யதிராஜ விம்சதி – ச்லோகம் – 19

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 18                                                                                                                         ச்லோகம் 20

ச்லோகம் 19

श्रीमन्यतीन्द्र! तव दिव्यपदाब्जसेवां श्रीशैलनाथकरुणापरिणामदत्ताम् ।
तामन्वहं मम विवर्धय नाथ! तस्याः कामं विरुद्धमखिलञ्च निवर्तय त्वम् ॥ (19)

ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தயநாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (19)

பதவுரை:- ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே, த்வம் – தேவரீர், மே – அடியேனுக்கு, ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும் திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட, தாம் – மிகச்சிறந்த, தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை, அந்வஹம் – நாடோறும், விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும், (அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி) நாத – ஸ்வாமியான யதிராஜரே, தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு, விருத்தம் – தடையாகிய, அகிலம் – எல்லாவற்றையும், காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.

கருத்துரை:- கீழ் ‘வாசா யதீந்த்ர’ (3) என்ற ஸ்லோகத்திலும், ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்ற ஸ்லோகத்திலும் தொடங்கிய – முறையே யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்துமுடிக்கிறார். ‘ஸேவாம் வர்த்தய’ – என்றதனால் யதிராஜ ஸேவையின் வளர்ச்சியையும் , ‘விவர்த்தய’ என்றவிடத்தில் ‘வி’ என்னும் உபஸர்க்கத்தாலே யதிராஜருடைய அடியார் ஸேவையின் வளர்ச்சியையும் ப்ரார்த்தித்தாரென்றபடி. இதனால் தாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளுதலால் யதிராஜரே ப்ராப்யர் என்பதும், அக்கைங்கர்யத்துக்குத் தடையைப் போக்கி அதனைத் தந்து வளர்த்தலால் அவரே ப்ராபகர் என்றும் பெறப்பட்டதாயிற்று. திருவாய்மொழிப்பிள்ளைக்கு யதிராஜரோடு ஸம்பந்தத்தை உண்டாக்கிக் கொடுத்த உபகாரத்வமாத்ரமேயாகும். யதிராஜ கைங்கர்யத்துக்குத் தடையாவன – இஹலோக பரலோக ஸுகாநுபவமும், ஆத்மாநுபவமாகிய கைவல்யமும், யதிராஜருடைய உகப்புக்காக வல்லாமல் தன்னுகப்புக்காகச் செய்யும் பகவத்கைங்கர்யமும் முதலியனவாகும்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment