ப்ரமேய ஸாரம் – 3 – பலம் கொண்டு

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<< இரண்டாம் பாட்டு

மூன்றாம் பாட்டு

முகவுரை :-

உயிரின் அடிமைத் தன்மைக்கு ஏற்றவாறு உயிர்கள் இறைத் தொண்டில் ஈடுபடவேண்டுமேயல்லாமல் வேறு பயன்களில் ஈடுபடலாகாது. இவ்வாறு இருக்க இதர   பயன்களில் ஈடுபாடு இருந்தால் அடிமை என்னும் குலத்தால் என்ன உபயோகமாம்? எவ்விதப் பயனும் இல்லை என்பதாம். திருமால் உலகளந்த காலத்தில் தன்னை ஒழிந்த அனைத்து உயிர்களையும் தன்னடிக்கீழ் அளந்து கொண்டானல்லவா? உயிர்கள் அப்பொழுதே அவன் அடிக்கீழ்பட்டதால் அவனுக்கு அடிமை ஆயிற்றே. அதனால் உயிர்களுக்கு ஏதாவது பயன் ஏற்பட்டதுண்டோ? இல்லை என்றவாறு. உலகளந்த அந்நாளில் ‘அவனடியில் நாம் இருந்தோம்’ என்னும் உனைவு இல்லாததால் உயிர்கட்கு பிறவி தொடர்வதாயிற்று. அகவே இறைவனுக்கு அடிமை என்ற உணர்வும் அவ்வுணர்வுக்கு ஏற்ப இறைத் தொண்டில் ஈடுபாடும் உண்டானாலன்றோ உபயோகமாகும் மேலும் இவ்வுணர்வு இல்லாத உயிர்கள் என்னும் கருத்து இதில் கூறப்படுகிறது. தொண்டர்ந்து பிறவியில் நீடித்துக் கொண்டே வரும்.

trivikrama

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என்? கூறீர் தளம் கொண்ட
தாளிணையான் அன்றே தனையொழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே அவன்

பதவுரை:-

பலம் கொண்டு               – இறைவனிடத்தில் செல்வம் முதலிய வேறு வேறு பயன்களைப் பெற்றுக் கொண்டு
மீளாத                           – ஆன்மீக அறிவால் திருந்தாத
பாவம்                          – தீவினை
உளதாகில்                     – இருக்குமானால்
குலம் கொண்டு             – அடிமை என்னும் உறவு கொண்டு
காரியம் என் கூறீர்          – என்ன பயன் சொல்லுவீராக!
தலம் கொண்ட              – உலகமெல்லாம் அளந்து கொண்ட
தாளிணையான்              – திருவடிகளை உடையவனான
அவன்                          – அவ்வுலகளந்தான்
அன்றே                        – அளந்துகொண்ட   அக்காலத்திலேயே
யாவரையும்                  – எல்லா உயிர்களையும்
ஆளுடையவன்             – தனக்கு அடிமையாகக் கொண்டான்
அன்றே                        – அல்லவா?

விளக்கவுரை:-
———————-
பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்:- செல்வம் முதலிய கவர்ச்சி மிக்க பொருள்களில் ஏதேனும் ஒன்றைத் தனக்கு விருப்பமாக அடைந்து, ஞானிகள் அதன் குற்றங்களை எடுத்துக் கூறி அதை வேண்டாம் என்றாலும் அப்பொருள் பற்றில் நின்றும் திருந்தி வராமல் அதிலேயே பற்றி நிற்கும் தீவினை என்று பொருள். அல்லது இருக்குமானால் பாபம் என்பதற்கு நினைவு என்னும் பொருள் கொண்டு வேறு பயன்களை ஆசைப்படுவதிலிருந்து மீள முடியாத நினவு இருக்குமானால் என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே பாபம் என்பதற்கு தீவினை என்னும் நினவு என்றும் இரு பொருளில் கருத்துக் கொள்ளப்படுகிறது.

ஆன்மீகம் பற்றி ஆசார்யார்களிடம் உபதேசங்கள் கேட்டாலும் கீதை முதலிய தத்துவ நூல்களைக் கற்றாலும் , அவற்றில் தவிர்க்கப்படவேண்டும் என்று சொன்னவற்றைத் தவிர்க்காமல் மீண்டும் மீண்டும் அவற்றையே செய்து வரும் கொடிய பாபம்  உடைய மனிதகளுக்கு.

குலம் கொண்டு காரியம் என்? கூறீர்?;-  பகவானைத் தவிர வேறு வேறு பயன்களில் ஆசை இருந்தால் பகவான் இவ்வான்மாவை பிறவித் துன்பத்திலிருந்து மீட்க மாட்டான். பிற தொடர்புகளை அறவே நீக்க மாட்டன். தன திருவடிகளில் சேர்த்துக் கொள்ளவும் மாட்டான். அதனால் அடிமையாகிற அவ்வுரவினால் என்ன பயன் உண்டு? சொல்வீர்களாக என்று உலகோர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

ஒரு ஆன்மாவுக்கு ‘இறைவனுக்கு நாம் அடிமை என்னும் மெய்யறிவு உண்டானால் அதுவே போதாதா? இவ்வறிவு உடையவனை இறைவன், ‘ இவன் நம்முடையவன் ‘ என்று தழுவிக் கொள்ளவும் இவன் காரியங்களிச் செய்வதற்கு போதுமானதாக ஆகாதா? என்னும் வினாக்களுக்கு மேற் தொடரால் பதில் கூறப்படுகிறது.

