ஞான ஸாரம் – நூன் முகவுரை – அவதாரிகை

ஞான ஸாரம்

ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பெருமானாருக்குச் சீடராய் அவர் திருவடிகளில் தஞ்சம் புகுந்தவர். அனைத்து வேதம் முதலான சாஸ்திரங்களின் கருத்துக்களையெல்லாம் அவரிடம் கேட்டுத் தெளிந்தவர். அதனால் பரம்பொருளை அடைந்து நுகரும் பேரின்பம் ஆகிய இவற்றின் அடித்தள உண்மைகளை நன்கறிந்திருந்தவராய் இருந்தார். அவர் அருகிலேயே உடனிருந்து அவர் பாதங்கள் சேவித்துக்கொண்டு அவர் மனம் மகிழும்படி பணிவிடைகள் செய்து வந்தார். இவ்வாறான குரு பக்தி கொண்ட ஸ்ரீ அருளாளப் பெருமாளெம்பெருமானார் தம்முடைய மிக்க கருணையினால் தம் குருவான எம்பெருமானாரிடம் செவியுற்ற தத்துவக் கருத்துக்களை மக்கள் எல்லோரும் அறிந்து ஆன்மீக நலம் பெறவேண்டும் என்று கருதினார். அதனால் தாம் கேட்டறிந்த பரம்பொருளின் உண்மை பற்றியும் பரம்பொருளை அடைவதற்கு வழி பற்றியும், பரம்பொருளை அடைந்து நுகரும் பேரின்பம் பற்றியும் அறிய வேண்டிய மெய்யறிவின் திரண்ட கருத்துக்களை “ஞானஸாரமாக” எம்பெருமானாரின் நியமனத்தினால் பேதைக்கும் எளிதில் தெரியும் வண்ணம் தெள்ளிய தமிழ் மொழியில் வெண்பாக்களாலே ஆக்கப்பட்ட இந்நூலில் எடுத்துரைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *