Daily Archives: December 17, 2015

upadhEsa raththina mAlai – 15

Published by:

srI:
srImathE satakOpAya nama:
srImathE rAmAnujAya nama:
srImath varavaramunayE nama:

Full Series

<< Previous (ErAr vaikAsi)

pAsuram – 15

uNdO vaikAsi visAkaththukku oppu oru nAL
uNdO satakOparkku oppu oruvar – uNdO
thiruvAimozhikku oppu then kurugaikku uNdO
oru pAr thanil okkum Ur                                                                       15

Listen

Word by word meaning

vaikAsi visAkaththukku – For the visAka star day of vaikAsi month
uNdO – is there
oru nAL – any day that is
oppu – equal;
satakOparkku – for nammAzhvAr
uNdO – is there
oruvar – any one who is
oppu – equal;
thiruvAimozhikku – for thiruvAimozhi prabandham
uNdO – is there a prabandham
pAr thanil – in the earth that is
oppu – equal;
then kurugaikku – for AzhvAr thirunagari that is on the south
uNdO – is there
oru Ur – any place that is
okkum – equal;

No is the answer.

vyAkyAnam

He is involving in the abundant experience of talking to himself about the place, time, and the prabandhams divined by the AzhvAr whom he mentioned in previous pAsuram.

uNdo vaikAsi visAkaththukku oppu oru nAL – Is there any day that can equal this divine vaikAsi day that is born to do mangaLAsAsanam, for sarvEsvaran and all his abodes to grow well? The day of birth of emperumAn as said in ‘nee pirandha thiru nannAL [periyAzhvAr thirumozhi 23.8] (the auspicious good day You were born) – can even that equal the day of incarnation of this AzhvAr who is said as ‘krushNa thrushNA thathvam [srI rangarAja sthavam, pUrva sathakam – 6] (AzhvAr could be said to be in the form of love for krishNan)?

There, in krishNan’s birth, only some people here and there like akrUrar, mAlAkArar, kUni, chinthayanthI, or a few such only were reformed to be amicable. Here AzhvAr‘s birth is such that, as emperumAn said starting with ‘thAnaham dhvishatha: krUrAn’ to ‘kshipAmi’ [bhagavath gIthA 16-19] (~ I punish those who disrespect my devotees by pushing them into asura births), even those whom He would reject, it is the day of incarnation of AzhvAr who would create interest in such people toward emperumAn such that they too cannot bear the separation from Him – as AzhvAr said in ‘nin kaN vEtkai ezhuvippanE [thiruviruththam – 16]’ (~will motivate to be thirsty for You).  { that is the greatness here compared to emperumAn‘s incarnation}.

uNdO satakOparkku oppu oruvar – Starting from his incarnation, he was a remover of bad/ignorant minds of such people; having true depth of knowledge – such is the glory of knowledge of AzhvAr; even if inquired in all the worlds do we hear anyone equaling him?

What with food, water, etc., what with ripe fruits, etc., what with ‘appAl mudhalAi ninRa aLappariya Aramudhu [thirunedunthANtakam – 14]’ {here it may mean food that is like nectar} – the samsAris are involved in sustaining, growing, and enjoying with these things; starting from such kind of people, can they ever be compared to this AzhvAr who is of the type ‘nAttArOdu iyal(vu) ozhindhu nAraNanai naNNi [thiruvAimozhi 10.6.2]’ (~ connections with the people of the (material) place got removed, and got nArAyaNan), and ‘ellAm kaNNan [thiruvAimozhi 6.6.1]’ (~ food, water, everything is krishNan for me), and such AzhvAr cannot be equaled by even the nithyasUris.

Nammazhwar-2

‘nainAr’ (as referred by the commentator) (azhagiya maNavALap perumAL nAyanAr) divined too – other than nithyasUris (that is, like rishis) “pala sAdhana dhEvathAntharangaLil ivargaL ninaivu pEchchilE thOnRumpadi irukkum [AchArya hrudhayam – 62]” (compared to maharishis whose speeches would indicate that the goal is to reach emperumAn, or that karma/gyAna/bhakthi are the means, or that it is acceptable to pray to the demi-gods, AzhvAr’s speech is that bhagavath kainkaryam is the goal, that emperumAn is the means, and that even forgetfully we should not pray to demi-gods; so they cannot be compared to AzhvAr).

Or, for nithyasUris, that place is like ‘theLi visumbu thirunAdu [thiruvAimozhi 9.7.5] (~ radiant, in knowledge) such that it is amicable for them to enjoy emperumAn all the time. Here, this place is like ‘viNNuLAr perumARkkadimai seyvAraiyum seRum aym pulan ivai [thiruvAimozhi 7.1.6]’ (~ the five senses would trouble even those who are subservient to emperumAn). Such ‘iruL tharumA gyAlam [upadhEsa raththina mAlai – 72] (this world that feeds ignorance), would not make it easy to enjoy emperumAn.

In such a birth, there is only AzhvAr who spends time only in enjoying emperumAn. Isn’t that why it is ‘sudhurlabha:’ (bhagavath gIthA) {Or oruvar uNdAgil aththanai kAN – upadhEsa raththina mAlai – 55}.

– As said in “mARuLadhO immaNNin misai [thiruvAimozhi 6.4.9]” (Is there anyone matching me in this world?), and

– “iniyAvar nigar agal vAnaththE [thiruvAimozhi 4.5.8]” (who would equal me even in that other big world (~when I have been given opportunity to sing thiruvAimozhi on emperumAn)).

So AzhvAr himself divined by his words that there is no equal in both this world and the other world, isn’t it?

When asked: So in this way, if we say satakOpan, he is meant as above everyone, this mahAthmA incarnated and is worshiped by the whole world, and if there is no equal to him or to his grand star day,

then is there anything equal to his words that is thiruvAimozhi and for the place of his incarnation?

Even that is also not there, says maNavALa mAmunigaL, as:

uNdO thiruvAimozhikku oppu then kurugaikku uNdO oru pAr thannil okkum Ur.

uNdO thiruvAimozhikku oppu – AzhvAr who is ‘thirumAlAl aruLap peRRa [thiruvAimozhi 8.8.11)’ (given unblemished knowledge (mayarvaRa mathi nalam (thiruvAimozhi 1.1.1)) by emperumAn), and ‘thirumAlavan kavi [thiruviruththam – 48]’ – his experience of emperumAn did not contain itself like said in ‘suzhi pattOdum [thiruvAimozhi 8.10.5] (like a flood with a vortex), like said in ‘avAvil anthAdhigaLAl ivai Ayiramum [thiruvAimozhi 10.10.11]’ (the thousand pAsurams in anthAdhi style, that came out of devotion) the thiruvAimozhi got caught in AzhvAr’s bhakthi and it incarnated.

Can the words that came out of dharma, strength, knowledge, happiness, etc., match the words of thiruvAimozhi that is out of devotion and is essence of nAlAyira dhivya prabandham?

Other words are like the sound of sea waves (no meaning/use). So, as said in ‘aruL koNdu Ayiram in thamizh pAdinAn [kaNNinuNchiruththAmbu – 8] (~ he sang one thousand sweet pAsurams in beautiful thamizh due to his mercy), this thiruvAimozhi that incarnated due to his kindness/mercy would not be having any equals.

then kurugaikku uNdO oru pAr thanil okkum Ur – Like how there is none equal to AzhvAr in this world or the other world, this place (of his incarnation) also does not have any place that equals it.

Tree in AzhvAr thirunagarI (kurugai) where nammAzhvAr stayed

Even if searched in eighteen worlds, is there any place that equals kurugai vaLampathi? Even if it is there (srIvaikuNtam), it is more like saying together ‘thirunAdu vAzhi then kurugai vAzhi [iyal sARRu]’ (long live srIvaikuNtam long live then kurugai). Shall have to say ‘thirunagarikku oppAriyuNdO’.

It is too divined as ‘ARRil thuRaiyil Uril uLLa vaishamyam vAchAmagOcharam [AchArya hrudhayam 80]’ (~ can’t be said in words the difference between this place and the others).

then kurugai – This place is a jewel for the (difficult?) samsAram, as said in ‘nallAr palar vAzhum kurugUr [thiruvAimozhi 8.2.11]’, and as ‘sayap pugazhAr palar vAzhum thadam kurugUr [thiruvAimozhi 3.1.11]’ – such is the grand kurugUr that is srI nagarI (AzhvAr thirunagarI) (wealthy city), isn’t it?

Also, it is meant as this place is in the southern direction.

Thus maNavALa mAmunigAL divined about this divine star day, about AzhvAr who incarnated, about thiruvAimozhi, and thirunagarI, after considering their unequaled greatness.

This visAka star day is of significance in ikshvAku dynasty as said by noble people, and this AzhvAr also got the same star day of incarnation and greatness as said in ‘rushImjushAmahE [parAnkusa ashtakam – 3] (we prostrate before satakOpa muni).

– – – –

English Translation: raghurAm srInivAsa dhAsan

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

 

upadhESa raththina mAlai – Audio

Published by:

ப்ரமேய ஸாரம் – 10 – இறையும் உயிரும்

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<< 9ம் பாட்டு

பத்தாம் பாட்டு

azhwar-emperumanarநம்மாழ்வார்எம்பெருமானார்

முகவுரை:

ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. “திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க.

இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து இவ்வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி மிகத் தெளிவாகக் கூறி முடிக்கப்படுகிறது.

இறையும் உயிரும் இருவர்க்குமுள்ள
முறையும் முறையே மொழியும்- மறையும்
உணர்த்து வாரில்லாத நாளொன்றல்ல ஆன
உணர்த்துவார் உண்டானபோது

பதவுரை:

இறையும் – “அ”காரப் பொருளான இறைவனையும்

உயிரும் – “ம”காரப் பொருளான ஆன்மாவையும்

இருவர்க்குமுள்ள முறையும் – இவ்விருவர்க்கும் உண்டான (நான்காம் வேற்றுமை உறுப்பால் சொல்லப்பட்ட) இறைமை அடிமை என்னும் உறவு முறையையும்

முறையே மொழியும் – இவ்வுறவையே சிறப்பாக உணர்த்தும்

மறையும் – வேதாசாரமான திருமந்திரத்தையும்

உணர்த்துவார் இல்லா நாள் – உள்ளது உள்ளபடி அறிவிப்பார் இல்லாத காலத்தில்

ஒன்றல்ல – மேலே சொன்ன அனைத்தும் ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை (இருந்தும் இல்லாதது போல் இருப்பான்)

உணர்த்துவார் – மேற்கூறியபடி திருமந்திரத்தின் பொருளை

உண்டானபோது – ஆசார்யன் அறிவிக்கும் போது

ஆன – ஆகின்ற (இருப்பனவாக)

விளக்கவுரை:

இந்நூல் முதல் பாடலில் சொல்லப்பட்ட “அ’ காரத்தின் பொருளான நாராயணான இறைவனும் (உயிரும்) மேற்படி பாடலில் “மவ்வானவர்க்கு” என்று சொல்லப்பட்டதன் பொருளான ஆன்மாவும் “இருவருக்குமுள்ள முறையும்” இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உண்டான உறவு முறையும்.  இது “அ” காரத்தினுடைய நாலாவது வேற்றுமை உருபின் பொருளாகும். அதாவது, “அகாரத்திற்கு மகாரம்” “தகப்பனுக்கு மகன்” என்பது போல் சொல்லப்படுகிறது. இறைவனுக்கு ஆன்மா என்று உறவு முறையைத் தெரிவிக்கிறது.

“நான்காவதற்கு உருபாகும் கு வ்வே
கோடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது பொருளே”

என்ற நன்னூல் இலக்கண நூலில் நான்காம் வேற்றுமை உருபான “கு” உருபினுடைய பொருளை விவரிக்கையில் ‘முறை” என்று உறவு முறையைச் சொல்லி இருக்கிறது. ஆகவே அவ்விலக்கணப்படி “அவ்வானவர்க்கு மவ்வானவர்” என்ற தொடரில் உறவு முறை காட்டப்படுகிறது.

முறையே மொழியும் மறையும்: கீழ்ச் சொன்ன உறவு முறையையே முறைப்படி சொல்லுகின்ற வேத முடிவான திருமந்திரம் என்று பொருள். ஞான சாரம் முப்பத்தொன்றாம் (31ம் பாடலில்) “வேதம் ஒருநான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்” என்ற இடத்தில் வேதத்தின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டது என்று இத்திருமந்திரம் வேதத்தில் விழுமியதாகச் சொல்லப்பட்டது. இத்தகைய திருமந்திரமும்.

உணர்த்துவார் இல்லாநாள் ஒன்றல்ல: மேற்கூறிய இறைவனும் ஆன்மாவும் இருவருக்குமுள்ள முறைகளும் என்றைக்கும் இருந்து கொண்டிருந்தாலும் இவற்றை விளக்கி எடுத்துச் சொல்லும்பொழுது தான் இவையெல்லாம் இருக்கின்றனவாக ஆகின்றன. இவற்றை எடுத்துச் சொல்லாத பொது இருந்தும் இல்லாதன போல் ஆகின்றன.

ஆன உணர்த்துவார் உண்டான போது: “ஆன” என்பது வினைச் சொல். இவையெல்லாம் அறிவிப்பார் உண்டான காலத்தில் இருக்கின்றனவாக ஆகின்றன. இவற்றை உணர்த்துவார் ஆர் எனில்? அவரே ஆசார்யர் ஆவார். அதுதான் இந்நூல் முதற் பாடலில் “உவ்வானவர்   உரைத்தார்” என்று கூறப்பட்டது. இதுவே ஆசார்யன் செய்யும் பேருதவியாகும். இதையே “அறியாதன அறிவித்த அத்தா” என்றார் நம்மாழ்வார். “பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார் பெரியாழ்வார். இவ்வாறு ஆசார்ய வைபவம் பேசப்பட்டது.

==பிரமேயசாரம் நிறைவடைந்தது-===

===பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்====

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின்

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<<< 8ம் பாட்டு

9 ம் பாட்டு

emperumAnAr-embAr உடையவர்எம்பார்

முகவுரை:   கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி ‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும் திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன.  இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் ,அதற்குத் தகுந்தபடி அவரடி பணிந்து அவருக்குப் பணிவிடைகள் முதலியன செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரம் கூறியபடி நடந்து கொள்ள வேணும் என்றும் சொல்லப்படுகிறது.     அவ்வாறில்லாமல் ஆசார்யன் நம்மைப்போல் “அவரும் ஒரு மனிதரே” என்று நினைத்து பழிப்பவர்களுக்கும் ஆச்சர்யனின் பெருமையறிந்து பெருமைக்குத்தக்கபடி பணிந்து பணிவிடைகள் செய்பவர்களுக்கும் உண்டான வேறுபாடுகளும் எடுத்துரைக்கப் படுகின்றன. இதனால் ஆச்சர்யனின் சிறப்புக் கூறப்படுவதாயிற்று.

தத்தம் இறையின் வடிவு என்று தாளிணையை
வைத்தவரை வணங்கியராப் – பித்தராய்
நிந்திப்பார்க்குண்டு ஏறா நீணிரயம் நீதியால்
வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்

பதவுரை:

தாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின

அவரை – அவ்வாச்சர்யனை

தத்தம் இறையின்  –  “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய

வடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)

வணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத

பித்தராய் – உண்மை அறியாதவராய்

நிந்திப்பார்க்கு  – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு

ஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்

உண்டு – கிடைக்கும்

நீதியால் – முறை தவறாமல்

வந்திப்பார்க்கு – பணிந்திருப்பார்க்கு

இழியாவான்   – மறு பிறவி இல்லாத

வான் உண்டு  – வைகுந்த நாடு கிடைக்கும்

விளக்கவுரை:

தத்தம் இறையின் வடிவு என்று: “தம் தம்” என்கிற சொல் ஒன்று வல் ஒற்றாகத் திரிந்து “தத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது. அவரவர்களுடைய கடவுளின் உருவம் என்று பொருள். அதாவது நாராயணனாகிற கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாயிருத்தலால் அவரவர் தாம் தாம் வணங்கும் பொழுது “நம்முடைய கடவுள்” என்று உறவு சொல்லிப் பற்றலாம். இதனால் நாராயணனாகிற கடவுள் அனைவருக்கும் தலைவனாவான் என்றும் அவனுடைய தோற்றம் மனிதத் தோற்றத்தில் குருவாக வருகிறான் என்றும், அறிவொளியைக் கொடுக்கும் கடவுளே என்றும் சாஸ்திரங்கள் ஆசார்யனைப்  பகவானுடைய தோற்றமாகக் கூறியுள்ளன என்றும் அறிய வேண்டும். ஆகவே அவரவர்கள் தம் தம் ஆசார்யனைக் கடவுளின் தோற்றமாகக் கருத வேண்டும் என்பதாம்.

தாளிணையை வைத்தவவரை: “வில்லார் மணி கொழிக்கும்” என்ற ஞான ஸாரம் 38வது பாடலில் “மருளாம் இருளோட மத்தகத்துத் தந்தாள் அருளாலே வைத்த அவர்” என்று கூறிய வண்ணம் தங்களுடைய அறியாமையாகிற இருள் அகலும்படி தங்கள் முடியில் பாதங்கள் இரண்டையும் அருள் கூர்ந்து அருள் செய்த ஆசார்யன் என்று பொருள்.

வணங்கியிராப் பித்தராய்: அவருடைய அடி பணிந்து அவரைப் பின் சென்று இராத அறிவிலிகளாய் அதாவது அடி பணியாதது மட்டுமில்லாமல் அவரை மனிதனாக எண்ணி இருப்பதுவே பழிப்பகும். ஆச்சர்யனுடைய திருவடிகள் அறியாமையை நீக்கும் என்பதற்கு உதாரணம். “சாயைபோல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே”  “எம்பாரைச் சிலர் இப்பதத்துக்குப் பொருளென்?” என்று கேட்க, நான் உடையவர் ஸ்ரீ பாதத்திலே இது கேட்டிலேன். ஆகிலும் நீங்கள் கேட்ட  அர்த்தம் போராதென்ன வொண்ணாது”. இப்போதே கேட்டு உங்களுக்குச் சொல்ல வொண்ணாதபடி உடையவரும் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்தேற எழுந்தருளினார். ஆகிலும் உங்களுக்கு இப்போதே சொன்னேனாக வேணும் என்று உடையவர் திருவடி நிலைகளை எடுத்துத் தம் திருமுடியிலே வைத்துக் கொண்டு இப்போது உடையவர் எனக்கருளிச் செய்தார், கேட்கலாகாதோ’ என்று ‘பாடவல்லார்-சாயை போல தாமுமணுக்கர்களே ‘ என்றருளிச் செய்தார்.

குருவை மனிதனாக எண்ணிப் பழிப்பவர்களுக்குக் கிடைக்கும் பயன் கூறப்படுகிறது மேல் தொடரால்.

ஏறாநீணிரயம் உண்டு:  (ஏறா – கரை ஏற முடியாத, நீள் -நீண்டதான, நிரயம்- நரகம் உண்டு-கிடைக்கும்) அதாவது குருவை வார்த்தைகளாலே குறைவாகப் பேசுவதல்லாமல் மனிதனாக நினைப்பதுவே அவனை நிந்திப்பதாகும். இப்படி மனிதனாக நினைப்பார்க்கு ஒரு போதும் கரையேற முடியாத ஆழமான நரகம் என்பதாம்.  எமன் தண்டனைக்குட்பட்ட நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டது. இது என்று குறிக்கப்படுகிறது. எமன் தண்டனையான நரகத்திற்கு விடுதலை “நரகமே சுவர்க்கமாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இங்கு அவ்வாறில்லாமல் விடியா வெந்நரகம் என்று சொன்னபடி தொடர்ச்சியாய் இருந்துவரும்.

இதனால் ஆசார்யனை மனிதனாக என்னும் பெரும்பாவிகள் எக்காலத்திலும் உய்ய மாட்டார்கள். உய்வதற்குத் தகுதியையும் பெறமாட்டார்கள். இப்பிறவிப் பெருங்கடலில் மாறி மாறிச் சுழன்று கொண்டே வருவார்கள் என்பதாம். இதைத் திருவள்ளுவரும் “உறங்குவது போலும் சாக்காடு-உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று உறங்குவதும் விழித்து எழுவதும் போறதாக்கும் பிறப்பிறப்பு என்றார்.

நீதியால் வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்: கீழ்க்கூறிய வண்ணம் “தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்க இந்நிலத்தே தோன்றுதலால்”என்று கூறியபடி ஆசார்யனைக் கடவுள் தோற்றமாக நம்பிக்கை வைத்து சாஸ்திர முறைப்படி பணிந்து பின் செல்வர்களுக்கு மீண்டும் பிறப்பில்லாத வைகுந்தப்பதவி கிடைக்கும் என்பதாம்.

(நீதி) ஆசார்யனை வழிபடும் முறை. வந்தித்தல்-வணங்குதல். (இழியாவன்)-மீண்டு பிறப்பில்லாத வைகுந்தம் மீளா நெறி என்பர்.  இதனால் ஆசார்யனுடைய சிறப்புக்களை நன்றாக அறிந்து அவன் திருவடிகளில் அவனைத் தவிர வேறு ஒன்றுமறியாதவராய் “தேவு மற்று அறியேன்” என்று மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இருந்தது போல குருவைப் பணிந்து வாழும் பெரியோர்கள் (நித்தியர்கள்) வாழுமிடமான திருநாட்டிற்குச் சென்று அங்குள்ளவரோடு கலந்து அவர்களைப் போல இறையின்பம் துய்க்கப் பெறுவார்கள் என்பதாம். இதனால் குருவைத் தெய்வமாக மதித்து குருபக்தியுடையவர்களான அடியார்கள் மீண்டும் பிறப்பில்லாத வீடு பேற்றை அடைவார்கள் என்பது கருத்து.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ப்ரமேய ஸாரம் – 8 – வித்தம் இழவு

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<<< 7ம் பாட்டு

8ம் பாட்டு

paramapadhanathan

முகவுரை:

இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை “அவ்வானவர் ” குலம் “ஒன்று” “பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை “கருமத்தால்” “வழியாவது” “உள்ளபடி உணரில்” ‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக் கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப்பாடலால் கூறுகிறார்.

“நாராயணாய” என்னும் இச் சொல்லுக்குப் பொருளை “நாராயணனுக்கு அடிமை செய்து வாழ்வதுவே பெருவாழ்வு” என்று சொல்லப்படுகிறது. நாராயணனான பரம்பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்று அவ்வின்பம் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பதுவும் அவனுக்குப் பணி செய்து வாழ்வதுவே லட்சியம் என்றிருப்பதுவும், அவனுக்குச் செய்யும் பணியின் முறைகளை விவரிப்பதுவும், நாராயணாய என்னும் பதத்தில் சொல்லப்படும் பொருட்களாகும். இக்கருத்தை இப்பாடல் சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறது.

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய்வீகாலம்
தத்தமவையே தலையளிக்கும் – அத்தை விடீர்
இச்சியானிச்சியாதேத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானால்

பதவுரை:

வித்தம் – செல்வத்தினுடைய

இழவு  – அழிவும்

இன்பம் – சுகமும்

துன்பம் – துக்கமும்

நோய் – நோய்களும்

வீகாலம் – மரண காலமும்

தத்தம் அவையே – தத்தமது வாழ்வினைப்படியே

தலையளிக்கும் – பயன் தரும்

அத்தை – அதனால் அவற்றைப் பற்றிய சிந்தனையை

விடீர் – விட்டுவிடுவீராக

இச்சியான் – இறை இன்பம் தவிர வேறு எதையும் விரும்பாதவன்

இச்சியாது – வேறு பயனைக் கருதாமல்

ஏத்த – அவனைத் துதி செய்ய

எழில் வானத்து – அழகிய வீட்டுலுகத்தில்

உச்சியான் – மேல்நிலத்தில் இருக்கும் இறைவனுக்கு

உச்சியான் ஆம் – தலையால் தாங்கத் தகுந்த பெருமை உடையவன் ஆவான்

விளக்கவுரை:

“நாராயணாய” என்னும் பதத்திற்குக் கருத்துக் கூறுகையில் “இளைய பெருமாளைப் போல இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை” என்றும்” அதை நித்யமாகப் பிரார்த்தித்தே பெற வேணும்” என்றும் “உனக்கே  நாம் ஆட்செய்யவேணும்” என்னும்படி வேணும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கைங்கர்யம் என்னும் லட்சியத்தை இராமாயணத்தில் இளைய பெருமாள் கடைப் பிடித்துக் காட்டினார். இராமனை உடன் பிறந்த வகைக் கருதாமல் தெய்வமாக எண்ணிப் பணிவிடைகள் செய்தான். இதைக் கம்பன் வாக்கில் காண்போம்.

எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெங் கொடுந்துயர் தீர்கிலேன் “என்பது இலக்குவன் மொழி.

(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – பள்ளிப்படலம்-58)

அனைத்து உறவும் ராமனே என்றும் அவனுக்குப் பணிவிடை செய்வதே தன கடமை என்ற குறிக்கோளுடன் இலக்குவன் இராமன் பின் சென்றான்.

“ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போக உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீதை- என்றே
ஏகாய்; இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் ‘ என்றும்

(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம் -146)

“பின்னும் பகர்வாள்,”மகனே!இவன் பின் செல்: தம்பி
என்னும்படி அன்று.அடியாரின் இவள செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி” என்றனள் வார் விழி சோர நின்றாள்”

(கம்பராமாயணம் -அயோத்திய காண்டம் -நகர் நீங்கு படலம்- 147)

என்றும் அவன் தாய் சுமித்திரை கூறினால் என்பது கம்பனின் வாக்கு.

இதில் ‘அடியாரினின் ஏவல் செய்தி” என்று அறிவுறுத்தியது குறிப்பிடித்தக்கது.

அவ்வறிவுரையின்படி அனைத்து உறவுகளையும் துறந்து விட்டு இராமன் பின் சென்று பதினான்கு ஆண்டுகளும் பற்றும் வாழ்நாள் முழுவதும் அடிமையே செய்து வாழ்ந்தான். இதுவே ஒரு ஆன்மா அடைய வேண்டிய லட்சியமாகும். இவ்வடிமையை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும். வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழான திருப்பாவையில் முடிந்த பொருளாக “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று” என்று கூறப்பட்டுள்ளது.’உனக்குப் பனி செய்திருக்கும் தவமுடையேன் “என்றார் பெரியாழ்வார். “ஒழிவில் காலமெல்லாம் உடனை மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்றார் நம்மாழ்வார். “ஆளும் பணியும் அடியேனை கொண்டான்” “உனக்காகத் தொண்டுபட்ட நல்லேனை” என்று கூறினார் திருமங்கை ஆழ்வார்.

ஆகவே ஞானிகளான பெரியார்கள் இவ்வாறு இறைத்தொண்டையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டார்கள். இவர்களுக்கு இங்கு வாழ்ந்துவரும் நாட்களில் செல்வத்தால் வரும் லாபமும் அதை இழத்தலால் வரும் துன்பங்களும் அவர்களுக்கு இல்லை.”வேண்டேன் மனை வாழ்க்கையை” என்றும் “கூரை சோறு இவை வேண்டுவதில்லை” என்றும் “நீள் செல்வம் வேண்டாதான்” என்றும் ஆழ்வார்களால் துறக்கப்பட்டவைகள். எல்லாம் கண்ணன் என்பது அவர்கள் லட்சியம். அவர்களது லட்சியமான இறைத்தொண்டில் ஈடுபட்டுள்ள மனதை பணம் முதலியன வேதனைக்கு உள்ளாக்கும் அன்றோ. அவற்றால் மனது கலங்காமல் இருந்தால் அன்றோ அடிமையைச் செவ்விதமாகச் செய்ய முடியும்.இந்நிலையில் லட்சியவாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேலே கூறுகிறார்.

வித்தம் – பணம் அதாவது தங்கம், வெள்ளி முதலியன
இழவு – அவற்றின் அழிவு .அதாவது நிலையில்லாததால்

அவற்றிற்கு வரும் விநாசம்.

திருவள்ளுவரும்

“நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை” என்று இகழ்ந்து பேசினார்.

இன்பம் – இன்பம் தரும் துன்பம் தரும் பொருட்களால் கிடைக்கும் சுகம்
துன்பம் – துன்பம் தரும் பொருட்களின் சேர்க்கையால் வருகின்ற துக்கம்
நோய் – உடலைப் பற்றி வருகின்ற நோய்கள்
வீகாலம் – சரீரத்தினுடைய (உடல்) முடிவு காலம். (வீதல் – முடிதல்) இவை எல்லாவற்றையும்
தத்தம் அவையே – அதற்குக் காரணமான ஊழ்வினைகளே
தலை அளிக்கும் – பக்குவ காலத்தில் பலன் கொடுக்கும். பிறக்கும் பொழுது உடன் வந்ததான வினைகளின் பயன்களைத் துய்க்காமல் எவரும் தப்ப முடியாது அல்லவா. திருவள்ளுவர் ஊழ் என்னும் ஓர் அதிகாரத்தில் கூறினார்.

ஆகூழாழ் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழாற் தோன்றும் மடி”

இதில் செல்வம் கிடைப்பதற்குக் காரணமான ஊழ்வினையால் முயற்சி உண்டாகும். அச்செல்வம் அழியும்போது அதற்குக் காரணமான ஊழ்வினையால் அழிவு உண்டாகும் என்றும்

“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ்   உற்றக் கடை”

இதில் ஒருவன் எல்லா அறிவையும் பெற்றிருந்தாலும் கைப்பொருளை பறி கொடுக்கும்போது அதற்குக் காரணமான ஊழ்வினை அவனை அந்த நேரத்தில் அறியாதவனாக்கி விடும். ஒருவன் அவ்வளவு அறியாதவனாக இருந்தாலும் பொருள் சேரும் காலம் வரும்போது அவனுடைய அறியாமையை அகற்றிப் பொருள் சேர்வதற்குக் காரணமாகிற அறிவை விரிவு படுத்தும் என்றும், இவ்வாறே கல்வியறிவு பெருகுவதற்கும் சுருங்குவதற்கும் ஊழ்வினையே காரணம் என்றும், செல்வத்திற்கான ஊழ்வினையும் கல்விக்கான ஊழ்வினையும் வெவ்வேறாகும் என்றும், ஊழ்வினை நல்லது தீயதாகவும், தீயது நல்லதாகவும் மாறும் என்றும், இவ்வாறு ஊழ்வினையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆகவே வினைப்பயனால் வருவனவான நன்மை தீமைகளைப் பற்றி அறிவாளிகள் கவலை கொள்ளக் கூடாது

அத்தை விடீர்:

அவற்றில் மனம் வைக்க வேண்டாம் என்று மனதைத் தேற்றுவிக்கிறார். ஊழ்வினைக்குக் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் எவ்வாறு இறைத்தொண்டை செய்வார்கள் என்பதைப் பற்றி மேல் தொடர் கூறுகிறது.

இச்சியான்:

செல்வம் முதலிய வேறு பயன்களில் ஒன்றையும் விரும்பாதவன் (இத்தகையவனே இறைத் தொண்டுக்குத் தகுதியுடையவனாவான். “அடக்கரும் புலன்கள் இய்ந்தடக்கி ஆசையாமவை, தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை” என்று இக்கருத்தைத் திருமழிசை ஆழ்வார் எடுத்துரைத்தார்.

இச்சியாதேத்த:   இறைவனைத் துதிப்பவர் அதற்குப் பயனாக வீடு பேற்றையோ,இறைத்தொண்டு முதலியவற்றையோ ஒன்றையும் பயனாகக் கருதாமல் துதிப்பதையே பயனாகக் கருதித் துதிக்க வேண்டும் . “பாவின் இன்னிசை பாடித் திரிவன்” என்று கூறியது போல துதிப்பவர்க்குப் பயன்  வேறொன்றின்மையால் தீவினையேன், வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாளெல்லாம் , கரந்துருவில் அம்மானை அஞ்ஞான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தாது அயர்த்து “(திருவந்தாதி) இவற்றால் இறைவனை ஏத்துதல் கூறப்பட்டன. இங்கு “ஏத்துதல்” என்று வாய்க்குச் சொன்ன பணிபோன்று மனத்தாலும், காயத்தாலும் (உடல்) செய்யும் பணிகட்கும்  ஏற்பப் பொருள் கொள்க. ஆக மனம் முதலிய முக்கரணங்களாலும் அடிமை செய்ய வேண்டும் என்பதாம்.

எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்: வைகுண்ட மாநகர் என்று சொல்லப்படுகின்ற அழகிய திருநாட்டில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய தலையால் தாங்கப் படுபவன் ஆவான். எழில் வானம் என்பது பரமபதத்தை. அது விண்தலை என்று சொல்லப்படும். அங்கிருக்கும் வைகுந்தநாதன் “விண்மீது இருப்பாய்” என்று அழைக்கப்படுவான். அத்தகையவன் இங்கு எழில் வானத்து உச்சியான் என்று சொல்லப்படுகிறான். எழில் வானம் என்பது வேதாந்தத்தில் “பரமாகாசம்” என்ற சொல்லால் சொல்லப்படும் மோட்ச பூமி. அதில் உயர்ந்த நிலம். அவ்வானத்து உச்சி.அதிலிருப்பவன் உச்சியான். எழில் வானத்து உச்சியான் அவ்வைகுண்டநாதன். அவனுடைய தலையால் தாங்கப்படுபவன் தொண்டன். அத்தொண்டனை “உச்சியானுக்கு உச்சியான்” என்று இங்கு நான்காம் வேற்றுமைத் தொகையில் “உச்சியான் உச்சியான்” என்று கூறப்பட்டது.

இறைத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்கள் செல்வத்தின் லாப நஷ்டங்கள்,இன்ப துன்பங்கள், நோய்,மரணம் இவற்றை அந்தந்த வினைப் பயனால் வருகின்றன என்று எண்ணிஅவற்றைப் பற்றி சிறிதும் நினையாமல் அவற்றை  உதறி விடுவார்கள். அதனால் அவர்கள் மனம் தூயதாய் இருக்கும். அத்தூய மனத்தில் வேறு பயனை எதையும் விரும்ப மாட்டார்கள்வேறு பயனை எதையும் விரும்பாமல் துதிப்பதையே பயனாகக் கொண்டு துதிப்பார்கள். இத்தகைய அடியார்கள் அழகிய பரமபதத்திற்குச் சென்று அங்கு பரமபதநாதனுடைய தலையால் தாங்கப்படுவர் ஆவார் என்பது கருத்து. இதனால் தொண்டு செய்பவர் ஊழ்வினையால் வரும் நல்லன தீயனவற்றில் மனம் வைக்காமலும் தொண்டையே பயனாகக் கருதித் தொண்டு செய்ய வேணும் என்றும் சொல்லப்படுகிறது.

துதிப்பதற்காகவே இருக்க வேண்டும், வேறு பயன் இருக்கலாகாது என்பது தான் பொருள் . இறைவனைத் துதிப்பது, இறைத் தொண்டாகும். மனம் மொழி மெய் என்னும் முக்காரணங்களாலும் செய்யும் தொண்டுகளில் துதித்தல் வாய்மொழித் தொண்டாகும். வாய்க்கு இதுவே பயனாக இருக்க வேண்டும். செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் திருக்குறள் தொடரில் “வாய்ச்சொல்” என்பதற்கு “வாய்” என வேண்டாது கூறினார். “தீயசொல் பயிலாமை என்பது அறிவித்தற்கு “என்று பொருள் கூறியது காண்க. தற்கு உதாரணமாக நாலாயிர திவ்யப்ப்ரபந்தப் பாடல்கள் காணலாம்.

பாட்டு – பாட்டு எண்

  1. வாய் அவனையல்லது வாழ்த்தாது – 209
  2. நாக்கு நின்னையல்லால் அறியாது – 433
  3. எத்துகின்றோம் நாத்தழும்ப – 1863
  4. நாத்தழும்ப நாராயணா என்றழைத்து – 561
  5. இரவு நண்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ – 2954
  6. பேசுமின் கூசமின்றி – 3681
  7. வாயினால் பாடி – 478

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ப்ரமேய ஸாரம் – 7 – இல்லை இருவருக்கும்

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

6ம் பாட்டு

7ம் பாட்டு

yasoda_and_krishna

முகவுரை:

சென்ற பாடலில் இறைவனை “கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும் உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும் இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது. கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில் “மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான். சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச்சுவையாகக் கூறினான். அது போல இன்கம் இறைவனுக்குக் குறை ஒன்றுமில்லை என்றும், உயிர்களுக்கு கொடுப்பதற்கு சிறிதும் ஒ ன்றும் இல்லை என்றும் கூறப்பட்டதாக இருவருடைய இல்லாமையும் தெளிவாக்கப்பட்டது. அதன் தொடர்பாக இருவருக்குமுள்ள இல்லாமையை எண்ணி இறைவனை வெல்வார் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது இவ்வுண்மையை உணர்ந்தவன் ஞானி எனப்படுவான்.” இத்தகைய ஞானியே எனக்கு உயிர்” என்று கீதையில் கூறுகிறான் பகவான். மேலும் அவனே எனக்கு அன்புக்கு இடமானவன் என்றும் ஞானியிடம் நான் தோற்பவன் என்றும் கூறியுள்ளான். இப்படி இறைவனால் கூறப்படும் ஞானி எங்கேனும் இருக்கிறார்களோ ? என்று ஞானிகளின் பெருமை பேசப்படுகிறது. இப்பாடலில் ஸ்ரீ ஆண்டாளும் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்ற தொடரில் கூடுவாரிடம் தோற்பவன் கோவிந்தன் என்றும் கருத்துக் கூறினாள். அத்தகைய ஞானிகள் கிடைப்பார்களோ ? என்பது இப்பாடலின் கருத்து.

இல்லை இருவருக்கும் என்று இறையை வென்றிருப்பார்
இல்லை அஃதொருவருக்கு எட்டுமதோ – இல்லை
குறையுடைமை தானென்று  கூறினாரில்லா
மறையுடைய  மார்க்கத்தே காண்

பதவுரை:

இருவருக்கும் – இறைவனுக்கும், ஆன்மாக்களுக்கும்

இல்லை என்று – ஓர் குறைவின்மை உண்டென்று எண்ணுதலால்

இறையை – இறைவனை

வென்றிருப்பார் இல்லை – வெற்றி கொள்வாரில்லை

அஃது – அவ்வண்ணம்

ஒருவருக்கு – ஒரு மனிதனுக்கு

எட்டுமதோ – கிடைக்குமா?

குறைதான் – கொள்ளுவதாகிற குறை தான்

இல்லை – இறைவனுக்கில்லை

என்று – இவ்வாறு

கூறினாரில்லா – யாராலும் சொல்லப்படாத

மறையுடைய மார்க்கத்தே – வேத வழியில் நின்று

காண் – கண்டு கொள்வீராக

 

விளக்கவுரை:

இல்லை இருவருக்கும் என்று: இறைவனுக்கும் உயிர்களுக்கும் ஓர் இன்மை உண்டு. அதாவது இறைவனுக்குக் குறையொன்றுமில்லை. அவன் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன். உயிர்களுக்குப் பொருள் ஒன்றும் இல்லை. “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்” “பொருள் அல்லாத” என்பவற்றால் இருவருக்கும் உள்ள இன்மை புலனாகும். இதுவே இருவருடையவும் உண்மை நிலையாகும். இவ்வுண்மை நிலையை இடையறாது எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும். இவ்வாறு எண்ணியிருப்பார்க்கு இறைவன் தாழ நிற்பான். இதற்கு உதாரணமாக ஆழ்வாரின் பாடல்களில் காணலாம். வளவேழுலகு, மின்னிடை மடவார், கண்கள் சிவந்த, ஓராயிரமாய், அறுக்கும் வினையாயின முதலிய திருவாய்மொழிகளில் பகவான் ஆழ்வார் முன் வந்து அவருக்குத் தாழ நின்றி சேவை கொடுப்பதால் கண்டு கொள்ளலாம். இவ்விருவரின் உண்மை நிலையும் அறியாதர்க்கு எம்பெருமானைப் பணிய வைப்பது இயலாததாகும். அதை அடுத்த  தொடரால்  கூறுகிறார்

இறையை வென்றிருப்பார்   இல்லை இறைவன் யாருக்கும் கட்டுப்படாதாவன். சுதந்திரன் – தன்னுடைய விருப்பபடி நடப்பவன். அத்தகையவனை  ஒருவன் தனக்கு வயப்ப்படும்படி செய்து கொள்ள முடியாது. மேற்கூறிய இருவரின் இலக்கணங்களையும் எண்ணியிருப்பார்க்கு அவன்  மிகவும் எளியனாவான். பத்துடை அடியவர்க்கு எளியனல்லவா? அவன். எளிவரும் இயல்வனாயிற்றே அத்தகைய பக்தர்களைக் காண முடியுமா?

அஃது ஒருவருக்கு எட்டுமதோ: அதாவது இறைவனுடைய தலைமையையும் தன்னுடைய அடிமையையும் இடையறாமல் நினைக்கும் தன்மை ஒருவரால் செய்ய முடியுமா? நான் எனது என்று செருக்கி திரியும் உலகில் அது அவ்வளவு எளிதல்லவே! மிகவும் அரிதாயிற்றே! ஆகவே தான் அவனைப் பணியச் செய்வது இயலாது என்று கூறப்பட்டது. இடையறாமல் நினைக்க வேண்டிய அவ்விருவருடைய இயல்பு தான் எது என்றால் அதற்குப் பதில் உரைக்கிறது மேல் தொடர்.

இல்லை குறையுடமை தான் என்று: குறை தான் இல்லை உடைமை தான் இல்லை என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. தான் என்ற இடைச் சொல் எகாரப் பொருளில் வந்தது. குறையே இல்லை. உடைமையே இல்லை என்று விரித்துப் பொருள் கொள்க. அதாவது இறைவனுக்கு உயிர்களிடம் ஒன்று பெற்றுக் கொள்ளத் தக்க குறையில்லை. உயிர்களுக்கு அவனுக்குக் கொடுக்கத் தக்க பொருள் ஏதும் இல்லை. இதுவே இருவருக்குமுள்ள இயல்பு. இந்த அறிவு யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. காரணம் மேல் தொடரில் கூறப்படுகிறது.

கூறினார் இல்லா மறையுடைய மார்க்கத்தே காண்: வேதத்தின் உட்பொருளாய் மறைந்து கிடக்கிறது ஆகவேதான் அரிதாய் உள்ளது. வேதம் எவராலும் ஆக்கப்பட்டதில்லை.அது அநாதியானது. “ஐயம்  திரிபு” முதலிய குற்றமற்றது. ஆகவே நம்பிக்கை மிக்கது. அதைக் கற்று உணர்ந்த மேலோர்களால் உண்மை அறியத் தக்கது. அதைக் கற்று மேல் கூறிய உண்மையைத் தெளிய வேண்டியுள்ளது. தன முன் நிற்பார் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போல ஆசிரியர் காண்-(காண்பாயாக) என்று கூறுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு “காண்” என்று உரையாசிரியர் மணவாளமாமுனிகள் அத்தகையவர்கள் காணக் கிடைப்பார்களா என்று ஏங்குகிறார். ஒருவர் மேல் வைத்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் சொல்வதாகக் கொள்ளவேணும். இதனால் கூறப்பட்டதாவது.இறைவன் நிறைவானவன். (பரிபூர்ணன்) உயிர் அவனுடைய உடைமை. அதனால் அதற்கு உடைமையானது ஒன்றுமில்லை. இதுவே மறையில் சொல்லப்பட்ட இறை உயிர்களைப் பற்றிய இரகசியமாகும். வேதத்தைக் கற்று உணர்ந்தவர்களுக்கே தெளிவாதன்றி ஏனையோர்க்கு அறிய முடியாத ஒன்று. இவ்விருவரது உண்மையையும் அறியும் ஞானிகளுக்கு இறைவன் மிகவும் எளியவனாவான். இவ்வுண்மையை அறியாத  உலகத்தார்க்கு இறைவனைத் தமக்கு எளிமையாக்கும் பெருமை கிடைக்குமா? கிடைக்காது. இதனால் ஆத்மா பரமாத்மா சிந்தனை இறைவனைப் பணிய வைக்கும் என்றும் அச்சிந்தனை இல்லாதார்க்கு இறைவன் எளியனாகும் தன்மை கிடைக்காது என்பதும் கூறப்பட்டது. இதைப் “பத்துடையடியவர்க்கு எளியவன்”, “பிறர்க்கு அரிய வித்தகன் ” என்றார் நம்மாழ்வார். இதனால் சாஸ்திரப்படி நடப்பவர்களுக்கு பகவான் எளியவனாயிருப்பன் என்றும் அப்படி இல்லாதவர்களுக்குன்மிக அரியனாய் நெடுந்தொலைவில் இருப்பான் ” என்றும் அறியக் கிடைக்கிறது. கீதையில் ஞானியைத் தனக்கு உயிர் என்றான் கண்ணன். அவர்களுக்கு எளியனாய் இருந்தான் “காப்பிட வாராய்” “பூச்சூட வாராய்” “அம்மம் உண்ண வாராய்” என்றால் ஓடி வருவான். “விட்டு சித்தர் தங்கள் தேவர்” என்றாள் ஆண்டாள். இதனால் “ஞானியருக்கு ஒப்போரில்லை இவ்வுலகு தன்னில்” என்றார் மணவாள மாமுனிகள்.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ப்ரமேய ஸாரம் – 6 – உள்ளபடி

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<<< ஐந்தாம் பாட்டு

6ம் பாட்டு

bharatha-vasishta

உள்ளபடி உணரில் ஒன்று நமக்கு உண்டென்று
விள்ள விரகிலதாய் விட்டதே – கொள்ளக்
குறையேதும் இல்லார்க்குக் கூறுவது  என்சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம்

பதவுரை:

உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி

உணரில் – தெரிந்து கொண்டால்

ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று

நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு

உண்டென்று – இருக்கிறது என்று

விள்ள – வாயினால் சொல்லகூட

விரகிலதாய் – வழியில்லையாகிவிட்டது அல்லவா

விட்டதே – (சக்தி இல்லையாகி விட்டது அல்லவா)

கொள்ள – நம்மிடத்தில் பெற்றுக் கொள்ளவேண்டுவன

குறை – குறைபாடுகள்

ஏதும் இல்லார்க்கு – சிறிதும் இல்லாத இறைவனுக்கு

இறையேதும் இல்லாத – சிறிதளவுவேனும் தனக்கென்று ஒன்றுமில்லாத

யாம் – அடிமைத் தன்மையையே வடிவாக உள்ள நாம்

கூறுவது என் – நம்மை காப்பதற்குச் சொல்லும் வார்த்தை என்ன   இருக்கிறது

சொல்லீர் – சொல்லுவீர்களாக

விளக்கவுரை:

உள்ளபடி உணரில்: உயிரின் உண்மை நிலையை உணர்ந்தால்

“எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்ற திருக்குறளில் ஆன்மாவின் உண்மை நிலையை உணர்வதே அறிவாகும் என்று கூறப்படுள்ளது. ஒருவன் ஒரு பொருளை உலகில் காணும் பொழுது மேல் தோற்றமான இயங்குதிணை, உயர்திணை ஆகிய இவற்றில் மனிதன், விலங்கு, செடிகொடி என்னும் இவற்றாலே காண்கிறான். அனைத்துப் பொருளுக்கும் உள்ளிருக்கும் உயிரைப் பார்பதில்லை.  உயிரைப் பார்க்கின்ற அறிவொளி வெளி தோற்றத்தைப் பார்பதில்லை. உதாரணமாக “கோச் சேரமான் யானைக் கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை” என்னும் சிறப்பு பெயரும் கூடி ஒரு பொருளைக் காட்டுகிறது. இவை எல்லாம் நிலை இல்லாததால் கற்பனயாகக் கருதப்படும். இக்கற்பனைக்கு அப்பாற்ப்பட்டதாய் இருப்பது உயிர். இத்தகைய உயிரின் உண்மை நிலையை சாஸ்திரங்கள் துணை கொண்டே அறிய வேண்டியுள்ளது. உயிர் அறிவே ஆன்மா என்றும் அறிவு உடையது ஆன்மா என்றும் நூல்கள் கூறும். இதனால் ஆன்மாவுக்கு ‘நான் இதைச் செய்கிறவன் என்னும் செருக்குத் தன்னடையே தோன்றுகிறது. இதைப்பற்றி கூர்ந்து ஆராய்ந்து பார்க்கையில் ஆன்மாவைப் பற்றி ஒரு உண்மை தெளிவாகிறது. நுணுகி அறிவார்க்குப் புலனாவது ஒன்று. அதாவது உயிர்களெல்லாம் தன இச்சையில் செயல்பட முடியாத உடல்களாகவும் இறைவன் அனைத்து உயிர்களையும் இயக்குகின்ற உயிராகவும் சொல்லப்படுவதால் இறைவனுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையே உயிரின் உண்மை இயல்பாகும். ஆகவே நான் எனது என்று வாய் விடுவதற்கு தகுதி அற்றதாகிறது. இவ்வாறு உயிர்களின் உண்மை நிலையை அறியும் போது தன்னைத்தான் காத்துக்கொள்ள, தான் ஒன்று செய்வதற்கான வாய்ப்பே உயிர்கட்கு இல்லை என்று புலனாகிறது. அதுவே உயிரைப் பற்றி உள்ளது உள்ளபடி அறியும் அறிவாகும். ‘இயல்பாகவும் நோன்பிற்க ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து’ என்ற குறளில் மேற்கூறிய கருத்தைத் திருவள்ளுவரும் கூறியுள்ளார். இதன் கருத்து இறைவனைத் தவிர தனக்கு ஒரு பற்றப்படும் பொருளும் இல்லை என்றிருப்பதுவே ஞானியர்க்கு பொருள் ஒன்று உண்டு என்று எண்ணினால் அது மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகும் என்பதாம். இங்கு ஒன்று இன்மை இயல்பாகும், உடைமை மயலாகும் என்று கூறியது காண்க. இதனால் ஒன்று உடையோம் என்றெண்ணுவது மடமையாகும் என்பதால்.

ஒன்று நமக்கு உண்டென்று விள்ள விரகிலதாய் விட்டதே: “வீடு பேற்றுக்குக் கைமுதலாக ஒன்று நம்மிடம் இருக்கிறது” என்று சொல்வதற்கு வாய் திறக்க வழியில்லை என்று பொருள். “விள்ள” என்பதற்குச் சொல்ல என்று பொருள் கொள்ளப்பட்டது.  இவ்வாறன்றி “விள்ள -விலகி நிற்க” என்று பொருள் கொண்டு . இறைவனுடைய (கருணை) அருள் நிழலில் பதுங்கிக் கிடப்பது அல்லாமல் அதைவிட்டுப் பிரிந்து தனித்து நிற்கும் ஆற்றல் உண்டு என்று எண்ணி விலகி நிற்பதற்கு வழியற்றுவிட்டது என்றும் சொல்லலாம். இக்கருத்து உயிர்கள் எல்லாம் இறைவனுடைய உடலாகவும் இறைவன் அவற்றிற்கு உயிராகவும் சொல்லப்படுவதால் கூறப்பட்டது. உயிரின் துணையின்றி உடல் இயங்க முடியாதல்லவா? உயிர்க்கு உணர்வு என்னும் பண்பு இருப்பதால் செயலற்று உயிரில்  பொருள்  போல எப்படி இருக்க முடியும்? அவ்வுணர்வுக்கு ஏற்ப இறைவனே நம்மைக் காக்க வேண்டும்என்று ஒரு வார்த்தையேனும் சொல்ல வேண்டுமா?

அதுவும் இல்லாமல் எப்படி முடியும்? என்ற வினாக்கள் இங்கு எழுகின்றன. அவற்றிற்கும் பதில் சொல்கிறது. கொள்ளக் குறையேதும் இல்லார்க்கு என்ற இத்தொடர். இறைவன் உயிர்களைக் காக்கும் பொழுது உயிர்களிடத்தில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காப்பாற்றும் குறை அவனிடம் இல்லை. ஒன்றை ஏற்றுக் கொண்டு அதற்காகக் காப்பவன் என்றால் அவனுடைய பெருமைக்கு இழுக்காகும். அதனால் அவன் எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். மேலும் நம்முடைய நிலையைப் பார்த்தால் ஒன்றும் இல்லாதவராய் இருக்கிறோம்.

இறையேதும்:இல்லாதயாம்:உயிரும் உயிரைச் சார்ந்த உடல் முதலிய பொருள்களும் இறைவனுடைய உடைமைப் பொருள்களை இருக்கின்றன. தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததாய்த் தனக்கென்று ஒன்று சிறிதும் இல்லாததாய் இருக்கின்றன. ஆகவே அவன் ஒரு பொருளையும் கொள்ள மாட்டான். இவனுக்கு ஒன்றும் இல்லாததா? இவன் கொடுக்க மாட்டான். இதை விளக்குவதற்கு இங்கு ஓர் உதாரணம் காட்டப்படுகிறது.

இறைவனை வணங்கச் சென்ற ஓர் அடியவர் இறைவன் முன் சென்று இறைவனே ! உனக்கு எப்பொருளை நான் தருவேன்? ஏன் எனில் நானே உன்னுடைய     அடிமை. பொருள் எல்லாம் உன்னுடைய உடைமை. எனக்கென்று எப்பொருள் இருக்கிறது? ஆகவே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. ஆயினும் நெடுங்காலமாக என்னுடைய வினைகள் எனக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றை வேண்டுமானால் கொடுக்கலாம் என்று சொல்லி வணங்கியதாகக் கூறப்படுவதை இங்கு சொல்லலாம். மேலும் இராமாயணத்தில் பரதனுக்கும் வசிட்ட முனிவருக்கும் நடந்த உரையாடலில் இக்கருத்து மேலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இராமன் கானகம் சென்று விட்டான். தந்தை தசரதன் வானகம் எய்திவிட்டான்.

ஆகவே பரதா நீதான் அரசாள வேண்டும் என்றார் வசிட்டர். இதைக்கேட்ட பரதன் செவிகளைக் கைகளால் புதைத்துக் கொண்டு பின்வருமாறு பேசினான். இராமன் கானகம் சென்று விட்டான். என்றால் அவனுடைய உடைமைப் பொருளான அரசாட்சியை நான் ஏற்பது தகும்? ஒருவனுடைய உடைமையை மற்றொருவன் கவர்வது கள்ளத்தனமாகுமன்றோ? “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்றன்றோ நீதி நூல்கள் கூறுகின்றன என்றான். ஆனாலும் வசிட்டர் விடவில்லை. தற்பொழுது இராமன் இல்லாததால் அவனுடைய உடைமையான அரசை அவன் வரும் வரை ஏற்கலாமே என்றார். அதற்கு பரதன் “உடையவன் தான் உடைமைப் பொருளைக் கொல்லவேணுமேயொழிய ஒரு உடைமை மற்றொரு உடைமையை ஏற்க நியாயமில்லை. நான் இராமனுடைய உடைமையாதளால் அரசாகிற மற்றொரு உடைமையை ஏற்கத் தகுந்தவனில்லை” என்றார். அப்பொழுது வசிட்டர் விடவில்லை. அரசாகிற ராமனுடைய உடைமை அறிவற்றது. பரதனாகிற நீ அறிவுடையவன். ஆகவே அறிவற்ற அரசாகிற உடைமையை அறிவுடைய  நீ ஏற்றுகொள்ளலாம் அல்லவா? ஒருவனுக்கு அணிகலன்களும் அவற்றை இட்டுவைக்கும் உடைமைகளுள் அணிகலன்களாகிற உடைமையை பெட்டியாகிற உடைமைப் பொருள் பாதுகாக்கவில்லையா? அது போல அரசு இராமனுடையதாக இருந்தாலும் நீயும் இராமனுடைய உடைமையாக இருந்தாலும் அரசை நகைப் பெட்டிபோல் ஏற்றுக்கொள்ளலாமே என்றார். அது கேட்ட பரதன் நீர் சொன்ன உதாரணத்தில் இரண்டும் அறிவில்லாதவை. உடையவன் அணிய வேண்டிய உடைமைப் பொருளை நாம் அடக்கிக் கொண்டிருக்கிறோமே என்னும் அறிவில்லாததால் அணிகலன்களைப் பெட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. எனக்கு அறிவு இருப்பதால் இராமனுடைய உடைமையான அரசை நான் ஏற்க இயலாது. யானும் இவ்வரசும் இராமனுடைய உடைமைகளே. அரசைக் காட்டிலும் வேறுபட்ட நிலையில் எனக்கு அறிவிருப்பது நான் இராமனுடைய உடைமை என்பதை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அதற்கேற்ப இருப்பதுவே எனக்கு சிறப்பாகும். இந்த எண்ணம் அரசுக்கு இல்லாததால் அது எனக்கு வேறுபட்டதாயிற்று .இருப்பினும் நானும் அரசும் இராமனுடைய உடைமைகளே என்று கூறி மறுத்து விட்டான். இதனால் உயிர்கள் உணர்வு உடையனவாயிருந்தாலும் “நான் இறைவனுடைய உடைமை” என்பதை அறிந்து அடிமைத் தொழில் செய்வதற்கே உரியனாய், யான் என்றோ, எனது என்றோ சொல்வதற்குத் தகுதியுடையதில்லை என்றவாறு. இக்கருத்துக்களை இங்கே உணர வேண்டும். இவற்றை எல்லாம் உள்ளடக்கி இறைவன் நிறைவுடயவன். ஆகவே யாரிடமும் எதையும் ஏற்க வேண்டாதவனாகிறான். உயிர்களுக்கு “உடைமை என்ற ஒன்றும் சிறிதும் இல்லாததால் அவனுக்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லாதவனாகிறான். இறைவன் கொள்ளக் குறையேதுமில்லாதவன். உயிர்கள் சிறிதளவேனும் ஒன்றும் உடைமை இல்லாதவர்கள். ஆகவே அவன் கொள்ள மாட்டான். இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற இவ்வுண்மைகளை விளக்கித் தம் அருகில் இருப்பாரை நோக்கி இக்கருத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார் ஆசிரியர். இங்கு “நாம்” என்கிற தன்மைப் பன்மை முன்னிலைப் பொருளையும் சேர்த்துக் கொண்டு நாம் எல்லோரும் என்று அனைத்து உயிர்களையும் சுட்டிச் சொல்கிறதாகக் கொள்ள வேண்டும். அனைத்து உயிர்களும் அவனுடைய உடைமையாதலால் மேற்சொன்னக் கருத்து அனைத்துயிர்களுக்கும் பொதுவானதாகும். இறை என்ற இடத்தில் இறை என்ற சொல் சிறிதும் என்ற பொருளில் வந்தது “இறையும் அகலகில்லேன்” என்புழிப்போல இறை என்றவிடத்தில் இழிவு சிறப்பு உம்மை தொக்கு நின்றது. இறையும் ஏதுமில்லாத என்று பொருள் கொள்க. ஆன்மாவின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் இறைவனுக்கு உடமைப் பொருளாயும்   அவன் வயப்பட்டுமிருத்தளால் தானாகச் செய்வதற்கு எதுவுமில்லை . தனக்கு ஒரு உடைமையுமில்லை. . அவன் நிறைவுடையவனாய் இருத்தலால் எதையும் கொள்ளமாட்டான். மிடியனுக்கு (தரித்திரனுக்கு) செல்வந்தனுக்குக் கொடுக்கத்தக்க பொருள் எதுவுமில்லை. செல்வந்தன் தரித்திரனிடத்தில் ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ளத் தக்கக் குறைவுடயவனில்லை .அப்படியிருக்க இவன் எதைக் கொடுப்பான்? அவன் எதைப் பெறுவான்?

ஆகவே அவனுக்கு உடைமையாய் அவன் அடிமையாய் இருக்கும் நிலையையே எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும். என்னும் பொருள் இப்பாடலில் கூறப்படுவதாகும். இதுவே “நம” எனும் சொல்லின் சாரமாகும்.

இவ்விடத்தில் கீழ்வரும் ஸ்ரீவசனபூஷன சூத்திரங்கள் நினைதற்குரியான

“பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது அல்லாதபோது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம்” என்று சொல்லி “அந்திம காலத்துக்குத் தஞ்சம் .இப்போது தஞ்சமென் என்கிற நினவு குலைகை. என்று சீயர் அருளிச் செய்வர்” என்னும் சூத்திரத்தில் ஒரு நிகழ்ச்ச்சியை எடுத்துக்காட்டி ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானவனும் அவனே என்பன் இங்கு நஞ்சீயர் சொன்னதாகக் கூறிய வார்த்தையைக் காண வேண்டும். நஞ்சீயர் என்னும் பேராசான் ஒருவர் தம்முடைய சீடர் ஒருவர் நோய்வாய்ப் பட்டிருப்பதாகக் கேள்வியுற்றுஅவரைப் பார்க்க அவரிடம் சென்றுள்ளார். அப்பொழுது அந்நோய்வாய்ப்பட்டவர் “அடியேனுக்கு இறுதிக்காலத்துக்குத்  துணையாக இருக்கும் ஒன்றைச் சொல்ல வேண்டும்” என்று கேட்க அதற்குப் பதிலாக அவர் இவ்வாறு சொல்கிறார்.

“நாம் பகவானுடைய உடைமைப் பொருளாய் இருப்பதால் உடைமைப் பொருளைப் பேணிப் பாதுகாப்பது உடையவனுக்குப் பொறுப்பாதலால் அதைப் பற்றி நாம் நினைப்பதற்கு உரிமையில்லை. இன்றைக்குத் துணையாக வேணும் கடைசி காலத்துக்குத் துணையாக வேணும் என்று என்னும் எண்ணம் அதாவது (நம்மைக் காத்துக் கொள்ளும் எண்ணம்) அகல்வதுவே நமக்கு நலமாகும்.

ஆகவே தன்னைத்தான் காத்துக்கொள்ளவேணும் என்ற எண்ணத்தை எப்பொழுது இவன் விடுகிறானோ அன்றைக்கு இவனைக் காக்கும் எண்ணத்தை இறைவன் செய்வான் என்பது இவ்வார்த்தையின் கருத்தாகும்.

ஸ்ரீ இராமபிரானை வனவாசிகளான முனிவர்கள் சந்தித்து உரையாடுகையில் தங்களைக் கருப்பையிலுள்ள சிசுக்களாகச் சொல்லிக்கொண்டனர். இதன் கருத்து கருப்பையிலுள்ள சிசுவின் அனைத்து செயல்பாடுகளும் தாயாரும் வசத்தில் உள்ளன போல் ஆன்மாவின் அனைத்து செயல்பாடுகளும் இறைவன் வசத்தில் உள்ளன என்பதைக் குறிக்கும். இவ்வாறான ஆன்மாவின் தன்வயமற்ற நிலை (இறைவன் வயப்பட்டதால்) அறியப்படுகிறது. இதை சாஸ்திரம் “பாரதந்திரீயம்” என்று கூறும். அதில் “அசித்வத்  பாரதந்திரீயம்” என்று சிறப்பித்துக் கூறும். “இதனை வைத்த இடத்திலிருந்தேனோ பாரதாழ்வானைப்போல” என்றும் “படியாய்க் கிடந்தது உன்பவளவாய் காண்பேனே”  என்னும் தொடர்களால் எடுத்துக் காட்டுவர் ஆன்றோர். மேலே சொன்ன ஒழுக்கத்தில் நிலைநிற்கும் உயிர்களை இறைவன் தானே வலிய வந்து காப்பாற்றுவான் என்பதாம். இதற்கு எடுத்துக் காடாகக் “கடற்கரையை நினைத்திருங்கள்” என்று கூறுவார்.

கடற்கரையில் “எழுபது வெள்ளம் வானரச் சேனைகளுக்கு நடுவில், இராமன் இலக்குவணன் இருவரும் இருக்க அப்பொழுது வானரங்கள் அரக்கரிடமிருந்து இராமனையும் இலக்குவணனையும் நாம் காக்க வேண்டுமென்று பேசிக்கொண்டன. இரவில் நெடுநேரமானதும் வாரங்கள் எல்லாம் உறங்கத் தொடங்கின அப்பொழுது இராமனும் இலக்குவணனும் கையும் வில்லுமாய்க்கொண்டு வானரங்களைச் சுற்றி வந்து காத்தனர்.என்பதாம். இவ்வாறான எடுத்துக்காட்டுக்களால் ஆன்மாக்களைக் காப்பது இறைவன் கடமை என்றும் ஆன்மாக்கள் அவருடைய காத்தலைத் தடுக்காமல் இருக்கவேணும் என்பதும் இங்குக் கூறப்பட்டன.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ப்ரமேய ஸாரம் – 5 – வழியாவது

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<<< நாலாம் பாட்டு

ஐந்தாம் பாட்டு

namperumal-thiruvadi

முகவுரை

திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு  வீடு பேறு அளிக்கும் பொழுது தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை. இதன் காரணம் அவன்  பேரறிவாளனாய்  மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய் நற்குணங்கள் நிறைந்தவனாய்ச் செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் . இருப்பினும் சாஸ்திரங்களில் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்றும் மற்றும் சிலவும் பகவானை அடைவதற்குச் சாதனங்களாகும் (வழியாகும்) என்று சொல்லப்பட்டுள்ளன. சாஸ்திரங்களும் உயிர்களின் அறிவைச் சோதிப்பதற்கு இறைவனை அடையும் வழிகளைப்  பலவகையாகக் காட்டி உள்ளன. பேரறிவாளனான ஒருவன் பயனில்லாத ஒன்றைச் செய்யமாட்டமையால் கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன சாதனம் போன்று தோன்றினாலும் பகவானுடைய அருளைப் பெறுவதற்கு இவை சாதனமாக ஆகமாட்டா. அதனால் இவற்றை சாதனமாக ஏற்கலாகாது. ஆகவே அறிவாளிகள் பகவானையே தஞ்சம் புகுந்து அவன் அருளாலேயே வீடு பேறு அடைகிறார்கள். அவ்வாறு அடைவதிலும் நாம் பகவானைத் தஞ்சமாக அடைந்திருக்கிறோம் என்னும் நினைவையும் அறவே விட்டுவிட்டு நம்மிடத்தில் இறையருளைப் பெறுவதற்கான ஒன்றும் இல்லை என்று தன்னுடைய வெறுமையை எண்ணி இருப்பானேயானால் அது இறைவனுடைய அருளாலே வந்ததாகும் என்பது இப்பாடலில் குறிக்கப்படும் கருத்தாகும்.

வழியாவது ஒன்று என்றால் மற்றவை முற்றும்
ஒழியா, அது ஒன்று என்றால் “ஓம்” என்று -இழியாதே
இத்தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்
அத்தலையால் வந்த அருள்

பதவுரை:

வழியாவது  – சரணாகதி என்னும் வழியானது

ஒன்று என்றால் – ஒரே வழி என்று தோன்றினால்

மற்றவை – கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன

முற்றும் – எல்லாவற்றையும்

ஒழியா – தடம் தெரியாமல் விட்டிட்டு

அது – கீழ்ச் சொன்ன சரணாகதி வழி

ஒன்று என்றால் – ஒரே வழி என்று தேறியதால்

ஓம் என்று – அதில் உடன் பட்டு

இழியாதே – கைக் கொள்ளாமல்

இத்தலையால் – நம்மால் செய்யலாகும் செயல்கள்

ஏதுமில்லை – ஒரு புண்ணியமுமில்லை .ஒரு நல்லதும் இல்லை

என்று – என்று தங்கள் வெறுமையை எண்ணி

இருந்ததுதான் – அவ்வொழுக்கத்தில் நின்றது

அத்தலையால் வந்த அருள் –  இறைவன் கொடுத்த அருளாகும்

விளக்கவுரை:

வழியாவது ஒன்று என்றால்: ‘சரணாகதி’ என்னும் வழி ஒன்றே என்று உறுதியானால்,கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி யோகம் முதலான சாதனங்களை நாலு வகையாக சாஸ்திரங்கள் சொல்லியிருந்த போதிலும்  ப்ரபத்தி யோகம் (சரணாகதி) தவிர ஏனைய சாதனங்களெல்லாம்  பலனைத் தரும் அதிகாரம் பகவான் ஒருவனுக்கே உள்ளதால் ஏனைய சாதனங்கள் நேரடியாக பலன் தராது என்பது சாஸ்திர முடிவு. ஆகவே அவற்றைச் சாதனங்களாகப் பற்றுவதில் பயனில்லை என்று தெளிவு. ஆகவே, நாலாவதாகச் சொல்லப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) ஈச்வரனோடு நேரிடையாகத் தொடர்புடையதால் இதுவே வழியாகச் சொல்லப்படுகிறது. அதனால் “வழியாவது ஒன்று” என்று கூறப்பட்டது.

மற்றவை முற்றும் ஒழியா:  இவ்வாறு முடிவான பிறகு கர்ம யோகம், ஞான யோகம் பக்தி யோகம் முதலானவற்றையும் மற்ற சாதனங்களையும் ஒட்டு மொத்தமாக விட்டுவிட வேண்டும் என்பது இதன் பொருள். மற்றவையும் என்று கூறியதால் சரணாகதி தவிர மற்ற மூன்று யோகங்களையும் என்று கொள்ள வேண்டும். “முற்றும்” என்பதற்கு முழுமையான என்று பொருள். அதாவது அவற்றை விடும்போது அவற்றின் தடமும் தெரியாமல் விட வேண்டும் என்பதாம். “ஒழியா” என்பது செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஒழித்து என்று பொருள் இது இருந்தது என்னும் வினை கொண்டு முடிந்தது. இதை மறுவலிடாதபடி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அது ஒன்று என்றால்: அது-ப்ரபத்தி-சரணாகதி. இதற்குப் பகவான் என்று பெயர். “ஒன்று’ என்பது அவன் ஒருவனே என்னும் பொருளைக் குறிக்கிறது. ஒருவனே என்று பிரிநிலை ஏகாரப் பொருளில் வந்து அவனைத் தவிர வேறு எந்த சாதனமும் சாதனமாகாது என்னும் கருத்தைச் சொல்லுகிறது. அடைக்கலம் புகும் பக்தன் ‘உன் திருவடியே தஞ்சம்” என்று சொல்லுவதும் சாதனம் ஆகமாட்டாது. அவ்வெண்ணத்தையும் கூட சாதனமாகமாட்டாது. என்பது சாஸ்திர முடிவாகும். ‘பவ சரணம்’ என்பதுவும் கழியுண்கிறது என்பது காண்க. அவனே தஞ்சம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணமும் அவனுடைய அருளுக்குத் தடையாகிறது. இவ்வாறு சரணாகதி செய்பவனிடத்திலுல்ல எதையுமே சாதனமாக ஏற்காதவன் பகவான். அவனைச் சரணாகதி என்னும் வார்த்தையால் சொல்லி ‘அது ஒன்று என்று இது அஃறிணையால் கூறப்பட்டது. ‘அது இது உது எது’ என்றார் நம்மாழ்வார். அவன் எப்படி வேண்டுமானாலும் கூறலாமல்லவா? அதனால் அது ஒன்று என்றால் பகவானாகிற ஒருவனே வழி என்று முடிவானால் என்று பொருள் காண்க.

ஓம் என்று இழியாதே: இம்முடிவுக்கு உடன்பட்டு அவனைப் பற்றுவதிலேயே முனைந்தால் அதாவது இறைவனுடைய திருவடிகளை நாம் பற்றினாலன்றோ அவன் நமக்கு அருள் செய்வான் என்று நினைத்து அவனை அடைக்கலம் புகாமல்.

இத்தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்: இவ்வருளைப் பெறுவதற்குச் சொல்லப்படும் சாதனங்கள் நம்மால் செய்யலாவது ஒன்றுமில்லை என்று தனது வெறுமையை (ஒன்றுமில்லாமையை) எண்ணியிருக்கும் அவ்விருப்புத்தான்

அத்தலையால் வந்த அருள்:  அவன் உயிர்களிடம் வைத்துள்ள அருளினால் வந்ததாகும் என்பதாம்.

சாஸ்திரங்களில் ‘வீடுபேற்றுக்கு சாதனமாக சரணாகதி என்னும் ஒரே வழி தான் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முடிவான பிறகு ஏனைய கர்ம, ஞான பக்தி யோகங்கள் எல்லாவற்றையும் தடம் தெரியாமல் விட்டு விட வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்டதால் ‘அச்சரணாகதி நெறியே நமக்குத் தஞ்சம்’ என்னும் எண்ணம் உண்டாகும். அவ்வெண்ணத்தையும் கொள்ளலாகாது என்பதாம். ஏன் எனில் ‘இறைவனாகிற ஒருவனே அருள் செய்கிறான்’ என்று கூறுகையில் ஒருவனே என்ற இடத்தில் உள்ள பிரிநிலை ஏகாரம் கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பிரித்து  நிற்கிறது.  அது போல இவனுடைய பற்றுதலையும் பற்றுதல் எண்ணத்தையும் பிரித்துக் காட்டுகிறது. ஆகவே, இறைவன் அருளுவதற்கு உயிர்களிடம் சிறிதளவு எதையும் எதிர்பார்த்து அருளுவதில்லை என்பதும் அவன் தன்னுடைய இயல்பான கருணை குணத்தால் மட்டுமே அருளிகிறான் என்பதும் உணர்த்தப்படுகிறது. ‘வெறிதே அருள் செய்வர்’ என்னும் திருவாய்மொழி பாடல் உரையில் இதை விளங்கக் காணலாம். இவ்வாறு இறைவன் தானே அருள் செய்கையில் அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையாகிறது. இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு சாதனங்களாக எதையும் செய்யாமால் வெறுமையாக இருக்கும் நிலை ஒருவனுக்கு அமைந்தால் அது இறைவன் திருவருளாலே தான் வரவேண்டுமேயல்லாது அதை நம்மால் கொள்ள முடியாது. வெறுமைக்கு இறைவன் அருள் வேண்டுமோ என்றால் கட்டாயம் வேண்டும்.  ஒருவன் செயல் எது இல்லாமல் வெறுமையாக இருப்பது மிகவும் அரியதாகும். ஒரு சிறு பொழுதுகூட செயலற்று இருக்க முடியாது. என்றும் கை, கால் முதலிய உறுப்புக்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் கீதையில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே வெறுமையாக இருத்தலே நன்றாகும். அதாவது இறைவனுடைய பற்றுதலையோ பற்றியுள்ளோம் என்னும் எண்ணத்தாலேயோ பயன் அடைவதில்லை என்பதாம். இக்கருத்தை ‘வாழும் சோம்பர்’ என்றார் தொண்டரடிப்பொடிகள். ‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றார் பெரியாழ்வார். ‘என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே’ என்றார் நம்மாழ்வார். ‘உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்’ என்றார் திருமங்கையாழ்வார். ‘நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே’ என்றார் திருமழிசைப்பிரான். ‘சிறுமானிடவர் நாம் செய்வதென்’ என்றாள் ஆண்டாள். ஆசார்யர்களில் திருக்கண்ணமங்கையாண்டான் இக்கொள்கையைக் கடை பிடித்தார்.

‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம். அவனுடைய ச்வீகாரமே ரக்ஷகம்’ என்ற முமுக்ஷுப்படி (சூத்திரம் எண் 230) தொடரிலே காணலாம். இதற்கு உதாரணம்: ஸ்ரீ இராமாயணத்தில் சீதை இராமனை அடைவதற்கு எந்த உபாயத்தையும் செய்யவில்லை. ஆனால் ஸ்ரீ ராமபிரான் சீதையை அடைவதற்கு வில்லை முறித்தல் போன்ற பல சாதனங்களையும் நடத்தியிருக்கிறான். இதனால் சீதை இருக்கும் இடம் தேடி வந்து இராமன் அவளை அடைந்திருக்கிறான். இந்த உதாரணத்தை மனதில் கொண்டால் மேலே சொன்ன கருத்துக்கள் தெளிவாகும். இது வான்மீகியின் கதைப் போக்கு.

இவ்வாறு கூறியவற்றால் சரணாகதி தத்துவம் அசேதனம் போல் எவ்வித செயல்பாடுமின்றி இருத்தல் என்று தேறுகிறது. இந்நிலை ஒருவனுக்கு வருவது இறைவனுடைய திருவருளால் தான் ஆகும் என்ற கருத்தை உரைத்துக் கூறுகிறது. இப்பாடல். தற்கு உதாரணமாக திருவாய்மொழி 6ம் பத்து 10ம் திருவாய்மொழி “உலகமுண்ட பெருவாயா” என்ற பதிகத்தில் ‘ஆவாவென்னும் ‘    பாசுர ஈட்டில் கூறப்படும் ஒரு ஐதீஹியத்தைக் காணலாம்.

நம்பிள்ளை, ஜீயரை ஒரு நாள் பஞ்சமோபாயம் என்று உண்டு என்று சொல்லுகிறார்கள். நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்றுண்டோ என்று கேட்டருள ‘நான் அறிகிலேன். இனி சதுர்த்தோபாயம் தான் பகவானேயாக இருக்க வ்யோமாதீதம் சொல்லுவாரைப் போல. ‘அவனுக்கும் அவ்வருகே ஒன்றுண்டு என்கையிறே’ அது நான் கேட்டறியேன்’ என்று அருளிச் செய்தார். இங்கு அரும்பதத்தில் “சதுர்த்தோபாயமான ஈஸ்வரனை ஒழிய வேறு உபாயமில்லை என்கைக்கு சம்வாதமாக ஐதீஹ்யம் நம்பிள்ளை இத்யாதி’ என்ற இந்த தொடர்களை ஊன்றி நோக்கவேணும்.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org