தலம் கொண்ட தாளினையான்: என்று இத்தொடரில் ஓங்கி உலகளந்த வரலாறு குறிக்கப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்ய அவாவுற்று வேள்வி இயற்றினான். இம்மூவுலகமும் இந்திரன் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதால் இந்திரன் திருமாலிடம் அடைக்கலம் புகுந்தான். தன்னிடம் அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மாவலி வேள்வி செய்யும்  வேள்விச் சாலையில் குறளுருவாய்ச் சென்று மாவலியிடம்” மூவடி மண் தா” என்று இரந்தான்.   மாவலியும் கேட்டபடி மூவடி மண்ணைத் தானமாக வழங்கினான். மூவடி மண்ணையும் அளந்து கொள்வதற்காக திருமால் திடீரென்று வளர்ந்தான். அவனது ஒரு பாதம் ப்போமி முழவதையும் பரப்பி நின்றது. இரண்டே அடியாள் பதினான்கு உலகங்களையும் அளந்தான். மூன்றாம் அடிக்கு இடமில்லாததால் மாவலி தலையில் கால் வைத்து அழுத்தி அவனைப் பாதாளத்தில் தள்ளினான். இந்திரனுக்கு அவனாட்ச்சிக்குரிய மூன்று உலகங்களையும் அவன் அழும்படி கொடுத்தான் என்பது வரலாறு. தலங்கொண்ட தாளினையான் என்பதற்கு ‘மண்ணும் விண்ணும் அளந்து கொண்ட த்ரிவடிகளையுடயவன்’ என்று பொருள்.

அன்றே:- அவ்வாறு அளந்து கொண்ட அந்நாளில் தனை ஒழிந்த யாவரையும் ஆளுடையான் அன்றே அவன். தன்னை தவிர அனைத்து உயிர்களையும் தனக்கு அடிமையாகக் கொண்டவன் அன்றோ அவன் என்று பொருள். இதனால் உலகளந்த காலத்தில் எல்லோர்களுடைய தலைகளிலும் தன திருவடிகளை வைத்து அப்பொழுதே எல்லா உயிர்களையும் தனக்கு அடிமையாக்கிக்கொண்டு அதனால் மகிழ்ந்து நின்றவன் அவன் இதை உவந்த உள்ளத்தனாய் உலகமழந்து என்றார் திருப்பாணாழ்வார். தனக்கு அடிமைகளான ஆன்மாக்கள் அனைவரையும் தன பாதத்தால் தீண்டி மகிழ்ந்தவன். மேலும் உறங்குகின்ற குழந்தையை தழுவி மகிழும் தாயைப் போல களித்தவன். இப்படி உயிர்களிடத்தில் அன்பு வைத்தவன். “ஏன் இவ்வுயிர்களைப் பிறவிக்கடல் துன்பங்களிலிருந்து எடாமலிருக்கின்றான்என்று எண்ணிப் பார்த்தால் அதற்குக் காரணம் ‘இதுதான்’ என்று புலனாகிறது. அதாவது இவ்வுயிர்கள் அவனையும் அவன் செய்த உதவிகளையும் மறந்து இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதையும் அவ்வாழ்விற்கு வேண்டிய பொருள்களை ஆசைப்பட்டு அவனைக் காட்டிலும் அப்பொருள்களில் பற்றி நிற்பதையும் பார்த்து அப்பற்றுதல்கள்   அறவே   நீங்கும் அன் நன்நாளை எதிர்பார்திருத்தாலன்றோ இன்னமும் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆகையால் இவ்வுயிர்கள் இறைவனுக்கு அடிமையாய் இருந்தாலும் ‘தன்னைத் தவிர வெரி பயன்களில் ஆசை அறாத பொழுது இவ்வுயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து இறைவன் எடுக்க மாட்டன் என்று உணர்த்தப் பட்டதாயிற்று. இதரப் பொருள்களில் ஆசையை நிரம்ப வைத்துக் கொண்டு ‘அடியேன்’ என்று தன்னைச் சொல்லிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்பதாம்.

இங்குக் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் திரட்டி திருவள்ளுவர் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றும் , ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு ‘ என்று இவ்விரண்டு திருக்குரல்களாலும் உரைத்தார். இடஹி நம்மாழ்வார் ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்’ என்று கூறினார்.

ஆக, கீழ்ச் சொன்ன ‘அவ்வானவர்’ ‘குலம் ஒன்று ” பலம் கொண்டு’ என்னும் இம்மொன்று பாடல்களாலும் ‘ஓம்’ என்னும் ப்ரணவத்தின் கருத்துச் சொல்லப்பட்டது. இனிமேல் நாலு பாடல்களால் ‘நாம’ என்னும் சொல்லின் கருத்தை உரைக்கிறார். ‘நாம’ என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது. அதற்கு இறைவனைத்தவிர வேறு (வழி) கதியில்லை என்று பொருள். இக்கருத்தை விளக்குவதற்குத் துணையாகும் கருத்துக்கள் இங்கு எடுத்துக் கூறப்படுகிறது.

சேர்தல் – இடைவிடாது நினைத்தால்.உலகியலை நினையாது இறைவனடியையே நினைப்போர்க்கு பிறவியருதலும் அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஹ்தறாமையுமாகிற   இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன என்றும் பரிமேலழகர் உரையில் உணரலாகும். ‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்னும் குரலில் காணலாம். (சேர்தல்-இடையறாது நினைத்தல்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “ப்ரமேய ஸாரம் – 3 – பலம் கொண்டு”

Leave a Comment