சது: ச்லோகீ – ச்லோகங்கள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

சது: ச்லோகீ

<< தனியன்

vishnu-lakshmi

ச்லோகம் 1

காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்

கேட்க

பொழிப்புரை
ஹே பகவதி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை; பிரம்மா, சிவன் முதலிய தேவர் குழு அவரவர் மனைவிகளுடன் உனக்கு வேலையாட்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது?

ச்லோகம் 2

யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்

கேட்க

பொழிப்புரை
எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத் தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ அப்படிப்பட்ட உன்னை தாசன் என்றும் சரணாகதன் என்றும் சொல்லி நான் கொஞ்சமேனும் பயமற்றவனாகத் துதிக்கிறேன். உலகத்துக்கு ஒரே நாயகியாகவும் ஒரே நாதனான நாராயணனுக்கு மனைவியுமானவளே! பொறுமையுள்ளவளே! உன் தயையை அறிந்து நான் இப்படிக் கூறுகிறேன்.

ச்லோகம் 3

ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்

கேட்க

பொழிப்புரை
இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது. அது கிடைக்காததால் முன்பு அழிந்தது இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒருபோதும் எதிர் பார்க்கப் படுவதில்லையன்றோ.

ச்லோகம் 4

சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி
ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தே

கேட்க

பொழிப்புரை
பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இதனால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “சது: ச்லோகீ – ச்லோகங்கள்”

Leave a Comment