்ரஸாதாத் ||
ஸ்வைராலாபைஸ் ஸுலபயஸி தத் பஞ்சமோபாய தத்வம்
தர்ஷம் தர்ஷம் வரவரமுநே தைந்யம் அஸ்மத் விதாநாம். || 12||

அளவற்ற ஸ்ம்ருதிகளாலும் இதிஹாசங்களுடன் கூடிய புராணங்களாலும் அறிஞர்களான ஆசார்யர்களுடைய கருணையாலும் முயற்சிகளாலும் எது அறியப்படுகிறதோ அந்த ஐந்தாவது (பஞ்சம உபாயம்) உபாயத்தின் உண்மையை என்னைப் போன்றவர்களின் எளிமையைப் பார்த்துப் பார்த்து ஸாதாரண பேச்சுகளால் எளிதாகப் புரியச் செய்கிறீர்!

सत्सम्बन्धो भवति हितमित्यात्मनैवोपदिष्टं |
शिष्टाचारं दृढयितुमिह श्रिसखो रङ्गधुर्यः ||
द्वारं प्राप्य प्रथितविभवो देवदेवस्त्वदीयं |
दृष्ट्वैव त्वां वरवरमुने दृश्यते पूर्णकामः || १३॥

ஸத்ஸம்பந்தோ பவதி ஹிதமித்யாத்மநைவோபதிஷ்டம் |
ஷிஷ்டாசாரம் த்ருடயிதுமிஹ ஸ்ரீ ஸகோ ரங்கதுர்ய: ||
த்வாரம் ப்ராப்ய ப்ரதித விபவோ தேவ தேவஸ்த்வதீயம் |
த்ருஷ்ட்வைவத்வாம் வரவரமுநே த்ருஷ்யதே பூர்ண காம:  || 13||

நல்லோர் உறவு உபாயமாகிறது என்று தாம் உபதேசித்த சிஷ்டாசாரத்தை உறுதிப்படுத்த பெரிய பிராட்டியுடன் கூடிய ஸ்ரீரங்கநாதன் ப்ரஸித்த மஹிமை உடைய தேவதேவர் உமது வாயிற்படியை அடைந்து உம்மை ஸேவித்த பின்பே பூர்த்தி அடைந்த எண்ணம் உடையவராகக் காணப்படுகிறார்.

सोऽयम्भूयस्स्वयमुपगतो देशिकैस्संसदं ते |
श्रुत्वा गूढं शठरिपुगिरामर्थतत्वं त्वदुक्तम् ||
आगोपालं प्रथयतितरामद्वितीयं त्वदीयं |
वाचां दूरं वरवरमुने वैभवं शेषशायी || १४॥

ஸோயம் பூய: ஸ்வயமுபகதோ தேஷிகைஸ் ஸம்ஸதம் தே|
ஷ்ருத்வா கூடம் ஷடரிபு  கிராமர்த்ததத்வம் த்வதுக்தம் ||
ஆகோபாலம் ப்ரதயதிதராமத்விதீயம் த்விதீயம்|
வாசாம் தூரம் வரவரமுநே வைபவம் ஷேஷஷாயீ ||  14||

அப்படிப்பட்ட இந்த அரவணைப் பள்ளியான் மறுபடி உம்மை ஆசார்யராக அடைந்து உம்மால் கூறப்பட்ட ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளின் உண்மைப் பொருளை ரஹஸ்யத்தில் கேட்டு நிகரில்லாத வாக்குக்கு எட்டாத உமது வைபவத்தை மூடரும் அறியப் பரவச் செய்கிறார்.

सिद्धोपायस्त्वमिह सुलभो लम्भयन्पूरुषार्था-
नज्ञातांश्च प्रथयसि पुनः यत्ततो देशिकस्त्वम् ||
देवी लक्ष्मी भवसि दयया वत्सलत्वेन च त्वं |
कोसौ यस्त्वां वरवरमुने! मन्यते नात्मानीनम् || १५॥

ஸித்தோபாயஸ்த்வமிஹ ஸுலபோ லம்பயந் பூருஷார்த்தாந்
அஞ்ஞாதாஷ்ச க்ரதயதி புந: யத்ததோ தேஷிகஸ்த்வம் ||
தேவீ லக்ஷ்மீர் பவஸி தயயா வத்ஸலத்வேந ஸத்வம் |
கோஸௌ யஸ்த்வாம் வரவரமுநே மந்யதேநாத்மநீநம். ||  15||

இப்போது புருஷார்த்த லாபத்தைச் செய்துகொண்டு சுலபமான ஸித்தோபாயமான நீர் அறியாதவைகளை அறிவிப்பிக்கிறீர். ஆகையால் நீர் ஆசார்யராகவும் இருக்கிறீர். வாத்ஸல்யத்தாலும் கருணையாலும் பிராட்டி தேவி ஆகிறீர். வரவர முநியே! உம்மைத் தம்முடையனாக நினைக்காதவன் யார்?

नित्यं पत्युः परिचरणतो वर्णतो निर्मलत्वात्
वृत्या वाचां निबुधसरितश्चातुरीमुद्गिरन्त्या ||
शेषः श्रीमानिति रघुपतेरन्तरेणाऽपि वाणीः
को नाम त्वां वरवरमुने कोविदो नावगन्तुम् || १६॥

நித்யம் பத்யு: பரிசரணதோ வர்ணதோ நிர்மலத்வாத் |
வ்ருத்யா வாசாம் விபூதசரிதஸ் சாதுரீமுத்கிரந்த்யா ||
ஷேஷ ஸ்ரீமாநிதி ரகுபதேரந்தரேணாபி வாணீ: |
கோ நாமத்வாம் வரவரமுநே கோவிதோ நாவ கந்தும்.||  16||

தினந்தோறும் சேஷியானவனுக்குப் பணிவிடை செய்வதாலும் சுத்தமான நிறம் பெற்றிருப்பதாலும் தேவ கங்கையின் திறமையை வெளிப்படுத்துகின்ற வாக்கின் தன்மையாலும் சேஷன் ஸ்ரீமாந் என்று ரகுபதியான ஸ்ரீராமருடைய வார்த்தையை விட்டு எவர்தான் உம்மை அறிய ஸமர்த்தன்?      

सत्यं सत्यं पुनरिति पुरा सारविद्भिर्यदुक्तं |
ब्रूमश्श्रोत्रैश्शृणुत सुधियो मत्सरं वर्जयित्वा ||
तत्वं विष्णुः परमनुपमं तत्पदं प्राप्यमेवं |
तत्सम्प्राप्तौ वरवरमुनेर्देशिको दीर्घदर्शी || १७॥

ஸத்யம் ஸத்யம் புநரிதிபுரா ஸாரவித்பிர்யதுக்தம் |
ப்ரூம ஸ்ரோத்ரை: ஷ்ருணுத ஸுதியோ மத்ஸரம் வர்ஜயித்வா ||
தத்வம் விஷ்ணு: பரமநுபமம் தத்பதம் ப்ராப்யமேவம் |
தத் ஸம்ப்ராப்தௌ வரவரமுநி: தேஷிகோ தீர்க்கதர்சீ:  || 17||

ஸாரத்தை அறிந்தவர்களால் முன்பு உண்மை உண்மை என்று எது கூறப்பட்டதோ சொல்லுகிறோம் காதுகளால் கேளுங்கள் புத்திமான்களே! பகைமையை வீட்டுக் கேளுங்கள்; விஷ்ணுவே உண்மைப் பொருள், அவர் திருவடியே அடைய வேண்டியது, இப்படியே அதை அடைவதில் தீர்க்க தர்சியான ஆசார்யர் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.

लक्ष्यं यस्ते भवति भगवंश्चेतसश्चक्षुषो  वा |  
तुभ्यं द्रुह्यन्त्यपि कुमतयो ये वृथा मत्सरेण ||
मुक्तिं गच्छेन्मुषितकलुषो मोहमुध्दूय सोऽयं |
नानाभूतान्वरवरमुने नारकान्प्राप्नुयुस्ते || १८॥

லக்ஷ்யம் யஸ்தே பவதி பகவந் சேதஸஸ் சக்ஷுஷோ வா |
துப்யம் த்ருஹ்யந்த்யபி குமதயோ யே வ்ருதா மத்ஸரேண ||
முக்திம் கச்சேந்முஷித கலுஷோ மோஹமுத்தூய ஸோயம் |
நாநா பூதாந்  வரவரமுநே நாரகான் ப்ராப்நுயுஸ்தே. || 18||

ஹே பகவந்! உமது திருவுள்ளத்திற்கோ அல்லது பார்வைக்கோ எவன் குறியாகிறானோ அவன் பாபத்தைத் துறந்து மோகத்தை விட்டு மோக்ஷத்தை அடைவான். உம்மை வீணாக த்வேஷத்துடன் பார்த்த கெட்ட புத்தியுடன் த்ரோஹம் செய்பவர்கள் பலவகைப்பட்ட நரக துன்பத்தை அனுபவிப்பார்கள்.

स्वप्नेऽपि त्वत्पदकमलयोरञ्जलिं कल्पयित्वा |
श्रुत्वा यद्वा सकृदपि विभो ! नामधेयं त्वदीयम् ||
निष्प्रत्यूहं वरवरमुने! मानवः कर्मबन्धान् |
भस्मीकृत्य प्रविशति परं प्राप्यमेव प्रदेशम् || १९॥

ஸ்வப்நேபி த்வத் பத கமலயோரஞ்ஜலிம்  கல்பயித்வா |
ஷ்ருத்வா யத்வா ஸக்ருதபி விபோ நாமதேயம் த்வதீயம் ||
நிஷ்ப்ரத்யூஹம் வரவரமுநே மாநவ: கர்ம பந்தாந் |
பஸ்மீ க்ருத்ய பிரவிஷதி பரம் ப்ராப்யமேவ ப்ரதேஷம்.||  19||

உமது திருவடித் தாமரைகளில் கனவிலும் அஞ்ஜலி செய்தவன் அல்லது உமது திருநாமத்தை ஒரு தடவை கேட்டவனும் தடையினின்றி ஹே வரவரமுநியே! கர்ம பந்தங்களைச் சாம்பலாக்கி மிகவும் அடைய வேண்டிய இடத்தையே அடைகிறான்.

यस्मिन् किञ्चिद्विधिरपि यथा वीक्षितुं न क्षमः स्यात् |
वक्तुं शक्तः क इह भगवन्  ! वैभवं तत्त्वदीयम् ||
यस्सर्वज्ञः स खलु भगवानीक्षते तत्समग्रं |
तस्याऽपि त्वं वरवरमुने ! मन्यसे तत्वमेकः || २०॥ 

யஸ்மிந் கிஞ்சித் விதி ரபி  யதா வீக்ஷிதும் ந க்ஷம:ஸ்யாத் |
வக்தும் ஷக்த: க இஹ பகவந் வைபவம் தத் த்வதீயம் ||
ய: ஸர்வஜ்ஞ: ஸகலு பகவாந் ஈக்ஷதே தத் ஸமக்ரம் |
தஸ்யாபித்வம் வரவரமுநே மந்யஸே தத்வமேக: || 20||

எந்த விஷயத்தில் கொஞ்சம் ப்ரம்ஹனும் பார்ப்பதற்குத் திறமையற்றவனாகிறானோ ஹே பகவானே! அந்த விஷயத்தில் உமது மஹிமையை யார் சொல்ல வல்லவன்? எல்லாமறிந்த அந்த பகவானே அதை எல்லாம் பார்க்கிறான். அதற்கும் நீர் ஒருவரே தத்வமாக நிற்கிறீர்.      

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரவரமுனி சதகம் 1

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

वरवरमुनिवर्यपादुरत्नं वरदगुरुंगुरुमाश्रये गुरूणाम् |
उपनिशदुपगीतमर्थतत्वं तदिह यदीयवशम्वदं समिन्धे || १||

வரவரமுனிவர்ய பாது  ரத்னம் வரதகுரும் குருமாச்ரயே குரூணாம் |
உபநிஷதுப கீதமர்த்த தத்வம் ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே   || 1

வரவர முனிம் = மணவாள மாமுனிகளின்

பாது ரத்நம்  = திருவடிகளுக்கு ரத்நம்  போல் சிறந்த அடியார்

குரூணாம் குரு  =ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் இருப்பவர்

உபநிஷதுபகீதம் அர்த்த தத்வம்  = உபநிஷத்துகளில் ஓதப்படும் பொருளை

ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே =தம் அதீனமாக உடையவர் ஆகிய

வரதகுரும் ஆச்ரயே = வரதகுருவை வணங்குகிறேன்.

மணவாள மாமுனிகளின் திருவடிகளுக்கு ரத்னம் போல் சிறந்த அடியவர், ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் இருப்பவர், உபநிஷத்துகளில் ஓதப்படும் உண்மைப்பொருளைத் தம் அதீனமாக உடையவர் ஆன வரதகுருவை வணங்குகிறேன்.   

आकल्पमत्र भवतु प्रदयन् धरित्रीं
अस्मद्गुरुर्वरवरप्रवरो मुनीनाम |
अन्तस्तमश्शमनम् अन्तदृषां यदीयम्
अम्लानपल्लवतलारुणमङ्घ्रियुग्मम्  || २॥

ஆகல்பமத்ர பவது ப்ரதயந் தரித்ரீம்
அஸ்மத் குருர் வரவர ப்ரவரோ முநீநாம் |
அந்தஸ்தமச் சமநம் அந்தத்ருசாம்   யதீயம்
அம்லாந பல்லவ தலாருணம்அங்க்ரி யுக்மம் || 2

எந்த மணவாள மாமுனிகள் வாடாத தளிர்போல் சிவந்த இரண்டு திருவடிகள் பார்வை இழந்தவர்களுடைய உள் இருளைப் போக்க வல்லதோ அந்த முனிவர்களின் தலைவர், எமது குருவான மாமுனிகள் இந்த பூமியைப் ப்ரகாசப் படுத்திக்கொண்டு கல்பம் முடியும்வரை இங்கிருக்கவேண்டும்.

गुणमणिनिधये नमो नमस्ते गुरुकुलधुर्य नमो नमो नमस्ते |
वरवरमुनये नमो नमस्ते  यतिवरतत्वविदे नमो नमस्ते  ||  ३ ||

 

குணமணி நிதயே நமோ நமஸ்தே
குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |
வரவரமுநயே நமோ நமஸ்தே
யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே || 3

சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.    மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.

कुरु मयि विमलं दृगञ्चलं ते कुशलनिदानदयानिधे नमस्ते |
निशिचरपरिपन्थिनित्ययुक्ते निमिकुलमङ्गलदीपिके नमस्ते ||४ ||

குருமயிவிமலம் த்ருகஞ்சலம் தே
குசல நிதாந தயாநிதே நமஸ்தே |
நிசிசர பரிபந்தி நித்ய யுக்தே
நிமிகுல மங்கல தீபிகே நமஸ்தே || 4

க்ஷேமத்துக்குக் காரணமான கருணைக் கடலே! உமது சுத்தமான கடைக்கண் பார்வையை என்னிடம் செலுத்தும்.உமக்கு வணக்கம். அரக்கர்களின் விரோதிகளுடன் கூடியவளே நிமிகுல தீபமானவளே! வணக்கம். (நிமிகுல தீபம்= சீதாப்பிராட்டி)

रविसुतसुहृदे नमोनमस्ते रघुकुलरत्न नमो नमो नमस्ते |
दशमुखमकुटछिदे नमस्ते दशरथनन्दन सन्ततं नमस्ते ||   ५ ||

ரவி ஸுத ஸுஹ்ருதே நமோ நமஸ்தே
ரகுகுல ரத்ந நமோ நமோ நமஸ்தே  |
தச முக மகுடச் சிதோ  நமஸ்தே
தசரத நந்தன ஸந்ததம் நமஸ்தே || 5

சுக்ரீவனுடைய நண்பனான உனக்கு வணக்கம். ரகுகுல ச்ரேஷ்டரான உமக்கு வணக்கம். பத்துத்தலை உடைய ராவணன் கிரீடத்தை அறுத்த உமக்கு வணக்கம். தசரத குமாரனான உமக்கு வணக்கம்.

यदि पुनरभिधेयमद्वितीयं |
कृतिभिरतः परमीक्ष्यते न किञ्चित् ||
विजहति न हि जातु शुक्तिमुक्तं |
विशदशशिद्युतिमौक्तिकं विदग्धाः || ६ ||

யதி புனரபிதேய மத்விதீயம்
க்ருதிபிரத: பரமீக்ஷ்யதே நகிஞ்சித் |
விஜஹதி நஹிஜாது சுக்தி முக்தம்
விசத சதி  த்யுதி மௌக்திகம் விதக்தா: || 6

ஒப்புயர்வற்ற ஒரு பொருள் இருக்குமானால் இதற்கு மேல் முயற்சிகளால் ஒன்றும் காணப்படவில்லை என்றால் நிர்மல சந்த்ரன் போன்ற காந்தியுள்ள முத்தை நிபுணர்கள் சிப்பியிலிருந்து வந்தது என்று ஒருபோதும் விட மாட்டார்கள்.  

देव प्रसीद मयि दिव्यगुणैकसिन्धो |
दृष्ट्या  दयाSमृतदुहा सकृदीक्षितुं माम् ||
नैतेन कृत्यमसतेति न चिन्तयित्वा |
नारायणं गुरुवरं वरदं विदन्मे ||७ ||

தேவ ப்ரஸீத மயி திவ்ய குணைக ஸிந்தோ: |
த்ருஷ்ட்யா தயாம்ருத துஹா ஸக்ருதீக்ஷிதும் மாம்  ||
நைதேந க்ருத்வமஸிதேதி நசிந்தயித்வா  |
நாராயணம் குருவரம் வரதம் விதந் மே    || 7

தேவனே! திவ்ய குணங்களுக்குக் கடல் போன்றவரே! தயை எனும் அம்ருதத்தைப் பெருக்குகிற பார்வையால் என்னை ஒரு தடவை பார்ப்பதற்கு தயை புரிவீராக. இந்த அஸத்தால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்று நினைக்காமல் எனக்கு ஆசார்யர் வரத நாராயண குரு என்பதை அறிந்து அருள் புரிய வேண்டும்.

श्रीमद्रङ्गं जयतु परमंधाम तेजोनिधानं |
भूमा तस्मिन् भवतु कुशली कोपि भूमासहायः ||
दिव्यं तस्मै दिशतु विभवं देशिको देशिकानाम् |
काले काले वरवरमुनिः कल्पयन् मङ्गळानि || ८ ||

ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்கலானி ||  8

ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும். அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும். ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்கலங்களைச் செய்துகொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.

तस्यै नित्यम्प्रदिशति दिशे दक्षिणस्यै नमस्याम् |
यस्यामाविर्भवति जगताञ्जीवनी सह्यकन्या ||
पुण्यैर्यस्याः क्षितितलजुषं पूरुषं रङ्गभूषां |
पश्यन्धन्यो वरवरमुनिः पालयन्वर्तते नः || ९ ||

தஸ்யை நித்யம் ப்ரதிசத திசே தக்ஷிணஸ்யை நமஸ்யாம் |
யஸ்யாமாவிர் பவதி   ஜகதாம் ஜீவநீ ஸஹ்ய கந்யா ||
புண்யைர் யஸ்யா: க்ஷிதிஜல ஜுஷம் பூருஷம் ரங்க பூஷாம் |
பஷ்யந்தந்யோ வரவரமுநி: பாலயந் வர்த்ததே ந: || 9

எல்லா உலகத்தின் வாழ்வுக்கும் காரணமான காவிரி நதி எந்த திசையில் பெருகுகிறதோ அந்தத் தெற்குத் திசையை நோக்கி, எந்தத் திசையின் புண்யங்களால் பூமியை அடைந்த ரங்க நகருக்கு ஆபரணமான புருஷோத்தமனை ஸேவித்துக்கொண்டு தம்மைக் க்ருதார்த்தனாக நினைத்து மணவாள மாமுனிகள் நம்மைக் காத்துக் கொண்டுள்ளாரோ அந்த திசையை தினமும் வணங்குங்கள்.

आशापाशैरवधिविधुरैः स्वैरमाकृष्यमाणं |
दूराद्दूरं पुनरपि न मे दूयतामेव चेतः ||
अन्तःकृत्वा वरवरमुने नित्यमङ्घ्रिद्वयं ते |
धाराकारस्मरणसुभगं निश्चली भूय तत्र || १० ||

ஆசா பாசைரவதி விதுரை: ஸ்வைரமாக்ருஷ்யமாணம் |
தூராத் தூரம் புநரபி ந மே தூயதாமேவ சேத : ||
அந்த: க்ருத்வா வரவர முநே நித்யமங்ரி த்வயம் தே |
தாராகார ஸ்மரண ஸுபகம் நிஸ்சலீ பூய தத்ர || 10

முடிவில்லாத பல ஆசைகளால் தன்  இஷ்டம்போல் வெகுதூரம் இழுக்கப்பட்ட என் மனம் மறுபடி வருந்த வேண்டாம். வரவர முநியே! தினந்தோறும் உமது திருவடிகளையே நினைப்பதால் புனிதமாகி அங்கேயே ஸ்திரமாக இருக்கக் கடவது.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org