ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
இனி இரண்டு ச்லோகங்கள் சரம ச்லோக விவரணம்.
ச்லோகம் 7
மத் ப்ராப்த்யர்த்த தயா மயோக்தமகிலம் ஸந்த்யஜ்ய தர்மம் புன:
மாமேகம் மதவாப்தயே சரணமித்யார்த்தோவசாயம் குரு |
த்வாமேவம் வ்யவஸாய யுக்தமகிலம் ஞாநாதி பூர்ணோஹ்யஹம்
மத்ப்ராப்தி ப்ரதிபந்தகம் விரஹிதம் குர்யாம்சுசம் மாக்ருதா: ||
பொருள்
என்னை அடைவதற்குறுப்பாக நான் கூறின எல்லா உபாயங்களையும் விட்டு என்னை அடைய என்னையே ரக்ஷகமாக அடைவாய். மிக துக்கத்துடன் நிச்சயித்திரு. இப்படிப்பட்ட நிச்சயத்தை உடைய உன்னை, எல்லா வகையான ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான், என்னை அடைவதற்குத் தடையாக உள்ளவைகளிலிருந்து உன்னை விடுதலை அடையச் செய்வேனாக. நீ சோகிக்க வேண்டா.
ச்லோகம் 8
நிஸ்சித்ய த்வததீநதாம் மயி ஸதா கர்மாத்யுபாயான் ஹரே:
கர்த்தும் த்யக்துமபி ப்ரபத்துமநலம் ஸீதாமி து:காகுல: |
ஏதத் ஞாநமுபேயுஷோ மம புனஸ் ஸர்வாபராதக்ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோஸ்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் ஸாரதே! ||
பொருள்
என்னிடம் உள்ள கர்மம் முதலிய உபாயங்களை எப்போதும் உன் அதீநமாகவே நிச்சயித்து, எம்பெருமானே! கர்மங்களைச் செய்யவும், விடவும் அல்லது சரணாகதி செய்வதற்கும் திறமையற்றவனாக வருந்துகிறேன். மிக வருத்தத்தால் கலங்குகிறேன். இந்த அறிவை அடைந்துள்ள எனக்கு உள்ள எல்லா வகையான குற்றங்களையும் அழித்து ரக்ஷிக்கக் கடவாய் என்பதை உனது கடைசியான வார்த்தையைக் கேட்டுத் தெளிகிறேன்.
அஷ்ட ச்லோகீ ஸம்பூர்ணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
பட்டர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Pingback: ashta SlOkI – SlOkams 7 – 8 – charama SlOkam | dhivya prabandham